Jai hanuman serial: அனுமன் அன்னை சீதா கொடுத்த முத்து மாலையை அறுத்தெறிந்தது ஏனோ?
சென்னை: உனக்கு என்ன தருவேன் அனுமன்..நீ இன்னல்களைத் தீர்ப்பவன் என்று பிரபு ஸ்ரீராமர் புலம்புகையில், அன்னை சீதா தேவி அனுமனுக்கு பரிசாக அளித்த தெய்வாம்சம் பொருந்திய முத்து மாலையை அனுமன் அறுத்தெறிந்து விடுகிறான்.
ராவணனை வதம் செய்து, அன்னை சீதையை மீட்டு ராமன் லட்சுமணன் மற்றும் அனுமன் சேனையோடு அயோத்தி வந்தாகி விட்டது.
ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகமும் செய்து முடிந்த நிலையில்தான் ராமர் அனுமனுக்கு நன்றிக் கடனாக என்ன செய்வது என்று வேதனையோடு வினவுகிறார்.

அனுமன் கண்ணீரோடு
அனுமன்....நீ இல்லாமல் எந்த ஒரு காரியமும் அரங்கேறி இருக்காது. இன்னல்களைத் தீர்ப்பவன் நீ. உனக்கு கைமாறாக என்னால் என்ன செய்ய இயலும் என்று ராமர் வேதனையோடு பேசுவதை அனுமனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் உயிருக்கும் மேலாக வணங்கும் பிரபு தனக்கு கைமாறு செய்வதா என்று கலங்குகிறான்.

தன்யனானேன் நான்
பிரபு எனக்கு ஏதாவது செய்வதாக இருந்தால் தங்களது காலடியில் எனக்கு ஒரு இடம் அருளுங்கள் பிரபு என்று கண்ணீர் விடுகிறான் அனுமன். இதை கேட்ட ஸ்ரீராமர், அனுமன் நான் தன்யனானேன்...நீ என்னுடனே இருக்கலாம் என்று வரம் அருளுகிறார். அப்போதும் அன்னை சீதா தேவிக்கு அனுமனுக்கு இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம்.

தெய்வாம்ச முத்துமாலை
அனுமன் என் திருப்திக்கு எனக்கு சுவாமி உன்னிடம் கொடுத்து அனுப்பிய தெய்வாம்சம் பொருந்திய முத்துமாலையை உனக்கு தர விரும்புறேன். அது உன்னிடம் இருப்பதுதான் முறை என்று அந்த முத்துமாலையை அனுமனிடம் சீதா தேவி தருகிறார்.

முத்துமாலை அறுந்தது
மண்டியிட்டு அதை வாங்கிய அனுமன் முத்து மாலையை அறுத்து விடுகிறான். சபையில் அனைவரும் பதற என்ன அனுமன் முத்து மாலையை அறுத்து விட்டாய் என்று அன்னை கேட்கிறார். அன்னையே இந்த முத்துமாலை என்ன அத்தனை உசத்தியா இதிலென்ன இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறேன் என்று கூறுகிறான் அனுமன்.

அனுமன் பொறுமை
அனைவரும் கோபமாக அனுமனைப் பார்க்க, இதில் என் பிரபுவின் அம்சம் எதுவும் இருக்கிறதா என்று பார்க்கிறேன் தாயே. அப்படி ஒன்றும் இது பெரிதல்ல என்றும் கூறுகிறான்.அனைவரும் கோபமாகப் பார்க்க ,என்னுள் எல்லாமுமாக பிரபு இருக்கும்போது இந்த முத்து மாலையில் ஒன்றும் இல்லையே என்று கூறுகிறான் அனுமன்.

அண்ணன் என்னுள்தானே
லட்சுமணன், அண்ணன் என்னுள்தானே இருக்கிறார்... அனுமன் இப்படி சொல்கிறாரே என்று நினைக்க.. அப்போதுதான் சிறிது தூரம் நடந்து சென்று தனது நெஞ்சை பிளந்து ஸ்ரீராமர் அன்னை சீதா தேவியை காண்பிக்கிறார். அனைவருக்கும் சிலிர்ப்பு.. கண்களில் நீர் லட்சுமணன் மட்டும் கோபமுகத்தோடு இருக்கிறார் ஏன் என்று தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications