Kalyana veedu serial: கல்யாண வீடு கேமிரா கேரக்டர் வாவ் சொல்ல வைக்குதே!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் இயக்குநர் திருமுருகன் தனது கல்யாண வீடு சீரியலில் ஒரு புதுமையை செய்திருந்தார்.அதாவது கேமிரா ஒரு கேரக்டராக மாறி அவர்களுடன் உலா வருகிறது.
ஒரு வழியா கல்யாண வீடு சீரியலில் கோபியின் தங்கச்சி கல்யாணம் இப்போது கல்யாண மேடை வரை வந்திருக்கிறது. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்பது போல இத்தனை காலம் இழுத்தடித்து ஒரு வழியாக சவீதா, பிச்சை கல்யாணம் மணமேடை வரைக்கும் வந்தாச்சு.
நேற்றைய எபிசோடில் சொன்னதை செய்து அசத்தி இருக்கார் இயக்குநர் திருமுருகன். அதாவது, கேமிரா எபிசோட் முழுக்க கட் ஷாட் இல்லாமல், ஒரு கேரக்டராகவே பயணிக்கும் என்று சொல்லி இருந்தார். அதே போல செய்து அசத்தி விட்டார்.

கேமரா அசத்தல்
ஆரம்பத்தில் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் சொல்லி இருந்திருப்பார் இயக்குநர்.அதற்குப் பிறகு சீரியல் முழுக்கக் கட் ஷாட்டே இல்லைங்க. இந்த நேரத்தில் இவங்க வருவாங்க,ரெண்டு நிமிஷம் மூணு நிமிஷம் டயலாக் பேசுவாங்க. அடுத்த நிமிஷம் கேமிரா மட்டும் திரும்பும், விருந்தினர் வருவாங்க. அடுத்த நிமிஷம் கேமிரா வேறு திசையை பார்த்தால் அங்கே கோபி நடந்து வந்து யாரு நீங்க எல்லாம்னு கேட்பார்.

நோ கட்
சட் சட்னு நடிகர்கள் தங்களது பணிகளை சிறப்பாக செய்துவிட்டு நகர, இதில் ஒரு குழந்தை கூட சிறப்பாக காட்சி புரிந்து நடித்து அடுத்த நிமிஷம் நகர்ந்து கொள்கிறது அதுவும் மிக இயல்பாக. இதற்கு நடுவில் கதையும் கதையாக நகர வேண்டும். அது மட்டும் இல்லாமல் வெகு சுவாரஸ்யமாகவும் நகர வேண்டும் என்பதில் திருமுருகன் மிக கவனமாக செயல்பட்டு வருகிறார். சட் சட்னு வேகமாக எபிசோட் நகர,நோ கட் ஷாட்ன்னு கேமரா அசத்தி இருக்கிறது.

நடிகர்கள்
நடிகர் நடிகைகள் திருமுருகனின் இந்த யுக்தியை புரிந்துக் கொண்டு தங்கள் பணிகளை சிறப்பாக செய்தால் மட்டுமே இது சாத்தியம். அப்படிப்பட்ட நடிகர்,நடிகைகள் திருமுருகன் தான் கண்டெடுத்த பொக்கிஷங்களை பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளார். சீரியல் என்றாலே அதிகம் வொர்க் லோட்..அதுவும் இதற்கெல்லாம் அதிகம் மெனக்கெட வேண்டும்.

எப்போதும் எங்கேயும்
எப்போதும், எங்கேயும் சீரியலுக்கான கதை, கேரக்டர்., டயலாக் என்கிற தேடலில் இருக்குக் திருமுருகன்,புதுமைகள் செய்ய வேண்டும் என்பதிலும் புத்துணர்ச்சியோடு சிந்திப்பார். ஒரு கலைஞனுக்கு இந்த புத்துணர்ச்சி என்பது கலையை நேசித்து, அதில் வாழும் அந்த கடைசி நாள் வரை இருக்க வேண்டும்.அது இயக்குநர் திருமுருகனிடம் இருக்கிறது.மகிழ்ச்சி!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications