திரிஷா, நயன்தாராவை விட அதிக சம்பளம்! அதுவும் இத்தனை கோடி? "டியூட்” மமிதா பைஜூ ஓபன் ஆக சொல்லிட்டாரே
சென்னை: தமிழ் திரையுலகில் தற்போது கோலிவுட், மல்லுவுட் எனப் பல மொழி நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மலையாளத் திரையுலகில் இருந்து வந்து பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து 'டியூட்' திரைப்படத்தில் நடித்த நடிகை மமிதா பைஜு, தற்போது அதிகச் சம்பளம் வாங்குவதாகக் கிளம்பிய சர்ச்சைக்கு மனம் திறந்து விளக்கம் அளித்துள்ளார்.

டியூட்டின் வசூல் வெற்றி
'பிரேமலு' மற்றும் 'சூப்பர் சரண்யா' போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மமிதா பைஜு, அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், வசூலில் படுவேகமாக முன்னேறி வருகிறது. 'டியூட்' திரைப்படம் திரைக்கு வந்த ஐந்து நாட்களில் இந்தியாவில் மட்டும் சுமார் 51 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
15 கோடி சம்பள சர்ச்சை
'டியூட்' படத்தின் வசூல் வெற்றியின் மத்தியில், மமிதா பைஜுவின் சம்பளம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. 'டியூட்' படத்தில் நடிக்க மமிதா பைஜுவுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில், இத்தனை வருடங்களாகத் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் த்ரிஷா, நயன்தாரா போன்றவர்களுக்கே படம் ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் கிடைத்தது இல்லை.
மமிதாவின் விளக்கம்
இது குறித்து மமிதா பைஜுவிடம் கேட்கப்பட்டபோது, அவர் உண்மையை உடைத்துச் சொன்னார்: "நான் டியூட்டுக்காக 15 கோடி எல்லாம் வாங்கவில்லை. சோஷியல் மீடியாவில் வருவது எல்லாம் உண்மை இல்லை. 15 கோடி கேட்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாரா மமிதா என்று கூட ஒரு கமெண்ட் பார்த்தேன்" என்று தெரிவித்து, அந்தச் செய்திகளை எல்லாம் 'பொய்' என்று உறுதிப்படுத்தினார்.
டாக்டர் கனவை உதறிய மமிதா
நடிகை ஆவது மமிதா பைஜுவுக்குச் சிறுவயது ஆசை இல்லை. அவர் ஆரம்பத்தில் கண்ட கனவு வேறொன்று: மமிதாவின் தந்தை ஒரு டாக்டர் என்பதால், தானும் ஒரு நாள் டாக்டராகி, 'கைராசிக்காரி' என்று பெயர் எடுக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாராம். ஆனால், 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய அப்பாவின் நண்பர் தயாரித்த 'சர்வோபரி பாலக்காரன்' (Sarvopari Palakkaran) படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அப்படித் தான் எதிர்பாராத விதமாக அவர் நடிகையாகிவிட்டார்.
டாப் ஹீரோக்கு ஜோடி
ஒரு மலையாளியாக இருந்தாலும், வெயிட்டான கதாபாத்திரத்தை நம்பித் தந்த இயக்குநர் கீர்த்தீஸ்வரனை மறக்கவே மாட்டேன் என்று மமிதா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். 'டியூட்' படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, நடிகர் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என்று கூறப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்திலும் மமிதா பைஜு நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களிலும் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications