Lakshmi Stores Serial: கதையை ராங்கா கொண்டு போயிட்டு, இப்போ ரைட்டாக்க முயற்சித்தால் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் கதை ரொம்ப முரண்பாடா கொண்டு போயி, இப்போது கதைக் குழுவே சிக்கலில் மாட்டிக் கொண்டு விழிப்பது போல இருக்கிறது. கதையில் தவறு செய்துவிட்டோம் என்கிற நினைவில் இப்போது அதை சரி செய்ய முயற்சிக்கிறார்கள்.

இல்லை இதை வைத்து கதையை இழுக்கலாம் என்று நினைத்து ஒரு சம்பவத்தை கொண்டு வந்து இருந்தாலும், அது எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு தவறான முன் உதாரணமாக இருக்க கூடாது என்பதில் கதை ஆசிரியர் கவனமாக இருக்க வேண்டும்.

இப்போது லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமி, மகாலட்சுமியின் கணவர் தேவராஜை கை நீட்டி அடித்து விட்டு,இப்போது சாக்கு சொல்வது இந்த கோணத்தில்தான் இருக்கிறது.

தெரிந்துமா கை நீட்டுவது?

தெரிந்துமா கை நீட்டுவது?

என்னதான் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்துகொண்டு விட்டாலும், புருஷன்தானே... அவனின் அண்ணன் தாத்தாவை அடித்து இருந்தாலும், அத்தனை பெரிய மனிதரை சட்டையைப் பிடித்து உலுக்கி,அவரை பல கேள்விகள் கேட்டும் நிதானிக்காமல் அவரை கன்னத்தில் அடித்தது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். சட்டையைப் பிடித்து உலுக்கியதோடு நிறுத்தி இருக்க வேண்டும்.இதுதான் பண்பாடு.

எல்லை மீறிய பின்னர்

எல்லை மீறிய பின்னர்

எல்லை மீறிய பின்னர்,காதல் கணவன்..தன்னை பார்க்கவில்லை என்று பச்சை தண்ணி பல்லில் படாமல் மூன்று நாள் விரதமாம்...மலை கோயிலில் மூட்டி போட்டு ஏறுவதாம்.. ரவி ரவி என்று மயக்கத்திலும் முணுமூணுத்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்காளாம் பாக்கியலட்சுமி. இதில் ரவிக்கு வேறு போன் செய்து , தங்கை வனிதா நியாயம் பேசுகிறாள். அன்னிக்கு நடந்தது இதுதான் என்று தாத்தாவை அண்ணன் தேவராஜ் அடித்ததையும், பின்னர்தான் பாக்கியலட்சுமி தேவ்ராஜை அடித்ததையும் கூறி, இதுதான் காதலா என்று நியாயம் கேட்கிறாள்.

நியாயமா இது?

நியாயமா இது?

இதைப் பார்த்தும், வனிதா பேச்சை கேட்டும் மனது மாறிவிடுகிறான் ரவி. இனிமேலும் உன்னை பிரிய மாட்டேன் பஞ்சு, ஐ லவ் யூன்னு சொல்றான். நாளைக்கு வீட்டுக்கு வா எல்லாத்தையும் வீட்டில் சொல்லிடலாம்னு சொல்றான். வயது வித்தியாசம் இல்லாமல், அதுவும் அவர் கடையில் வேலை பார்க்கும் பெண் ,கணவன் ரவியின் அண்ணன், பாக்கியலட்சுமி பெரிதாக மதிக்கும் மகாக்காவின் புருஷனை கை நீட்டி அடித்த பெண், நான் என்ன தப்பு செய்திருந்தாலும் என்னை அடிங்க.. திட்டுங்க.என் கூட பேசாமல் மட்டும் இருந்துடாதீங்க ரவின்னு அழறா.

முற்றிலும் கோணல்

முற்றிலும் கோணல்

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல கதையின் போக்கு இருக்கிறது. ரிஜிஸ்டர் அலுவலகத்துக்கு தேவராஜ் வந்தவுடனே அவரிடம் பேசாமல் ஒடி போயி உள்ளே இருக்கும் ரவியை கூப்பிட்டு இருக்க வேண்டும். இத்தனை பெரிய பிரச்னையை ரவி இல்லாமல் தாத்தா பேத்திகள் டீல் செய்ய முயற்சிதத்து பெரிய தப்பு இல்லையா? செய்வது திருட்டு கல்யாணம்,இதில் கோபம் வேறு எப்படி வரும்,பயம் வராமல்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+