முன்னணி ஹீரோயின்.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை அடுத்து சிக்கும் பிரபலம்? பிரதீப், கெவினிடம் பரபர விசாரணை
சென்னை வார இறுதி நாட்களில் சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் கொகைன் போதைப்பொருட்களுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைகட்டுவதாக தகவல்கள் பரவிவந்தன. இதனையடுத்து போலீஸார் அதிரடி வேட்டையை நடத்தினர், அப்போதுதான் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் கிருஷ்ணா சந்தேக வலைக்குள் வந்துள்ளார்.. இதையடுத்து பல திரைப்பலங்களுக்கும் இதில் தொடர்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், நடிகை ஒருவரிடம் விரைவில் விசாரணை நடத்தவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன
நடிகர் ஸ்ரீகாந்த் கைதுக்கு பிறகு, போதைப்பொருள் வழக்கில் தற்போது சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். கொக்கைன் போன்ற ஹை-டெக் போதைப்பொருளை விற்பனை செய்பவர்கள், அதனை உபயோகப்படுத்துபவர்கள், என மொத்த பேரையும் போலீசார் லிஸ்ட் எடுத்து வருகிறார்கள்..

நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குரூப்பில் இடம் பெற்றுள்ள நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் யார் யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணா கைதுக்கு பிறகு, பிரபலமான 3 எழுத்து நடிகர்கள் 2 பேர், பிரபல நடிகைகள், 4 எழுத்து இசையமைப்பாளர் போன்றோரின் பெயர்களும், இந்த விவகாரத்தில் அடிபட்டு வருகிறது. அதுகுறித்த விபரங்களையெல்லாம் தனிப்படை போலீஸார் தொடர்ந்து சேகரித்து வருவதாகவும், சில ரகசிய குறியீடுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அவைகள் குறித்தும் விவரங்களை போலீஸார் திரட்டி வருவதாகவும் செய்திகள் வண்ணம் வந்தம் இருந்தன..
கோர்ட்டில் மனு தாக்கல்?
எனவே, பிரசாத், பிரதீப்குமார், நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்தால்தான், இதுகுறித்த உண்மைகள் வெளிவரும் என்றும் 2 நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இதுகுறித்து கூடுதல் தகவல் ஒன்று கசிந்துள்ளது.. அதாவது, கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ் நடிகர்-நடிகைகள் பலருக்கு அவர்கள் போதைப்பொருட்களை சப்ளை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறதாம்.. அந்தவகையில், இப்போது போதைப்பொருள் வழக்கில் முன்னணி தமிழ் நடிகை ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது,
நீண்ட காலமாக ஹீரோயின்
நீண்ட காலமாக கதாநாயகியாக நடித்து வரும் அந்த தமிழ் நடிகை இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அந்த நடிகைக்குதான் தற்போது போலீசார் வலை விரித்துள்ளனர்.. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இதனிடையே போதைப்பொருட்களை விற்பனை செய்த பிரதீப், கெவின் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.. இதற்கு அனுமதி கேட்டு கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனராம்.. அப்படி 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, குறிப்பிட்ட முன்னணி நடிகை மட்டுமின்றி , சினிமா உலகில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவல் சினிமா வட்டாரத்தை கதிகலங்க வைத்து வருகிறது.
தயாரிப்பாளர்களின் கதி?
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேசன் இந்த விவகாரம் குறித்து கூறும்போது, 3 எழுத்து நடிகர்கள் 2 பேர், 3 எழுத்து நடிகைகள் 2 பேர், 4 எழுத்து இசையமைப்பாளர் என்று பலரது பெயர்கள் தொடர்ந்து அடிபட்டவாறே உள்ளது.. அப்படியிருக்கும்போது பெரிய நடிகர்களை வைத்து தயாரிப்பாளர்கள் எப்படி படம் எடுப்பார்கள்? இப்போது 2 நடிகர்கள் கைதுக்கு பிறகு, தயாரிப்பாளர்களுக்கே ஒருவித பயம் சூழ்ந்து கொண்டுவிட்டது..
யாருமே தங்களது பாக்கெட்டில் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு படம் தயாரிப்பதில்லை.. வட்டிக்கு வாங்கிதான் தயாரிக்கிறார்கள்.. எனவே, நடிகர்கள், நடிகைகள், தங்கள் சேஃப்டியையும், தங்களை நம்பும் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பையும் உணர வேண்டும் என்று கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
போதைப்பொருட்களை விற்பனை செய்த பிரதீப், கெவின் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.. இதற்கு அனுமதி கேட்டு கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனராம்.. அப்படி 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, குறிப்பிட்ட முன்னணி நடிகை மட்டுமின்றி, சினிமா உலகில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவல் சினிமா வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications