சொத்தையான ரீஸன் சொன்ன ஜெயம் ரவி.. கெனிஷாவின் டிரஸ், அழகான தோழி, பொன் முட்டை வாத்து குறித்து பிரபலம்
சென்னை: ஜெயம் ரவி இன்று தன்னுடைய அறிக்கையில் சொல்லியிருக்கும் சிக்கல்கள் அனைத்தும், இன்று எல்லா ஆண்களுக்குமே உண்டு.. தான் சம்பாதித்த சொத்துக்களை, ஆர்த்தி வேறு யாருக்கோ கொடுத்துவிட்டாரா? தன்னுடைய குடும்பம், குழந்தைகளுக்குதானே செலவு செய்திருப்பார்? பொதுவாக பலரும், தான் செய்யும் துரோகம், தான் செய்யும் தவறுகளுக்கு சில நியாயங்களை எடுத்து வைப்பார்கள். அப்படித்தான் இதுவும்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து கூறியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள சேகுவேரா, "ரவி மோகன் தன்னுடைய அறிக்கையில், "தோழியாக வந்தவர் அன்பான துணை" என்று சொல்லாமல், "அழகான துணை" என்று சொல்லியிருக்கிறார். அழகான துணை, அன்பான துணை இதற்கு இரண்டுமே அர்த்தங்கள் வேறு. ரவி மோகனின் வழி நேர்வழியாக இருந்தால், சரியான வழியாக இருந்தால், தூய்மையான வழியாக இருந்தால் அன்பான துணை என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.

பொன் முட்டையிடும் வாத்து
இந்தஅறிக்கை முழுக்க முழுக்க அன்பை பற்றியோ, கணவன் மனைவி தாம்பத்ய உறவு பற்றியோ, ஆர்த்தியுடனான உறவு பற்றியோ கிடையாது. பொன் முட்டையிடும் வாத்து என்பது போல முழுக்க முழுக்க பொருளாதாரம் சார்ந்துதான் குற்றஞ்சாட்டுகிறார்.. கார் பயன்படுத்த முடியவில்லை, என் வருமானத்தை அந்த குடும்பத்தினரே அனுபவித்தனர் என்கிறார்..
பொன் முட்டை எங்கே இட்டார்? வரிசையாக அவரது படங்கள் எல்லாமே தோல்விதானே? மாமியார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்து, எத்தனை படங்கள் கோடிக்கணக்கில் வசூலை தந்தது? எத்தனை வெற்றி படங்கள்? அதன் வருவாய் என்ன? என்பதை சொன்னால்தானே பொன் முட்டையிடும் வாத்து என்பதை ஒப்புக் கொள்ள முடியும். இப்போது வில்லனாகத்தானே நடிக்க போகிறார்?
ஜெயம் ரவி சொல்லும் தொழில்ரீதியான பிரச்சனைக்கெல்லாம், நிவாரணம் கெனிஷா தானா? விவாகரத்துக்கு முறையாக நீதிமன்றம் அணுகியிருக்கும்போது, முடிவுகள் வரும்வரை அமைதி காத்திருக்கலாமே?
எதிர்மறை விமர்சனங்கள்
கெனிஷாவுடன் திருமணத்தில் பங்கேற்றபோது, இத்தனை எதிர்மறை விமர்சனங்கள் என்று ஜெயம் ரவியே நினைத்திருக்க மாட்டார்.. ஜெயம் ரவியின் முதுகில் குத்தியது ஆர்த்தி இல்லை, அவரது குடும்பத்தினரும் இல்லை.. ஜெயம் ரவியின் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த அத்தனை பேரும் குத்துகிறார்கள். இங்கு பொதுப்பார்வை உண்டு.
ஜெயம் ரவி சொல்லியிருக்கும் சிக்கல்கள், அனைத்து ஆண்களுக்குமே உண்டு.. தான் சம்பாதித்த சொத்துக்களை, ஆர்த்தி வேறு யாருக்கோ கொடுத்துவிட்டாரா? தன்னுடைய குடும்பம், குழந்தைகளுக்குதானே செலவு செய்திருப்பார்,? பொதுவாக பலரும், தான் செய்யும் துரோகம், தான் செய்யும் தவறுகளுக்கு சில நியாயங்களை எடுத்து வைப்பார்கள். அப்படித்தான் இதுவும்..
கெனிஷாவின் உடை
அந்த பிள்ளைகளின் மன உளைச்சல் இந்நேரம் எப்படி இருக்கும் ? பள்ளிக்கூட நேரத்தில் இதெல்லாம் மன உளைச்சல்.. இதைக்கூட ஒரு தந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லையா? கெனிஷாவின் உடைகளில் கண்ணியம் இருக்கிறதா? ஜெயம் ரவியின் பார்வைக்கு அழகாக இருந்து கொள்ளட்டும்.. ஆனால், இது சாதாரண மக்களுக்கும் புரியும்.
இப்போதும் சொல்கிறேன், ஜெயம் ரவி அடிப்படையில் நல்லவர்தான்.. அவர் மீது மரியாதை உண்டு.. இன்று சூழ்நிலைகள்தான் அனைத்துக்கும் காரணமாகி உள்ளது.. தம்பதிக்குள் ஒரு இடைவெளி வரவும், கெனிஷா உள்ளே வந்துவிட்டார், ஜெயம் ரவியும் அவரை இறுகப்பற்றிக் கொண்டுவிட்டார்.
சொத்தையான குற்றச்சாட்டுகள்
ஜெயம் ரவியின் இன்றைய அறிக்கையில் கேள்விகள் நிறைய இருக்கிறது. பொன் முட்டையிடும் வாத்து என்றால் எத்தனை ஹிட் படங்களை தந்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார் ஜெயம் ரவி? எத்தனை கோடியை அந்த குடும்பத்துக்காக இழந்தார்? என்றுதான் தெரியவில்லை.
அழுத்தமாக பதிவு செய்கிறேன், ஜெயம் ரவி அறிக்கையில் சொல்லியிருக்கும் அனைத்துமே சொத்தையான குற்றச்சாட்டுகள்.. ஒருவேளை ஜெயம் ரவி சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால், விவாகரத்து தருவதற்கு ஆர்த்தி எப்போதோ தயாராகியிருப்பார். எனினும், காலம் இருக்கிறது, நல்லது நடக்கும், காத்திருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications