Kanmani Serial: அவன் அவள் அது மாதிரி ஆகாமல் இருந்தால் சரிதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்துச்செல்வி வாடகைத் தாயா கண்ணன் சவுந்தர்யா குழந்தையை வயிற்றில் சுமந்துக்கொண்டு இருக்கா. இந்த நேரம் பார்த்து கண்ணன், சவுந்தர்யா, முத்து மூவரும் சந்திக்கும் நிலை வந்தது இருக்கு. முத்துச்செல்வி முழுகாம இருக்கான்னும் சவுந்தர்யா, கண்ணனுக்கு தெரிஞ்சுருது.

இந்த நேரம் முத்துச்செல்வி என்ன சொல்லி சமாளிக்கப் போகிறாள், இல்லை அவன் அவள் அது திரைப்பட கதை மாதிரி ஆகிப்போகுமோ என்கிற பதற்றம் கூட சீரியல் ஆர்வலர்களுக்கு வந்துருக்கு. வாடகைத் தாயா இருக்க வந்த பொண்ணு, கடைசியில் பொண்டாட்டியாகவே வாழ்ந்துவிட்ட கதைதான் அவன் அவள் அது திரைப்படம்.

நடிகர் சிவகுமார், நடிகைகள் லட்சுமி, ஸ்ரீபிரியா உள்ளிட்டவர்கள் நடித்து இருந்த திரைப்படத்தின் கதை எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ஒரு சிங்கம் முயலாகிறது நாவல். அப்போதே சிவசங்கரி வாடகைத் தாய் பற்றி அருமையாக எழுதி இருப்பார்.

சவுந்தர்யா முத்துச்செல்வி

சவுந்தர்யா முத்துச்செல்வி

சின்னவர், சவுந்தர்யா இருவருக்கும் தெரியாமல் அவர்களது குழந்தைக்கு வாடகைத் தாயா இருக்கிறாள் முத்துச்செல்வி. என்ன இருந்தாலும், கல்யாணம் ஆகி குழந்தை பெத்து இருக்கும் ஒரு பெண்ணுக்கு பதிலாக டாக்டர் கண்ணையும் மறைச்சுட்டு, முத்து வாடகைத் தாயா இருக்கா. இதை டாக்டர் கண்டுபிடிச்சுட்ட மாதிரி ஒரு சீன் வச்சு இருக்கலாம். டாக்டர்களுக்கு குழந்தை பெற்றுக் கொண்டவர்களுக்கும், கல்யாணமே ஆகாதவங்களுக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன? இதை புரியவைக்க ஒரு சீன் வைக்க வேணாமா?

மக்களுக்கு தெரியணும்

மக்களுக்கு தெரியணும்

வாடகைத் தாய் என்று விலாவாரியாக சொல்கிறீர்கள். அதில் நடக்கும் உண்மைக்கு புறம்பான விஷயங்களைத் சுட்டிக்காட்டி தவிர்க்க வேணாமா? இது மக்களுக்கும் தெரியணும் என்கிற சமூக அக்கறை வேண்டும். பிள்ளை பெற்றுத் தருகிறேன் என்று வந்து இருக்கும் பெண், அடிக்கடி இப்படி வாடகைத் தாயா இருந்து மூணு மாசத்தில் கர்ப்பத்தை கலைச்சுட்டு, வேறு ஒரு பெண்ணுக்கு வாடகைத் தாயா இருக்க ரேவதியை புருஷன் தயார் பண்ணுவானாம். இது சாத்தியமா? இது மக்களுக்குத் தெரிய வேணாமா?

சின்னவர் முத்துச்செல்வி

சின்னவர் முத்துச்செல்வி

இப்போது முத்துச்செல்வி முழுகாமல் இருக்கண்ணு சின்னவருக்கும் சவுந்தர்யாவுக்கும் தெரிஞ்சு போச்சு. இப்போ முத்துச்செல்வி உண்மையை சொல்லுவாளா? அப்படி சொன்ன பிறகு சின்னவர் என்ன செய்வார். முத்துச்செல்வி வள்ளி கல்யாணம் நடந்தப்போ சின்னவர் கட்டின தாலியால் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்கிற நினைவில் இருக்கிறாள். சின்னவர்தான் தனக்கு புருஷன் என்றும் அடிக்கடி தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.

என்ன செய்வார் சின்னவர்

என்ன செய்வார் சின்னவர்

முத்துச்செல்வி இந்த எண்ணத்தில் இருக்கும்போது, இவர்கள் குழந்தைக்கு வாடகைத் தாயாக இருக்கும் நிலையில்,உண்மை தெரிந்தால் சின்னவர் என்ன செய்வார். அவர் முத்துச் செல்வியை ஏத்துக்கும் நிலைமைக்கு வந்துவிட்டால், சின்னவர் மரியாதையை கெட்டுப் போகுமே...எத்தனை சிக்கல்கள் கதையில் இருக்கு. முத்துச்செல்வியை அம்போ என்று விட்டுவிட்டாலும் பாவம் இல்லையா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+