Kalyana veedu serial: இன்றைய கல்யாண வீடு களைக்கட்ட போகுது... கூறுவது திருமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் 7:30 மணி நேரத்தை இயக்குநர் திருமுருகனுக்கு சொந்தமாக்கி அவரின் சீரியல்களை வெறும் ஹிட் அல்ல சூப்பர் ஹிட் கொடுத்து அழகு பார்க்கிறது சன் டிவி.

திருமுருகனும் அதற்கு ஏற்ப சோடை போகாமல் உழைத்து, சீரியல் ஆர்வலர்களை தன் வசம் தக்க வைத்து சன் டிவிக்கு பரிசு தந்து கொண்டு இருக்கிறார்.

அது மட்டும் இல்லமல் மெட்டி ஒலி சீரியல் காலத்தில் இருந்தே, சீரியல்களின் ஓரிரு எபிசோட்களில் புதுமையை புகுத்தி அசத்தி விடுவார்.

விளம்பர இடைவேளை

விளம்பர இடைவேளை

மெட்டி ஒலி சீரியல் காலத்தில் இருந்தே ஒரு சில எபிசோட்களை விளம்பர இடைவெளி இல்லாமல் ஒளிபரப்ப செய்வார்.அந்த எபிசோட் முழுக்க எமோஷனல் நிறைந்து இருக்கும், அதை இடைவெளி இல்லாமல் பார்க்கும் போது சீரியல் ஆர்வலர்களுக்கு அது கட்டாயம் பிடிக்கவே செய்யும். இது ஒரு புதுமை என்று அப்போது பேசப்பட்டது.

கின்னஸ் ரெக்கார்டு

கின்னஸ் ரெக்கார்டு

நாதஸ்வரம் சீரியலும் இப்படி இடைவெளி இல்லாமல் ஓரிரு எபிசோட்கள் ஒளிபரப்பபட்டது என்றாலும், இதையும் தாண்டி ஒரு புதுமையை செய்தார் திருமுருகன். அதாவது லைவ் ரெக்கார்டிங், லைவ் டெலிகாஸ்ட் என்று அசர வைத்துவிட்டார்.அதுவும் ஒரு திகில் எபிசோட். இதை கின்னஸ் ரெகார்ட்டாக செய்திருந்தார் திருமுருகன்.

அடுத்த சீரியல்

அடுத்த சீரியல்

குல தெய்வம் சீரியல் சும்மா ஒரு இடைவெளிக்காக ஒளிபரப்பப்பட்டது. அடுத்து கல்யாண வீடு என்கிற ஒரு நீண்ட நெடும் தொடரை தான் நடித்து இயக்கும் முயற்சிக்கு அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு இருந்திருந்தார். அதனால், அதில் ஓரு முயற்சியும் பெரிதாக செய்யாமலே சீரியலை முடித்துக் கொண்டார் திருமுருகன்.

மீண்டும் புதுமை

மீண்டும் புதுமை

இப்போது கல்யாண வீடு சீரியல் மூலம் ஒரு புதுமையை இன்று புகுத்த இருக்கிறார் திருமுருகன். அதாவது அவர் இன்று ப்ரோமோவில் கூறுவது, இன்று விளம்பர இடைவெளி இல்லாமல் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது என்றாலும் ஒரு புதுமையையும் சொல்லி இருக்கிறாரா. அதாவது காமிராவும் ஒரு கதாபாத்திரம் போல சீரியலில் உலா வரப்போகிறதாம்.அதை எப்படி உணர்கிறோம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+