பூட்டி வச்ச தியேட்டர்களில் வெள்ளோட்டம்...!
சென்னை: லாக்டவுன் 40 க்கும் மேற்பட்ட நாட்கள் என்று நீடித்து வருகிறது. சினிமா தியேட்டர்களுக்கு முன்னதாகவே லாக்டவுன் ஆரம்பித்து...கிட்டத்தட்ட 2 மாதங்கள் தியேட்டர்கள் பூட்டியே கிடக்கின்றன.
இப்படி பூட்டியே கிடந்தாலும் தியேட்டர்களுக்கு ஆபத்துதான் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கவலையில் இருக்க, சில தியேட்டர்களில் எலிகள் புகுந்து இருக்கைகள்...சவுண்ட் சிஸ்டம் இவைகளை நாசம் செய்து விட்டதாகவும் உரிமையாளர்கள் புலம்புகிறார்கள்..
சின்ன சின்ன தியேட்டர்களில் ஆட்களை வைத்து, சுத்தம் செய்துவிட்டு, சவுண்ட் சிஸ்டம்.. போன்ற மற்றவைகள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்க்க , படங்களை திரையிட்டு வெள்ளோட்டம் பார்த்து வருகின்றனர்.

நம்பிக்கையே வாழ்க்கை
என்னதான் ஓடிடி இயங்குதளங்களில் புதுப்படங்ககளை ரிலீஸ் செய்கிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் திரைத்துறையின் மீது கோபத்தில் இருந்தாலும், லாக்டவுன் முடிந்தவுடன் அனைத்தும் சரியாகி விடும் என்கிற நம்பிக்கையில் இருக்கின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கும் சின்ன சின்ன தியேட்டர்களில் படங்களை ஓடவிட்டு வெள்ளோட்டோம் பார்க்கத் துவங்கி உள்ளனர்.

ஏஸி மற்றவை
தியேட்டர்களில் இருக்கைகள் நன்றாக இருக்கின்றனவா...தரை பராமரிப்பு, தண்ணீர் குழாய்கள் பராமரிப்பு, டாய்லெட் சுத்தம் என்று ஆட்களை வச்சு எல்லாவற்றையும் சரி செய்து வருகிறார்கள். கூடவே படம் திரையிடப்பட்டால் சவுண்ட் சிஸ்டம் முதற்கொண்டு அனைத்தும் நன்றாக வேலை செய்கிறதா என்பதையும் டெஸ்ட் செய்து வருகிறார்கள்.

சந்திரமுகி படம்
பெரும்பாலுமான தியேட்டர்களில் ரஜினி, பிரபு நடித்த சந்திரமுகி படத்தை தியேட்டரில் போட்டு சிறிது நேரம் ஓட்டி பார்க்கிறார்கள். இது தமிழகம் முழுவதுமான சின்ன சின்ன தியேட்டர்களில் எளிதாக செய்துவிட முடிகிறதாம். மால்களில் உள்ள தியேட்டர்களில் இது சாத்தியம் இல்லை என்று தியேட்டர் அதிபர்கள் கூறுகிறார்கள்.

லாக்டவுன் முடிந்தும்
லாக்டவுன் முடிந்தும் சினிமா தியேட்டர்கள் செயல்பட அனுமதி உண்டா... என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரியாமல் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரியான நிலைமையில் தியேட்டர் அதிபர்கள் இருக்கிறார்கள். ஓடிடி இயங்கு தளங்களில் படங்கள் ரிலீசாகி வருவது இவர்களை திகிலடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications