Kanmani Serial: பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டு இப்படிப் பொறுப்பே இல்லாமல்...!
சென்னை: சில பேருக்கு சில விஷயங்கள் பிடித்து போனால் அதை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட மாட்டார்கள். அப்படித்தான் நடிகர் சஞ்சீவ் திருமதி செல்வம் சீரியல் மூலம் சீரியல் ஆர்வலர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டார்.
அவருக்காகவே கண்மணி சீரியலை பலரும் விரும்பிப் பார்த்து வருகின்றனர். சின்னத்திரையில் நல்ல ஸ்டார் காஸ்ட் நடிகர் சஞ்சீவ் என்று சொல்லலாம்.
இன்னும் இளமையான தோற்றத்தை தக்க வைத்துக் கொண்டு இருப்பதால், இவருக்கு இப்படிப்பட்ட நல்ல வாய்ப்புக்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

நல்ல கிராமத்தான்
வேட்டி சட்டை, அதிகாரம் புகழ் என்று சஞ்ஜீவ் நல்ல கிராமத்தானாக நடிப்பில் கலக்கி இருக்கார். அக்காவை ஜெயிலில் பார்த்துவிட்டு, இவர் அழும் காட்சிகள் கண் கலங்க வைக்கின்றன. அக்கா ஜெயிலில் இருப்பதற்கு காரணம், சம்பந்தி அம்மாவுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்தது குமரேசன்தான் என்று கண்டு பிடிக்கும் காட்சிகளை நன்றாக எடுத்து இருக்கிறார்கள்.

கண்ணன் சவுண்டு
கண்ணன் சவுந்தர்யா ஜோடிப் பொருத்தம் பிரமாதம். இருவரும் சேர வேண்டும், முத்துச் செல்வியை சின்னவர் கல்யாணம் செய்துக் கொள்ள கூடாது என்கிற நேயர் விருப்பம் நிறைவேறி ரசிகர்கள் மனதை நிறைவடைய வைத்துள்ளது. கண்ணன் மாமாவுக்கு உதவியாக குமரேசனை உளவு பார்த்து வேட்டியில் படிந்து இருந்த கறையின் மூலம் சலவைக்காரரிடம் கேட்டு உறுதி செய்வது,போனில் பேசுவது போன்ற பாவ்லா என்று காலி விஷ பாட்டிலை வைத்து இருவரும் அசத்தி இருக்கிறார்கள்.

முத்து பாவம்
முத்துச்செல்வி சின்னவரே சின்னவரே என்று கண்ணன் மேல் ஆசைப்படுவதும், பின்னர் சவுந்தரியா சின்னவர் இருவரும்தான் சேர வேண்டும் என்று விட்டுக் கொடுத்து போவதும் என்று பார்க்க பாவமாக இருக்கிறது.இப்போது போலீஸ் வீட்டிலும் பிரச்சனை அவளைத் துரத்துகிறது.

பெண் பிள்ளைகள்
இரண்டு பெண் பிள்ளைகளை பெற்று விட்டு இன்னும் முத்துச்செல்வியை வைத்தே ஒரு தந்தை வாழ்வது என்பதை காண்பித்து இருப்பது என்பது வேதனையாக இருந்தாலும், இப்படிப்பட்ட அப்பாக்களை என்ன செய்வது என்கிற கோபம் எழுகிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டு பொறுப்பு இல்லாமல் இருக்கும் அப்பாக்களுக்கு இந்த சீரியல் ஒரு பாடமாக இருக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications