ரோபா சங்கர் பேரனுக்கு கமல்ஹாசன் வைத்த "செம" பெயர்.. கையில் குழந்தையுடன் இந்திரஜா நெகிழ்ச்சி போஸ்ட்
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா- கார்த்திக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் பெயரிட்டுள்ளார். இதுதொடர்பான போட்டோவை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய் டிவியில் காமெடி ஷோவில் அறிமுகம் ஆனவர் ரோபா சங்கர். விஜய் டிவியில் கிடைத்த புகழை தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். காமெடி நடிகராக அவர் கலக்கி வருகிறார். தற்போது பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.
ரோபோ சங்கரின் மகள் பெயர் இந்திரஜா. இவர் நடிகர் விஜயின் ‛பிகில்' திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்திரஜாவுக்கும், உறவினர் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்திரஜா கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ரோபா சங்கர் தாத்தாவானார். குழந்தை பிறந்தை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் தான் இந்திரஜாவின் குழந்தைக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பெயர் வைத்துள்ளார்.
ரோபா சங்கரின் பேரனான இந்திரஜாவின் மகனுக்கு கமல்ஹாசன் ‛நட்சத்திரன்' என்று பெயர் வைத்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனை ரோபா சங்கர் தனது மனைவி, மகள், மருமகன், பேரனுடன் சந்தித்தார். இந்த சந்திப்ப்பை தொடர்ந்து குழந்தைக்கு ‛நட்சத்திரன்' என்று கமல்ஹாசன் பெயர் சூட்டி உள்ளார்.
இதுதொடர்பான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இந்திரஜா - கார்த்திக் தம்பதி பதிவிட்டுள்ளார். அதில், ‛‛எங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான எங்கள் மகனுக்கு உலக நாயகன், நம்மவர், அன்பு தலைவர், பத்ம பூஷன் டாக்டர் கமல் ஹாசன் ‛நட்சத்திரன்' என பெயரிட்டு வாழ்த்தினார். என்றும் உங்கள் அன்புடன் எங்கள் நட்சத்திரன் கார்த்திக்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக திருமணத்திற்கு பிறகு ரோபோ சங்கர் மகள் இந்திரஜா தனது கணவர் கார்த்திக் உடன் விஜய் டிவியில் நடந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் இந்திரஜா கர்ப்பமான பிறகு அவர்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்த நிலையில் இப்போது கமல்ஹாசன் பெயர் சூட்டி உள்ளார்.
மேலும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது கமல்ஹாசனுக்கு இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தில் செயல்பட்டு வரும் கவிஞரும், பாடலாசிரியருமான சினேகனின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு சமீபத்தில் கமல்ஹாசன் பெயர் வைத்தார். சினேகன் - கன்னிகா காதல் திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அதில் ஒரு குழந்தைக்கு ‛காதல்' என்றும் இன்னொரு குழந்தைக்கு ‛கவிதை' என்றும் கமல்ஹாசன் பெயர் சூட்டி தங்க வளையல் அணிவித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications