ரஜினிகாந்த் அந்த பிரபலத்தை தவிர்த்தாரா? கமல்ஹாசனின் ஈகோ.. 46 வருடங்கள் கழித்து.. இப்படியொரு சிக்கலா?
சென்னை: கமல்ஹாசன் சமீபத்தில் பேசியபோது, ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறியிருந்தார்.. தனித்தனியாக இருவருக்கும் பிஸ்கட் வேண்டுமென்று நினைத்த நாங்கள், இப்போது ஒரே பிஸ்கட்டை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்ளத் தயாராகிவிட்டோம் என்றும் கதை வடிவில் விளக்கம் சொல்லியிருக்கிறார். இருவரும் இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு குஷியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வரும்நிலையில், இதுகுறித்து பிரபல தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "ரஜினி-கமல் இணைந்து எடுக்கும் படத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள், பிரச்சனைகள் இருக்கின்றன...
காரணம், ரஜினியும் மிகப்பெரிய ஆளுமை, கமலும் மிகப்பெரிய ஆளுமை.. இருவருமே வேறு வேறு துருவங்களாக உள்ளனர்.. எனவே இருவரையும் இணைப்பது கஷ்டம்..

இரு துருவங்கள்
ஆரம்ப கட்டங்களில் 16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது என பல படங்களில் இணைந்து நடித்திருந்தார்கள்.. அந்த அளவுக்குதான் இவர்களுக்கு அன்று மார்க்கெட் இருந்தது.. ரசிகர்களும் இருந்தனர்..
ஒரு கட்டத்தில் நாம் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று 2 பேருமே பேசி வைத்துதான் முடிவெடுத்தனர்.. அதற்கு பிறகு இந்த 46 வருடங்களாக இருவருமே சேர்ந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.
லாபத்தில் பங்கு
இந்நிலையில்தான் இருவரும் தற்போது இணைந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின்றன.. இந்த பேச்சுவார்த்தை கடந்த, 2, 3 வருடங்களாகவே இருந்து வருகிறது.. இருவரும் சேர்ந்து நடிப்போம் என்ற முடிவை ரஜினியிடம் சொன்னதே கமல்தான்..
இதற்காக ரஜினியிடம் கமலும் தேதி கேட்டபடி இருந்தார்.. 2 பேருக்குமே இன்றும் பெரிய மார்க்கெட் உள்ளதால், இதனை ஒன்றாக்கி பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து, வரும் லாபத்தையும் தாங்களே எடுத்துக் கொள்ளலாம் என்று ரஜினியிடம் கமல் சொன்னதாக தெரிகிறது. இதுகுறித்து சமீபத்தில்கூட ரஜினியிடம் பேசியதற்கு, கமலும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது.
ரஜினி மாஸ் - கமல் கிளாஸ்
இவர்கள் இருவரையும் வைத்து படம் எடுக்கும்போது, இருவருக்குமே பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.. ரஜினி மாஸான நடிகர், கமல் கிளாஸான நடிகர்.. இருவருமே போட்டி நடிகர்களாக இன்றுவரை பார்க்கப்படும்போது, இருவரையுமே திருப்திப்படுத்தக்கூடிய கதை இருக்கா? என்பது கஷ்டம்தான்.. கதையை இனிமேல் உருவாக்கினாலும், இருவருக்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்குமா தெரியவில்லை..
கமலை பொறுத்தவரை, தன்னுடைய படங்களில் தன்னை மட்டுமே ஹைலைட் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.. தன்னைவிட, வேறு யாருக்காவது முக்கியத்துவம் தரப்பட்டிருந்தால், அந்த சீன்களை எடிட்டிங்கில் தூக்கிவிட சொல்வார்..
தனக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று கமல் நினைப்பவர்.. ஒரு படத்தின் வெற்றி தன்னால்தான் வெளிவந்தது என்பதை வெளிப்படுத்தி கொள்ளக்கூடியவரும்கூட. இந்த இயல்பான குணத்திலிருந்து கமல் வெளியே வருவாரா? ரஜினிக்காக விட்டுத்தருவாரா தெரியாது.
ரஜினி - கமலின் குணம்
அதேபோல ரஜினியை பொறுத்தவரை, தனக்கான இடத்தை வேறு யாருக்காகவும் விட்டுத்தந்ததில்லை.. படம் எடுக்கும்போதே, அந்த படத்தில் யார் யாருக்கு என்னென்ன முக்கியத்துவம், யார் யாருக்கு என்னென்ன டயலாக் உள்ளது? என்பதையெல்லாம் முன்கூட்டியே டைரக்டர்களிடம் ரஜினி தெளிவாக கேட்டு தெரிந்து கொள்வார்.
பிறகுதான் அந்த படத்தில் நடிக்கவே டைரக்டருக்கு அனுமதி தருவார் ரஜினி.. ஒருவேளை தன்னை தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் தரக்கூடாது என்று நினைப்பவர் ரஜினி..
சிவகார்த்திகேயனுக்கு நோ
இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனை, ரஜினியின் மகன் கேரக்டருக்கு நடிக்க வைக்கலாம் என்று நெல்சன் சொன்னதற்கு, ரஜினி மறுத்துவிட்டாராம்..
கூலி படத்தில் சின்ன வயது ரஜினியாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என்று லோகேஷ் கனகராஜ் கேட்டதற்கும், ரஜினி அங்கேயும் மறுத்துவிட்டார்.. பான் இந்தியா படமாக இருந்தாலும், வேறு மாநில பிரபலங்கள் வந்து நடிக்க அனுமதி தந்தவர்,
ஹீரோக்களின் ஈகோ
தமிழில் டாப் ஸ்டாராக உள்ளவரை நடிக்க வைக்க ரஜினி ஏற்கவில்லை. ரஜினி படம் என்பது ரஜினியால்தான் ஓட வேண்டும் என்று நினைப்பார்.. கமலுமே தன்னுடைய டிரேட் மார்க்கை விட்டுத்தர மாட்டார்.. இவையெல்லாம் ஹீரோவின் ஈகோவாகும்.. இதில் தவறில்லை.
அந்தவகையில், கமல், ரஜினி இருவருமே ஒரே மாதிரியான எண்ணம் கொண்டவர்கள்.. இப்படி ஈகோ பிரச்சனைகள் இருக்கும்போது, இவர்கள் இருவருக்கும் உடன்படுவது போன்ற கதையை தயார் செய்ய வேண்டும்.. அது ரொம்ப ரொம்ப கஷ்டம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications