Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெனிஷாவை பார்த்ததுமே ஜெயம் ரவி அம்மா?.. ஆமா, ரவி மோகன் அப்பா எங்கே? இதுதான் விஷயம்: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவசர அவசரமாக இந்த பூஜையை போட்டுள்ளதாக தெரிகிறது.. மாமியாருக்கு எதிராக ஈகோ காரணமாக படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, மீண்டும் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டது போல தெரிகிறது. படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது இது ஆபத்தான முடிவாகவும் தெரிகிறது. ஜெயம் ரவி போன்ற நல்ல மனிதர், தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற அக்கறையில் சொல்ல தோன்றுகிறது" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "ஜெயம்ரவி அன்பானவர், பண்பானவர், மரியாதையும் நடந்து கொள்ளக்கூடிய மனிதர்.. சினிமா துறைக்கு வந்து 25 வருடத்தில், ஒருவரை அவரை தவறாக சொன்னதில்லை.. எந்த நடிகையுடனும் கிசுகிசுக்கப்பட்டதும் இல்லை.. எல்லாருக்குமே பிடித்த நடிகராகவே இருந்துள்ளார் ஜெயம் ரவி..

Television Kenisha Ravi Mohan

சுஜாதா விஜயகுமார்

ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்ய ஜெயம் ரவி முடிவெடுத்தபோது, அவரது குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.. சுஜாதா விஜயகுமார் குடும்பம் நமக்கு செட் ஆகாது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.. இந்த எதிர்ப்பையும் மீறிதான் ஆர்த்தியை திருமணம் செய்தார்..

இந்த திருமணத்துக்கு பிறகு, மாமியார் வீட்டிலேயே தங்க ஆரம்பித்துவிட்டார் ஜெயம் ரவி.மருமகன் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும், அவரது பிரபலமான மார்க்கெட்டை, தாமே பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாமியார் சுஜாதா விஜயகுமார் நினைக்கிறார்.. எனவே, ஜெயம் ரவியை ஆர்த்தி தரப்பில் ஒரு கைப்பொம்மை மாதிரியே பயன்படுத்துகிறார்கள்..

உடைத்து கொண்டு வந்த ரவிமோகன்

பிறகு ஜெயம் ரவியின் தொழிலையும் கையில் எடுக்கிறார்கள்.. ஜெயம் ரவி நடிக்க வேண்டிய படங்களை, சுஜாதா விஜயகுமார்தான் முடிவெடுத்துள்ளார்.. ஆனால் அவை எல்லாம் ஜெயம் ரவிக்கு தோல்வியாய் அமைந்தன.. பிறகு தானே ஜெயம் ரவியைவைத்து சொந்த படங்களை மாமியார் எடுத்தார்.. அந்த படங்களும் தோல்வியை தந்துவிட்டன.

நெருக்கடிகள், அழுத்தங்கள் அதிகமாகிவிட்டதால், திருமண உறவை உடைத்து கொண்டு வெளியே வந்தார் ஜெயம் ரவி.. இந்த முடிவை ஆர்த்தி தரப்பில் யாருமே எதிர்பார்க்கவில்லை.

கெனிஷாவுக்கு பாராட்டு

இந்த நேரத்தில்தான், கெனிஷாவின் அறிமுகம் ஜெயம் ரவிக்கு கிடைத்தது.. கெனிஷா தனக்கு கிடைத்த கடவுள் தந்த வரம் என்று நேற்று ஜெயம் ரவியே வெளிப்படையாக சொல்லிவிட்டார்.. ஆர்த்தியுடன் சட்டப்படி விவாகரத்து ஆகிவிட்டால், கெனிஷாவைதான் திருமணம் செய்து கொள்வார் என்று தெரிகிறது.

ஒரே காஸ்ட்யூமில் கெனிஷாவும் ஜெயம் ரவியும் வந்தார்கள்.. ஒருவரையொருவர் புகழ்ந்து பேசிக் கொண்டார்கள்.. கெனிஷா - ஜெயம் ரவி இருவரும் சேர்ந்து, ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார்.. இதுவரைக்கும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி யாருமே வெற்றி பெற்றதில்லை..

பூஜைக்கே 4 கோடி ரூபாய்

ஜெயம் ரவியின் அப்பாவுக்கு தயாரிப்பு துறையில் அனுபவம் உண்டே தவிர, ஜெயம் ரவிக்கு அந்த அளவுக்கு அனுபவம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.. கார், பங்களா, என்று வசதியான வாழ்க்கையை கூலாக வாழக்கூடிய நடிகராக இத்தனை வருடம் இருந்துவிட்டார்.. சினிமா துறை கஷ்டங்களை பெரிதாக பார்த்திருக்க மாட்டார்.

2 படங்களுக்கு தற்போது பூஜை போடப்பட்டுள்ளது.. உலகளவில் மருத்துவ உதவிகளை செய்து வரும் கெனிஷா, பல நபர்களை இந்த விழாவுக்கு விருந்தினராக அழைத்து வந்துள்ளார்.. இவர்கள் துவங்க போகும் படங்களை விநியோகம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அழைத்து வந்ததாக தெரிகிறது.

இந்த பூஜைக்கே 4 கோடி ரூபாய் செலவழித்துள்ளாராம் ஜெயம் ரவி.. கார்ப்பரேட் நிறுவனத்தை துவங்கியிருக்கும் ஜெயம்ரவியின் முதல் படத்துக்கு யோகிபாபு கதாநாயகன்.. காமெடி படங்களை., காமெடி சென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே எடுக்க முடியும்..

யோகிபாபு ஹீரோ

ஆனால், யோகி பாபு வைத்து, இந்த படத்தை ஜெயம் ரவியே இயக்க போகிறாராம்.. சினிமாவில் நடித்துவிடுவதாலேயே, படத்தை பலராலும் டைரக்ட் செய்துவிட முடியாது. கதை சரியாக இருக்கவேண்டும், ஒரு யூனிட்டையே வழிநடத்தி கொண்டு போகவேண்டும்..

யோகிபாபு கதாநாயகன் என்றால், காமெடி படம் எடுத்தால்தான் ஓரளவு உத்தரவாதம் உண்டு.. தானே ஒரு படத்தில், எஸ்ஜே சூர்யாவுடன் நடிக்க போகிறாராம்.. இவர்களுடன் 3 ஹீரோயின்கள் நடிக்க போகிறார்களாம்.. அவர்கள் யார்? லைம்லைட்டில் உள்ளவர்களா? என்று தெரியவிலலை.. மொத்தத்தில் புராஜக்ட் டிசைனே ரொம்ப POOR ஆக உள்ளது.. ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் இன்று ஜீரோவாக உள்ளது..

எடிட்டர் மோகன் எங்கே?

அவசர அவசரமாக இந்த பூஜையை போட்டுள்ளதாக தெரிகிறது.. மாமியாருக்கு எதிராக ஈகோ காரணமாக படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, மீண்டும் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டது போல தெரிகிறது. இது ஆபத்தான முடிவாகவே தெரிகிறது.

ஜெயம் ரவி அண்ணன், அம்மா இருவரும் விழாவுக்கு வந்திருந்தனர்.. ஆனால், ஏன் அப்பா வரவில்லை? எடிட்டர் மோகனும் சினிமா துறையை சார்ந்தவர்தானே? அவருக்கு இந்த விழாவுக்கு வருவதற்கு விருப்பமில்லை என்றே தெரிகிறது.. ஜெயம்ரவி செய்வதற்கெல்லாம் தானும் துணை போவதாக பிறர் சொல்வார்கள் என்பதால், விழாவுக்கு எடிட்டர் மோகன் வர மறுத்துள்ளார் என்பதே உண்மை" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+