Kaatrin Mozhi Serial: போட்டுத் தாக்கு அவனை முறத்தால போட்டுத் தாக்கு!
சென்னை: விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் கண்மணியை பாலியல் ரீதியாக ஒருவன் துன்புறுத்துவதை ரொம்ப மனம் நொந்து எழுதி இருந்தோம். கண்மணி வாய் பேச முடியாத பெண் அவள் ஒரு கயவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறாள். அவள் இன்று அந்த கயவனுக்கு கொடுக்கிறாள் பாருங்கள் சரியான பதிலடி!
இவள் மனம் விட்டுப் பேச வீட்டில் யாரும் இல்லை. இவளை வெறுக்கும் பாட்டி, முகத்தில் கூட விழிக்கக் கூடாது என்று கண்டிஷனோடு மனைவியுடன் வாழும் கணவன் என்று வாய் பேச முடியாத கண்மணியின் குடும்பம்.
அம்மா கொடுக்கும் தைரியம் ஒன்றினால் மட்டுமே வாழும் கண்மணி, தன்னை சிதம்பரம் தப்பாக தொட்டதை யாரிடமும் சொல்லாமல் மனசுக்குள் அழுதுகொண்டு இருக்கிறாள்.

கண்டுபிடிச்சுட்டாங்க அம்மா!
பெத்த அம்மாவாச்சே கண்மணியின் துயரத்தை அவள் வரைஞ்சு வச்சு இருந்த வரைபடம் மூலம் கண்டு பிடிச்சுட்டாங்க. சிதம்பரத்தை கேட்கிறான் வான்னு கண்மணியை கையைப் பிடிச்சு இழுக்க அவள் வேண்டாம் என்று சைகை காண்பித்து அழறா. உன்னை கேட்க யாரும் இல்லைன்னு நினைச்சுக்காத கண்மணி.அம்மா நான் இருக்கேன்.உங்க அப்பா நீ எங்க வீட்டு மகா லட்சுமின்னு கொண்டாடும் நாள் வரும்னு சொல்லி தேத்தறாங்க.

விஷயத்தை புருஷனிடம்
விஷயத்தை புருஷனிடம் சொல்ல, நீ என்ன சொல்லிட்டு என் கூட வாழ வந்தே.இந்த வீட்டில் அவள் ஒரு ஜடமாத்தான் இருக்கணும். என் கண்ணில் படவே கூடாதுன்னு சொன்னபிறகு அதுக்கு சம்மதிச்சுத்தானே என் கூட வாழற இப்போ திடீர்னு நம்ம பொண்ணு வந்து கேளுங்கன்னு சொல்றே. என்னை பொறுத்த வரைக்கும் என் மகன் மட்டும்தான் பிள்ளை. கடமைக்கு ஒரு பொண்ணை வளர்த்துக்கிட்டு இருக்கேன். கடைசியில இவ இந்த வீட்டில் பிண்டம் மாதிரிதான்னு சொல்லிட்டு போறார்.

சிதம்பரம் வீட்டுக்கு
சிதம்பரம் வீட்டுக்கு மறுபடியும் பால் கொண்டு போகணுமே என்கிற கவலையில் இருக்கும் கண்மணிக்கு கைக்கொடுக்கிறாள் தோழி.வா என்று கூடவே அவளை அழைத்துச் சென்று இவனுக்கு நீ என்ன தண்டனை கொடுக்க நினைக்கிறியோ அதை குடு கண்மணின்னு சொல்றா.

சிதம்பரத்தை கண்மணி
சிதம்பரத்தை கண்மணி முதலில் கையால் அடிச்சுட்டு, பிறகு முறத்தை எடுத்து வந்து அதால் அடிச்சு வெளுத்து வாங்குகிறாள். அதை வீடியோ எடுக்கும் தோழி.. இனிமேலும் வாலாட்டின, இதை சோஷியல் மீடியாவில் போட்டு ஹேஷ்டேக்காகி விடுவேன்னு மிரட்டறா.
இந்த காலத்துக்கு இந்த தைரியம்தாங்க பொண்ணுங்களுக்கு வேணும்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications