Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம்பட்டி ரங்கராஜூக்கு அவருடன் கல்யாணமா? சின்ன வயதிலேயே சக்ஸஸ்.. கடைசியில் இதான் நடக்கும்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ், இந்த சின்ன வயதில் முன்னேறியிருப்பதை பாராட்டலாம். ஒரு துறையில் முன்னுக்கு வருவது என்பது இன்றைய காலத்தில் சாதாரண விஷயமில்லை.. சமையல் கலையில் ஏற்கனவே பல ஜாம்பவான்கள் இங்கு இருந்தாலும், அவர்களுக்கு நடுவில் வென்றுள்ளார், சினிமாவிலும் 2 படங்களிலும் நடித்துவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்ற வழக்கறிஞருடன் திருமணம் முடிந்து 2 மகன்கள் உள்ளனர்.. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி பல சர்ச்சையான கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

Television Madhampatti Rangaraj actor madhampatti rangaraj

காஸ்ட்யூம் டிசைனர்

காஸ்ட்யூம் டிசைனராக இருக்கும் பெண் ஒருவர் மாதம்பட்டி ரங்கராஜை விரும்புகிறாரா? என்ற கேள்வி வலுத்தது.. காரணம், ரங்கராஜுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, காதலர் தினத்தில் அவர் தனக்கு கொடுத்த கிப்ட் என்று பதிவிட்டிருந்தார். அத்துடன், தன்னுடைய பெயருக்கு பின்னால் ரங்கராஜ் என்பதையும் சேர்த்து, ரங்கராஜ் தான் தன்னுடைய உயிர் என்றும் போஸ்ட் போட்டிருந்தார்.

இதற்கு பிறகுதான், ரங்கராஜ் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, காஸ்ட்யூம் டிசைனரை 2வது திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்ற சந்தேகத்தை சோஷியல் மீடியாவில் எழுப்பியது.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

அப்போது ரங்கராஜ் ஒரு பேட்டியில், "என் குடும்பத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எதுவும் பேச விரும்பவில்லை. அப்படியே பேசியாகணும் என்ற காலகட்டம் வந்தால் அதை நானே பொதுவெளியில் விளக்கமாக சொல்லுவேன்" என்று நச்சென பதில் சொன்னார்.. அதேபோல, ரங்கராஜின் மனைவி தன்னுடைய குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து, "நான் தான் ரங்கராஜின் மனைவி" என்று கமெண்ட் செய்தார்.. மேலும், "பொறுமை கண்ணியத்தை நிலை நிறுத்துகிறது" என்று மற்றொரு போஸ்ட் போட்டு நிலவிவந்த வதந்திகளுக்கெல்லாம் பதிலடி தந்தார்.

ஜாம்பவான்கள் மத்தியில்

இந்நிலையில் Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், "மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக 2 படம் நடித்துள்ளார்.. சமையல் கலை நிபுணர்.. ஆனால், லட்சாதிபதிகளின் வீடுகளில் சமைக்க மாட்டார்.. கோடீஸ்வரர்களின் வீடுகளில் மட்டுமே சமைக்க போவார்..
எனினும் இந்த சின்ன வயதில் முன்னேறியிருப்பதை பாராட்டலாம். ஒரு துறையில் முன்னுக்கு வருவது என்பது இன்றைய காலத்தில் சாதாரண விஷயமில்லை.. சமையல் கலையில் ஏற்கனவே பல ஜாம்பவான்கள் இங்கு இருந்தாலும், அவர்களுக்கு நடுவில் வென்றுள்ளார், சினிமாவிலும் 2 படங்களிலும் நடித்துவிட்டார்.

வாழ்க்கைத்தரம் - ஸ்டேட்டஸ்

தான் கல்யாணம் செய்யும்போது, ஒரு ஸ்டேட்டஸில் இருந்த மாதம்பட்டி ரங்கராஜன்,இன்று மிகப்பெரிய ஆளுமையாக மாறிவிட்டதால், அந்த ஆளுமைக்குரிய வாழ்க்கை துணையை தேடலாம். நடுத்தர மக்களுக்குதான் ஒரே கல்யாணம், ஒரே மனைவி என்று வாழ்ந்தாக வேண்டும். ஆனால், இதுபோன்ற பிரபலங்களுக்கு, பணம் சேர்ந்ததுமே, அந்த பணத்துக்கேற்ற வாழ்க்கைத்தரமும் சேர்ந்தே உயர்கிறது.. அந்த தரத்துக்கேற்ற பெண்ணாகவும் தேடலாம்.

அன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவனில் சமைத்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.. அப்போதுதான் நிறைய சினிமா நபர்கள் பழக்கமாகியிருக்கிறார்கள்.. அப்படி தான் சினிமா துறைக்குள்ளும் நுழைந்துள்ளார்.. அப்படி சினிமா வட்டாரத்தில் பழகும்போது, நட்பு அடிப்படையில் பழகுவதுண்டு.. ஆனால், அது காதல் கிடையாது.

விவாகரத்தான பெண்கள்

ஆனால், திரைத்துறையில் உள்ள விதவைகள், விவாகரத்தான பெண்களை, மாதம்பட்டி ரங்கராஜன் குறி வைப்பதாக செய்திகள் கசிந்தன.. குறி வைப்பது என்று சொல்வதே தவறான வார்த்தை.. மாதம்பட்டி ரங்கராஜையே ஏன் குறை சொல்ல வேண்டும்? மற்ற பெண்களும் இவரை நாடி வரலாமே?

அதேபோல, சினிமா வட்டாரங்களிலிருந்து நட்பு கிடைத்ததுமே, தன்னுடைய குடும்பத்தை மறந்துவிட்டதாக சொல்கிறார்கள். சினிமா துறையில் இதுபோன்ற கணவர்கள் இருந்தாலும், சில மனைவிகள் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஆனால், மானம், ரோஷம், பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் தரும் பெண்கள், சொத்து, சுகம் எதுவும் வேணாம், கணவன் தனக்கு மட்டுமே இருந்தால் போதும் என்று நினைப்பார்கள்.. மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி இப்படிப்பட்டவர்தான்.. தன்னுடைய கணவனை எங்குமே விட்டுக்கொடுக்காமல் உள்ளார்.

மீண்டும் குடும்பத்துடன் சேருவார்கள்

மாதம்பட்டி ரங்கராஜுக்கு தற்போது மார்க்கெட் உள்ளதால், இப்படியெல்லாம் புகார்கள், சலசலப்புகள், வதந்திகள் வரலாம்.. ஆனால், இதுபோன்றவர்கள் மீண்டும் மனைவி, பிள்ளைகளிடமே வந்து சேர்ந்துவிடுவார்கள்.. பலருக்கும் இப்படி நடந்துள்ளது.. மனைவியை பிரிந்து சென்றிருக்கக்கூடாது என்று வெளிப்படையாகவே தவறுகளை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.. டைவர்ஸ் செய்தாலும்கூட, மீண்டும் தங்களது குடும்பத்திடம்தான் வந்து சேர்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+