Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரைந்த சர்க்கரை பந்தல்.. தேனிலவு மனைவியின் மாஸ்டர் பிளான்.. இவர்தான் மெயின்! உடைத்து பேசிய பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதுமே பொய் என்பது சர்க்கரை பந்தல் போலதான்.. அது கரைந்துவிடும்.. இந்த காம கொலைகள் அனைத்துமே உளவியல் சிக்கல்தான்.. இது அனைத்துமே நீதியின் கண்களில் இருந்து தப்ப முடியாது.. எங்காவது ஓரிடத்திலிருந்து நீதிதேவதை கவனித்து கொண்டுதான் இருக்கிறாள்.. அதிலிருந்து யாருமே தப்ப முடியாது" என்று மேகாலயா கொலை சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். அப்போது, மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை.

Television Meghalaya Honeymoon

ஆபரேஷன் ஹனிமூன்

'ஆபரேஷன் ஹனிமூன்' என்ற பெயரில் மேகாலயா காவல் துறை விசாரணையை தொடங்கியது. 120 போலீஸார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் 20 பேர் மூத்த அதிகாரிகள் ஆவர்.

தனிப்படைகளைச் சேர்ந்தவர்கள் மேகாலயா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர விசாரணை நடத்தினார்கள்..

பலே போலீஸார்

அத்துடன், சோனத்தின் செல்போன் அழைப்புகள், சோஷியல் மீடியா பதிவுகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் புலன் விசாரணை மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. மேகாலயாவில் 200 அடி பள்ளத்தில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மனைவியே கள்ளக்காதலனுக்காக கூலிப்படை வைத்து கொன்றதும் அம்பலமானது.. நாடு முழுவதும் இந்த கொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து, Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "இதெல்லாம் தூய்மையான காதல் என்று சொல்ல முடியாது.. காமம் கலந்த காதல் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.. காதலித்த பெண்ணுடன் ஒன்று சேர முடியாவிட்டாலும், அவர் நன்றாக இருக்கட்டும் என்று கணவனுடன் நல்லபடியாக அனுப்பி வைத்துவிடுவார்கள்.. காமத்தால் இணையும் காதல் களங்கப்படும்..

காமம் மட்டுமே பிரதானம்

காதலனுக்காக கணவரையே கொல்லக்கூடிய விஷயம், உண்மையான காதல் கிடையாது.. இங்கு பிரதானமாக இருப்பது காமம் மட்டுமே..

இந்த தம்பதியை பொறுத்தவரை, திருமணமாகி 16 நாட்கள் ஆகிறது.. ஹனிமூன் போகலாம் என்று பிளான் பண்ணியதே மனைவிதான்.. 5 வயது குறைவுள்ள பையனுடன் அப்பெண்ணுக்கு காதல் இருந்திருக்கலாம், அந்த காதல், பெண்ணின் வீட்டுக்கு தெரிந்து, மொத்தமாக மூடிமறைத்து இந்த திருமணத்தை செய்திருக்கலாம். இது உளவியல் சிக்கல்.. நாம் செய்வது தவறு என்று அறிவுக்கு தெரியும், ஆனால், இதயம் கேட்பதில்லை..

இதயம் அறிவை வழிநடத்திவிடுவதால் வரும் ஆபத்துதான் இதுபோன்ற கொலை.,. முதல் காதல் போல முதல் காமம் யாராலும் மறக்க முடியாது.. திருமணத்துக்கு முன்பு காமம் கிடைக்கும்போது, திருமணமானதும், கணவனுடன் ஒப்பிட தொடங்கிவிடுவார்கள்.. ஆனால் இந்த பெண், திருமணமான நாளிலிருந்து கணவனுடன் சந்தோஷமாகவே இருந்ததாக உறவினர்கள் சொல்கிறார்கள்.. அவர்கள் சொல்வது புறவாழ்க்கை..

தங்க நகைகள்

நகைக்காக கொலை செய்தது போல இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய நகைகளுடன் மனைவி ஹனிமூன் சென்றுள்ளார்.. 10 வருடம் முன்பு மூணாறு கொலையும் இப்படித்தான் நடந்தது.. புறவாழ்க்கை எப்படியிருந்தாலும், அகவாழ்க்கை பலருக்கும் கசப்பாகவே உள்ளது..

இது தெரியாமல், வெளியிலிருந்து பார்க்க., தம்பதி சிரிப்பதை வைத்து மட்டுமே, அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று எடை போட முடியாது.. பெற்றோர்கள்தான் பெருமளவு குற்றவாளிகள்.. தங்கள் மகளுக்கு இன்னொருவருடன் உறவு உள்ளதை, சமிக்ஞைகள் மூலமாக கூட தெரிந்து கொள்ள முடியாதா? எல்லாவற்றையும் காட்டி கொடுக்கும் செல்போன் மூலமாக தெரிந்து கொள்ள முடியாதா? எனவே பெற்றோர்களுக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது..

நகைகள் - அப்பாவி

ஹனிமூன் செல்லும் முன்பே, கல்யாணத்துக்கு போட்ட நகைகளை எல்லாம் போட்டுக்க சொல்லியிருக்கிறார் மனைவி.. அந்த அப்பாவியும் மனைவியை முழுமையாக நம்பியிருக்கிறார்.. இதெல்லாம் வெறும் துரோகம் கிடையாது, நம்பிக்கை துரோகம்..

ஒருவரை கடத்தி கொண்டு கொலை செய்வது என்பது வேறு.. ஆனால், காலம் முழுவதும் வாழவந்த மனைவியே தன்னை கொல்ல வந்திருக்கிறாள் என்று தெரியாமலேயே இறக்கக்கூடிய அப்பாவித்தனம், மிகவும் கொடுமையானது.. அடியாள், கூலிப்படை என்று எவ்வளவு சொன்னாலும், இதில் கொடூரமானவர் மனைவிதான்..

சர்க்கரை பந்தல்

கணவனை கொலை செய்தபின்பு, அதற்கு மேல் என்ன செய்வதென்று மனைவிக்கு தெரியவில்லை.. கொலை செய்தவர்கள் முழு தகவலை சொல்லிவிட்டதால், மனைவியும் கைதாக வேண்டியிருந்தது..

எப்போதுமே பொய் என்பது சர்க்கரை பந்தல் போலதான்.. அது கரைந்துவிடும்.. இந்த காம கொலைகள் அனைத்துமே உளவியல் சிக்கல்தான்.. இது அனைத்துமே நீதியின் கண்களில் இருந்து தப்ப முடியாது.. எங்காவது ஓரிடத்திலிருந்து நீதிதேவதை கவனித்து கொண்டுதான் இருக்கிறாள்.. அதிலிருந்து யாருமே தப்ப முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+