Kalyana Veedu Serial: எல்லாம் சரிதான் அந்த ஒரு மாசம் எங்கே போயிருந்தீங்க கோபி?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் தங்கை சவீதா கல்யாணத்தை நடத்தி முடிப்பதற்குள் அண்ணன் கோபிக்கு பல விதத்திலும் ரொம்ப கஷ்டம். இப்போ கல்யாணம் நல்லபடியா முடிந்துவிட்டது.
ஆனால், கல்யாணத்துக்கு மறுநாளே கோபி மீது கொலைகார பட்டம், மண்டபத்தில் நடந்த கொலைகளுக்கு காரணம் கோபிதான் என்றும், தங்கைகளுக்காக கோபி கொலையும் செய்வான் என்றும் போலீஸ் நினைக்கிறார்கள்.
பொண்ணு மாப்பிள்ளைக்கு மறு வீட்டு விருந்து நடத்த்துவதற்குள் போதும் போதும் என்கிற அளவுக்கு போலீஸ், கோபி வீட்டுக்கு தொல்லை கொடுக்கறாங்க. சம்பந்தி வீடும் தொல்லை கொடுக்கறாங்க.

இல்லை கோபி
கோபி கொலை செய்யவில்லை என்று போலீஸ் விட்டுவிடும் அளவுக்கு கொலையாளி நீதி மன்றத்தில் சரண்டர் ஆகிவிட்டான்னு தகவல் வர கோபியை போலீஸ் விட்டுடறாங்க.சரண்டர் ஆனவன் யாராக இருக்கும் என்று பார்க்க கூட கோபி விரும்பவில்லை.நமக்கு எதுக்கு வீண் வம்புன்னு ஒதுங்கிக்கறார்.

கொலை கோபிக்காக
இரவில் எல்லாரும் கொல்லைப் புறமாக வந்து பேசிக்கொண்டு இருக்க, அங்கு நிற்பவனைப் பார்த்து ஒவ்வொருவராக ஆ ன்னு கத்தறாங்க. அதே போல ஒவ்வொருத்தராக போயி பார்த்தால் அங்கே நிற்பவன் ஒரு ரவுடி. அதுவும் ஜித்துவின் ஆள். எல்லாரும் பயந்து நிற்க, பயப்படாதீங்க.. நான் உங்களுக்கு நல்லதுதான் செய்திருக்கேன்னு சொல்றான். என் குடும்பத்தை காப்பாத்தின கோபிக்காக நான்தான் அந்த கொலைகளை செய்தேன்னு சொல்றான்.

காப்பாத்தின கோபி
என் மனைவி, தங்கச்சியை காப்பாத்தி பாதுகாப்பு கொடுத்தவர் கோபி. அதனால்தான் நான் மனசு மாறி கோபிக்காக இந்த கொலைகளை செய்தேன்.இனிமேல் நீங்க எந்தவித பயமும் கவலையும் இல்லாமல் நிம்மதியா இருக்கலாம். என் குடும்பத்தை காப்பாத்தின கோபிக்கு நான் செய்த நன்றி கடன் இதுன்னு சொல்றான்.

பொண்ணு யாரு?
கெட்டவன் என்னடானா கோபி என் குடும்பத்தை காப்பாத்தினார்னு சொல்றான். கோபி என்னடான்னா முக்காடு போட்ட பொண்ணுக்கு இன்னும் எங்கே பார்த்தாலும் பணம் கொடுத்துட்டு வர்றார். கடந்த இரண்டு மாதத்துக்கு முன் காணாமல் போயிட்டு திரும்ப வந்தார்.
இதை பத்தினை உண்மை எல்லாம் எப்போ சொல்ல போறீங்க கோபி?
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications