கர்த்தர் பெயரில் கொள்ளை! ஜெபக்கூட்டத்தில் நகைகளை கேட்ட பெண்.. ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவு
சென்னை: இசையமைப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பலருக்கும் பரீட்சையமான ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் ஜெபக்கூட்டத்தில் ஒரு பெண் பேசிய வீடியோவை பகிர்ந்து அதற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதில் கர்த்தருடைய பெயரையும் வேத வசனங்களையும் கொள்ளையில் சேர்க்கிறார்கள் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வருத்தப்பட்டு இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபல இசையமைப்பாளராக மாறிய ஜேம்ஸ் வசந்தன் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பதிவு செய்து வரும் ஜேம்ஸ் வசந்தன் அரசியல், சினிமா, மதங்களை வைத்து பேசுபவர்களையும் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கூட நடிகர் விஜய் தொடங்கிய தமிழக மக்கள் வெற்றி கழகத்தின் பெயருக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அதுபோல கிறிஸ்தவ போதகரான பால் தினகரனின் மனைவி இவாஞ்சலின் பேசிய வீடியோவிற்கு அதிரடியாக கண்டனத்தை தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் மீண்டும் ஒரு சுவிசேஷ வீடியோவை குறிப்பிட்ட ஜேம்ஸ் வசந்தன் அதற்கு தன்னுடைய கருத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஜெபக்கூட்டத்தில் பங்கேற்றவர்களின் நகைகளை எல்லாம் தர சொல்லி பேசியிருக்கிறார்.
அதோடு தன்னிடம் கொடுத்த நகைகளை தேவன் ஆறே மாதத்தில் இரட்டிப்பாக்கி தருவார். நீங்கள், உங்கள் நகை தான் முக்கியம் என்று இருந்தால் கர்த்தர் உங்களை மன்னிக்க மாட்டார் என்ற ரீதியில் அவர் பேசியிருக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய facebook பக்கத்தில் இந்த அம்மா மேல வர கோபத்தை விட அவங்க பேசுவதை கேட்டு உட்கார்ந்து இருக்காங்க பாருங்க ஒரு கூட்டம் அவங்க மேல தான் அதிக கோபம் வருது.
இவங்க தான் இந்த மாதிரி ஏமாற்றுக்கார பசங்களை வளர்த்து விடுறாங்க. இந்த அம்மா இப்படி பேசுறதுக்கு காரணம் சில நட்சத்திர சுவிசேஷர்கள் தான். அவங்க அப்படி பேசினதுக்கு அப்புறம் ரொம்ப பிரபலமாகிட்டாங்க. அதனால மக்கள் இப்படி பேசுறவங்களுக்கு தான் ரொம்ப விரும்புறாங்கன்னு தெரிஞ்சு மோசடிகளை வெளிப்படையாகவே உரிமையோடு செய்ய தொடங்கிட்டாங்க.
இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்வென்றால் கர்த்தருடைய பெயரையும் வேத வசனங்களையும் இந்த கொள்ளையில் சேர்த்துக்கிறது தான். பிற நம்பிக்கையிலிருந்து உண்மையான மனமாற்றத்துடன் வருகிற பலரும் இதை நம்பி மோசம் போவது. அதைவிட வேதனை அரசியலில் தான் ஏமாற்றுகிறார்கள் என்று பார்த்தால் கிறிஸ்தவத்தில் அவர்களை மிஞ்சி விடுவார்கள் சில கள்ள போதகர்கள். இதை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தது யார் என்று நம் எல்லோருக்கும் தெரியும் என்று அந்த பதிவில் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications