ஜோதிகா கொடி பறக்குது.. சிவக்குமார் செல்போன் தட்டிவிட்டபோதே ஆரம்பிச்சது.. நம்ம பிள்ளை சூர்யா: பிரபலம்
சென்னை: தமிழ்த் திரையுலகம் போதுமான அளவு பெண்களை மையமாகக் கொண்ட படங்களைத் தயாரிக்கவில்லை என்று நடிகை ஜோதிகா சமீபத்தில் கடுமையாக சாடியிருந்தார்.. ஜோதிகாவின் இந்த கருத்து சோஷியல் மீடியாவில் விவாதமாக உருவெடுத்தது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா "தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் இல்லாமலா, ஜோதிகா நம்பர் 1 நடிகையாக இருந்தார்? அதை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஜோதிகா என்பரை நடிகையாக அடையாளம் காட்டியது தமிழ் சினிமாவா? மும்பை சினிமாவா" என்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
Vaagai Tamil யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேசும்போது, "2 ஜோதிகாவை பார்க்க முடிகிறது. சூர்யாவை திருமணம் செய்வதற்கு முன்பு, நடிகையாக அவரை பார்த்தார்கள்.. தயாரிப்பாளர்களுக்கு செலவை வைக்காமல், கெடுபிடி காட்டாதவர் என்றெல்லாம் நிறைய பாசிடிவ் விஷயங்கள் அவருக்கு அப்போது இருந்தன.

தமிழ்நாட்டு மருமகள்
மணமுடித்த பிறகு,தமிழ்நாட்டு மருமகளாக பார்க்கப்பட்டார்கள்.. தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக அதிக சிரத்தை எடுத்து கொண்டார். அப்போதெல்லாம் அவர் மீது எந்த சர்ச்சையும் வரவில்லை.. அதற்கு பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த பிறகு சர்ச்சைகள் கிளம்பின. குறிப்பாக, பள்ளிக்கூடம் கட்டிடம் குறித்து, தஞ்சை பெரிய கோவிலில் ஜோதிகா அன்று பேசியிருந்ததை சிலர் திரித்துவிட்டார்கள்.. அவர் சொன்ன கருத்து சரியான கருத்து என்றாலும், பள்ளிக்கூட விழாக்களில் பேச வேண்டியதை, கோயிலில் ஜோதிகா பேசியதுதான் சலசலப்பை அதிகமாகிவிட்டது.. ஜோதிகாவின் சென்னை, மும்பை வீடு மட்டுமே 500 கோடி ரூபாய் மதிப்பில் இருக்கும் என்று கேள்விப்பட்டேன். இப்படியொரு ஆடம்பர வாழ்க்கையை வாழக்கூடியவர்கள் ஒரு கருத்தை சொல்லும்போது, அதை எங்கே நின்று சொல்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஜோதிகாவின் தனிப்பட்ட சுதந்திரம்
ஒரு குடும்பம் என்றால் எல்லாவிதமான பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும். மும்பைக்கே ஜோதிகா சென்று செட்டில் ஆனது, அவரது தனிப்பட்ட சுதந்திரம்.. அதை நாம் விமர்சிக்க கூடாது.. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி, இன்னொரு மாநிலத்தில் குடியேறும்போது, சூர்யா மீதான இங்குள்ளவர்களின் பார்வை வேறுபடும். ஏனெனில் வெறும் நடிகராக மட்டுமே சூர்யாவை நம்முடைய மக்கள் பார்ப்பதில்லை.. நம்ம வீட்டு பிள்ளையாகவே பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், ஜோதிகா பேசுவதும் நெகட்டிவ்வாக பார்க்கப்படுகிறது., செல்போனை தட்டி சிவக்குமார் தட்டியதிலிருந்தே இப்படி அவரது குடும்பத்தில் நெகட்டிவ் பார்வை விழ ஆரம்பித்துவிட்டது. மறுமுறையும் செல்போனை தட்டிவிட்டார்.. சால்வையை வீசி எறிவது, தேவையில்லாத சில விஷயங்களை பேசுவது, மேடையில் எல்லாவற்றையுமே எமோஷனலாக பேசுவது, போன்றவையெல்லாம்தான் அதிருப்தியை உண்டுபண்ணிவிடுகின்றன. சிவக்குமாருக்கு பிறகு, அவரது குடும்பத்திலும், இப்படித்தான் ஞானவேல்ராஜா முதல் அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு சர்ச்சையாக பேசினார்கள்.
நம்பர் 1 நடிகை ஜோதிகா
ஆனால், 35, 40 வருடங்களுக்கு முன்பு, சிவக்குமார் சினிமாவில் குறைவான சம்பளம் வாங்கும்போதுகூட, தமிழக பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 2 ஆயிரம் பரிசு தந்தார் சிவக்குமார். கல்விக்கு முக்கியத்துவம் தந்து, பிள்ளைகளுக்கு ஊக்கம் தந்தவர் சிவக்குமார்தான். கங்குவா தோல்வி குறித்து ஜோதிகா அறிக்கை வெளியிட்டிருந்தது சர்ச்சையாகியிருந்தது.. அதேபோல, தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று இப்போது மீண்டும் ஜோதிகா கருத்து சொல்லி உள்ளார். தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் இல்லாமலா, ஜோதிகா நம்பர் 1 நடிகையாக இருந்தார்? அதை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஜோதிகா என்பரை நடிகையாக அடையாளம் காட்டியது தமிழ் சினிமாவா? மும்பை சினிமாவா?
ரீ என்ட்ரி வாய்ப்பு மறுப்பு
ரீ-என்ட்ரி தரும்போது, தற்போது ஜோதிகாவை தமிழில் பயன்படுத்தி கொள்ளவில்லை. இதற்கு காரணம், கிளாமர் கண்ணோட்டத்தில் ஜோதிகாவை பார்க்க யாரும் விரும்பவில்லை. தமிழ்நாட்டு மருமகளாகவே பார்க்கிறார்கள். இதை ஜோதிகாதான் புரிந்துகொள்ளவில்லை. அதற்காக மும்பையில் தான் குடியேறியதை இப்படி சொல்லி நியாயப்படுத்தக்கூடாது.. ஒரு பெரிய குடும்பத்தில், சிறந்த மனிதரின் குடும்பத்தின் மருமகளாக பாவிக்கும்போது, மும்பையிலுள்ள அரைகுறை ஆடைகள், வெப்சீரிஸில் சிகரெட் பிடிப்பதை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்பதே உண்மை.. இதன்காரணமாகவும் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படலாம்.
ஜோதி கொடி பறக்குது
குடும்பத்திற்கு கீழ்ப்படிந்து இருப்பது வேறு, ஆளுமைப்படுத்துவது என்பது வேறு, கணவன் மனைவிக்குள் ஆளுமைப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.. ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து போவதுதான் கீழ்ப்படிதல்.. அந்தவகையில், ஜோதிகா கோடி பறப்பதாகவே தெரிகிறது. சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விட்டு, சிவக்குமாரே செல்போன் விஷயத்தில் ஆணவமாக நடந்து கொண்டார். இறங்குமுகம் இதற்கு பிறகுதான் ஆரம்பித்தது.. இப்போது ஜோதிகாவால் சில சிக்கல்களையும் சிவக்குமார் வீட்டில் சந்திக்கிறார்கள்.. எனினும், சமூகம், சினிமாவில் மிக உயர்ந்த இடத்தில் சிவக்குமார் குடும்பம் இருக்கும்போது, ஜோதிகாவின் செயல்பாடுகள் அவர்களுக்கு வருத்தத்தை தந்திருக்கலாம்" என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications