Kalyana veedu serial: நல்ல மெசேஜ்...சபாஷ் திருமுருகன்!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கதைக்கு நடுவே நல்ல நல்ல மெசெஜ் கொடுத்து வருகிறார் திருமுருகன். எளிய கதைகளை தேர்வு செய்து, அதை சுவை பட சீரியலாக்கி தருவதில் திருமுருகன் வல்லவர்.
இவர் சீரியலுக்கு என்று இவர் தேர்ந்தெடுக்கும் நடிகர் நடிகைகளை நமக்கு உடனே பரிச்சயம் ஆகும்படி நமம குடும்பத்தில் ஒருவராக அவர்களை நினைக்கும்படி செய்துவிடுவார்.
பொண்டாட்டிக்கு துரோகம் செய்யும் ஆண்களை எப்படி தவிர்த்து தனியாக வாழ பழகலாம். அல்லது சொந்தக்காலில் நிற்க பழகலாம் என்பதை அழகாக அனுசூயா கதாபாத்திரம் மூலம் சொல்லி இருக்கிறார்.

அனுசூயா கோபி
கோபியின் தங்கை அனுசுயா புருஷன் ராம், பொண்டாட்டிக்கு துரோகம் செய்யும் கணவனாக இருக்க, ராம் இப்போது அனுசூயாவிடம் விவாகரத்து கேட்கிறான். இப்படிப்பட்ட புருஷன் தேவை இல்லை என்று முடிவெடுக்கும் அனுசூயா, தன்னுடைய பெண் குழந்தைக்காக தானே சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். உடனே அரசு வேலைக்குத் தயாராகி எக்ஸாம் எழுதி தேர்வாகிறாள். இது தனித்து விடப்பட்ட பெண்களுக்கு உந்துதல் கொடுக்கும் விதத்தில் இருக்கிறது.

வெறும் கருத்தா?
திருமுருகன் சீரியலில் வெறும் கருத்து மட்டும் இல்லை.நகைச்சுவை, குடும்ப பாசம், உறவுகள் சென்டிமென்ட் என்று எல்லாமும் இருக்கிறது. இதே போல வஞ்சம், வன்மம் கூட இருக்கிறது. அதையும் கதையில் நகைச் சுவையோடு கடந்து போகும்படி செய்திருக்கிறார் இயக்குநர்.

ராஜா ரோஜா
ரோஜா தன்னுடன் வேலை பார்க்கும் ராஜாவை காதலிச்சு அந்த காதல் கை கூடாமல் போனதில் அவள் வில்லியாக மாறி ராஜாவுக்கு பல கெடுதல்களை செய்கிறாள் ரோஜா.பதிலுக்கு அவனும் இதே போல ரோஜாவுக்கு செய்ய கடைசியில் ரோஜா தான் விரித்த வலையில் தானே விழுந்து கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகிறாள். சரி, கதைக்காக இப்படி கொண்டு வந்தாச்சு..இதற்கு தீர்வு சொல்ல வேண்டுமே என்று யோசித்து அதையும் முடிந்தவரை கையாண்டு இருக்கிறார்.

மீண்டும் வாழ
ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால், சமூகத்தை எதிர்கொண்டு எப்படி வாழ்வது என்று யோசித்து முடிவெடுக்கும்படி தீர்வும் சொல்லி இருக்கார். எல்லாரும் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதையும் காண்பித்தும் இருக்கார். பாலியல் வன்கொடுமை இருக்கக் கூடாது என்பதையும்சொல்லி இருக்கார்.. ரோஜாவின் இந்த நிலைமைக்கு தான்தான் காரணம் என்று உணர்ந்த ராஜாவுக்கு இப்போது ரோஜா மீது காதல் வருது.ரோஜாவை ஊக்குவித்து மீண்டும் பழைய வேலைக்கே வரும்படி கூப்பிடுகிறான்.
இவளும் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையோடு வாழ ஆசைப்பட்டு சென்னைக்கு வேலைக்காக கிளம்புவது முன் உதாரணமாக இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications