எனக்கு கல்யாணமா? சிரிப்பு சிரிப்பா வருதே.. நச்னு போஸ்ட் போட்ட அனிருத்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
சென்னை: காவ்யா மாறன், அனிருத் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் கசிந்தவாறே இருந்தது.. 4 நாட்களுக்கு முன்பிருந்தே இந்த தகவல் இணையத்தில் றெக்கை கட்டி பறந்தது.. ஆனால், இதுகுறித்து அனிருத் தரப்பில் இருந்தோ, காவ்யா மாறன் தரப்பில் இருந்தோ எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், அனிருத் இதற்கு மறுப்பு கூறி, பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
தனுஷின் 3 படம் மூலம் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் அனிருத். ஒய் திஸ் கொல வெறி பாடல் உலகப்புகழ்பெற்றதாக மாறிவிட்டது.. இளம் இசையமைப்பாளர்களில் அனிருத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கும் பிடித்துப்போகவும், தொடர்ந்து பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.

புகழின் உச்சியை எட்டினார்
இறுதியில், விஜய், அஜித், கமல் துவங்கி ரஜினி படங்களுக்கும் அனிருத் இசையமைத்து, புகழின் உச்சியையும் எட்டிவிட்டார். அதேபோல அனிருத் குறித்த பல சர்ச்சைகள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை தந்துவிடும்..
அந்தவகையில், கடந்த 4 நாட்களாகவே அனிருத்தின் திருமணம் குறித்த செய்திதான் டாக் ஆப் த டவுனாக இருந்தது.. அதாவது, இசையமைப்பாளர் அனிருத் , சன்டிவி காவ்யா மாறன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும், அமெரிக்காவில் இருவரும் சந்தித்து கொண்டதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் கசிந்தன.
தயாநிதி மாறன்
இந்த செய்திகளை மையப்படுத்தியே, சில மூத்த பத்திரிகையாளர்களும், கடந்த 4 நாட்களாகவே யூடியூப் சேனல்களில் பேட்டிகளை தந்தபடி இருந்தனர்.. அந்த பேட்டிகளில், "தயாநிதி மாறனின் ஒரே மகள் காவ்யா.. அமெரிக்காவில் எம்பிஏ படித்துள்ளார் .. சன்டிவி முழு நிர்வாகத்தையும் காவ்யா மாறன்தான் கவனித்து வருகிறார். மிகச்சிறந்த நிர்வாகியும்கூட.
SRH ஐபிஎல் போட்டியில் கூட இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.. காவ்யா குடும்பம் போலவே, அனிருத்தின் குடும்பமும் பாரம்பரியம் மிக்கது.. கலாநிதி மாறனும் மகளின் காதலுக்கு ஒகே சொல்லுவார்.. இது சம்பந்தமான பேச்சுவார்த்தையை, அனிருத் குடும்பத்தில் பெரியவரான ரஜினிகாந்த் நடத்தி வருகிறார்..
வதந்தியா? நிஜமா?
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. இதுகுறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்மான தகவலும் இதுவரை வரவில்லை.. இது வதந்தியாகவும் இருக்கலாம்" என்றெல்லாம் கூறியிருந்தனர்..
அனிருத் குறித்த தகவல் வெளியாகி 4 நாட்களாகியும், இருதரப்பிடமிருந்தும் எந்தவிதமான மறுப்பும், பதிலும் வராததால், மூத்த பத்திரிகையாளர்கள் யூடியூப்களில் பேசியிருந்த இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
தலையிட தேவையில்லை
இதற்கு நடுவில், பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் மட்டும் ஒரு சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், "தற்போதெல்லாம் சோஷியல் மீடியாவில் வரும் செய்திகளில் பாதி பொய்யாக உள்ளது.. அந்தவகையில், அனிருத் - காவ்யா விவகாரம் உண்மையா, பொய்யா என்றே தெரியவில்லை. அதற்குள் அதை பெரிதாக எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவேளை இருவரும் பழகினாலும், அதை நாம் கொச்சைப்படுத்த தேவையில்லை.. அது நட்பாக கூட இருக்கலாம். எதுவானாலும், இது ஒரு சம்பந்தப்பட்ட விஷயம்.. அதற்குள் நாம் போக தேவையில்லை" என்று கூறியிருந்தார்..
முற்றுப்புள்ளி
இந்நிலையில், அனிருத் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில், " கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலருக்கும் தெளிவை தந்துள்ளது.. அத்துடன் நிலவி வந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளியையும் வைத்துள்ளது.
அனிருத் இப்போது தமிழில் மட்டும் பல முக்கியமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி மற்றும் ஜெயிலர் 2, விஜய்யின் ஜன நாயகன், பிரதீப் ஆண்டனியின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்களாகும்.. இவைகளை தவிர, வேறு மொழிப் படங்களிலும் கமிட் ஆகி மிகவும் பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இப்போது தமிழில் மட்டும் பல முக்கியமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி மற்றும் ஜெயிலர் 2, விஜய்யின் ஜன நாயகன், பிரதீப் ஆண்டனியின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்களாகும்.. இவைகளை தவிர, வேறு மொழிப் படங்களிலும் கமிட் ஆகி மிகவும் பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications