Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Joy Christilla: தனக்கும், குழந்தைக்கும் எதிராக மாதம்பட்டி ரங்கராஜன் தொடர்ந்த வழக்கு! ஜாய் கிறிஸ்டில்லாவின் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லா, 'திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாகப்' பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்த விவகாரம், நீதிமன்றத்தில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இரு தரப்பினரையும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

Madhampatty Rangaraj vijay tv cook with comali

விவகாரத்தின் பின்னணி

கடந்த ஜூலை மாதம், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிறிஸ்டிலா இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனை வெளியிட்ட ஜாய், தனக்கும் ரங்கராஜுக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும், தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த மாதமே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, அவர் மீது மகளிர் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

குழந்தை பிறப்பு

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, ஜாய் கிரிசில்டாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, மகளிர் ஆணையம், அந்தக் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என விசாரணையில் ஒப்புக்கொண்டதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை ஆணையருக்கும், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையருக்கும் ஒரு பரிந்துரை கடிதத்தை அனுப்பியது.

ரங்கராஜின் மறுப்பு

ஆனால், "தான் அப்படி எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை" என்று மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டதுடன், "டி.என்.ஏ. டெஸ்ட் மூலம் குழந்தை என்னுடையது என நிரூபிக்கப்பட்டால், அக்குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ளத் தயாராகவுள்ளேன்"என்றும் விளக்கமளித்தார்.

அவதூறு வழக்கு

இந்த விவகாரம் தொடர்ந்து அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர, ஜாய் கிறிஸில்டாவிற்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த ஒரு வழக்கு நேற்று நீதிபதி செந்தில்குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. "என்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஜாய் அவதூறு கருத்துக்களைத் தெரிவிக்கத் தடை விதிக்க வேண்டும். என்னுடைய நற்பெயரைப் பாதிக்கும் வகையில் அவதூறான வீடியோக்களை வெளியிட்ட யூடியூப் சேனல்களுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ரங்கராஜ் தரப்பு வாதம்

ரங்கராஜ் தரப்பில், "ஜாய் கிறிஸில்டாவிற்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்க வேண்டும், அதில் நான்தான் தந்தை எனத் தெரிய வந்தால், அந்தக் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் தான் ஏற்றுக் கொள்வதாக" உறுதியளிக்கப்பட்டது.

இந்த வழக்கு சூடுபிடித்திருக்கும் நிலையில், ஜாய் கிறிஸில்டாவுக்கு ஆதரவாக சிலர் பேசிய கருத்துகள் மற்றும் போஸ்ட்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பகிர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜை 'டேக்' செய்திருப்பது, இந்த விவகாரத்தின் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எழுத்துப்பூர்வமாகத் தங்களது வாதங்களை வரும் 14ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+