மாதம்பட்டி ரங்கராஜுக்கு நிஜமா திருமணமா? கணவன் மீது மனைவியின் நம்பிக்கை.. இமான் ஜென்டில்மேன்: பிரபலம்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய பேட்டி ஒன்றில், "என் குடும்பத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எதுவும் பேச விரும்பவில்லை. அப்படியே பேசியாகணும் என்ற காலகட்டம் வந்தால் அதை நானே பொதுவெளியில் விளக்கமாக சொல்லுவேன்" என்று நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல பதிலை சொல்லியிருந்தார். ஆனாலும், மீண்டும் ரங்கராஜ் குறித்த பரபரப்பு கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
Voice of King 2.0 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் வீட்டு திருமணம், ரஜினி வீட்டு கல்யாணம், அமைச்சர்கள் வீட்டிலும் சமையல் செய்துள்ளார். மாதம்பட்டி என்பது சிவக்குமாருக்கு மட்டும் சொந்தமில்லை.. மாதம்பட்டி சிவக்குமார் என்பவர் சத்யராஜின் பெரியப்பா மகன்.. மாதம்பட்டி சிவக்குமாரின் மகன்தான் காமெடி நடிகர் சத்யன்..

அதே ஊரை சேர்ந்தவர்தான் ரங்கராஜ்.. இவரது அப்பாவும் மிகப்பெரிய சமையல் நிபுணர்.. ஆனால், தங்கள் கலையை வானளாவ கொண்டு சென்றது ரங்கராஜ்தான். கடுமையான உழைப்பாளி.. 350 பேர் வேலை பார்க்கிறார்கள். இவரது அக்கா ஐஸ்வர்யாவும், இதே தொழிலை செய்து வருகிறார்.
படு ஸ்மார்ட் ரங்கராஜன்
ரங்கராஜ் பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருப்பார்.. ஒல்லியாக அழகாக இருப்பார்.. ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.. திமுக மகளிரணி செயலாளராக இருப்பவர் ஸ்ருதி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் விவாகரத்தான பெண்களிடம் நட்பு கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் இவர்மீது எழுகின்றன.. மனைவியை விவாகரத்து செய்யப்போவதாகவும், காஸ்ட்யூம் டிசைனரை 2வது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வந்தன.
பெண் காஸ்ட்யூமர்
சம்பந்தப்பட்ட பெண் காஸ்ட்யூமர் ஏற்கனவே ஒரு டைரக்டரை திருமணம் செய்து, விவாகரத்தானவர்.. குழந்தைகளும் உள்ளன.. ஆனால், மேல்நாட்டு கலாச்சாரத்தை நினைத்து கொள்வதால், இதுபோன்ற பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பற்றி யாரும் நினைப்பதில்லை.. அதேசமயம், பெரும்பாலும் விவாகரத்து என்றாலே ஆண்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதைத்தான் இசையமைப்பாளர் இமான் உடைத்து பேசியிருந்தார்.. விவாகரத்து என்றாலே ஆண் சமூகத்தின் மீதுதான் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தவறுகள் யார் மீது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. தனிப்பட்ட முறையில் விவாகரத்து கூடாது என்பதுதான் எனது எண்ணம் என்று கூறியிருந்தார்.
மனைவியின் அதீத நம்பிக்கை
இமான் மிகவும் டீசண்டானவர்.. ஒரு ஜென்டில்மேன்.. அவரது விவாகரத்து முடிவினை அன்றைய தினம்தான் வெனியே சொன்னார். ஆனால், மற்றவர்கள், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினாலே வெளியே சொல்லிவிடுகிறார்கள்.. அப்படித்தான், ரங்கராஜன் விவகாரத்திலும் இப்படியான கிசுகிசு வட்டமடிக்கிறது. எனினும், இப்படியொரு விவாகரத்து நடக்காது, அது திருமணம் வரை போகாது என்பதில், ஸ்ருதி ரங்கராஜன் மிகவும் உறுதியாக இருக்கிறார்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதைத்தான் 2 நாட்களுக்கு முன்பு Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கூறியிருந்தார்.. "மாதம்பட்டி ரங்கராஜுக்கு இப்போது மார்க்கெட் உள்ளதால், இப்படியெல்லாம் புகார்கள், சலசலப்புகள், வதந்திகள் வரலாம்..
ஆனால், இதுபோன்றவர்கள் மீண்டும் மனைவி, பிள்ளைகளிடமே வந்து சேர்ந்துவிடுவார்கள்.. பலருக்கும் இப்படி நடந்துள்ளது.. மனைவியை பிரிந்து சென்றிருக்கக்கூடாது என்று வெளிப்படையாகவே தவறுகளை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.. டைவர்ஸ் செய்தாலும்கூட, மீண்டும் தங்களது குடும்பத்திடம்தான் வந்து சேர்வார்கள்" என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications