மட்டன் கடை பாய்ன்னா மட்டமா போச்சா? கசாப்பு கடை பாயை "இழுத்து" வந்த AR ரஹ்மான்! திகைத்த டிடி: பிரபலம்
சென்னை: மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் இணைப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் பாடல்கள் மே 24ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது, இந்த படத்தின் புரமோஷன்கள் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.. இதுதொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தந்த பேட்டியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்துதான் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார். தக் லைஃப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானை, நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி பேட்டி எடுத்துள்ளார்.

பெரிய பாய் பாட்டு
அந்தப் பேட்டியில் "பெரிய பாய் பாட்டுக்கு யார் நோ சொல்வார்கள்" என்று பேச்சுவாக்கில் டிடி கூறினார.. உடனே ரஹ்மான், "பெரிய பாயா?" என்று கேட்டு சிரித்தார்.
அதற்கு டிடி "உங்களுக்கு தெரியாதா? சோஷியல் மீடியாவில் உங்களுடைய பெயரே அதுதான்" என்றார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் "அதெல்லாம் வேணாம். பெரிய பாய், சின்ன பாய் என்று அழைப்பதற்கு, நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? எனக்கு பிடிக்கலை" என்று நேரடியாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த வீடியோதான் இணையத்தில் பெரும் வைரலாகி கொண்டிருக்கிறது.
பாய் என்றால் சகோதரர்
இது தொடர்பாக BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிலை கேட்டதுமே எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.. முஸ்லிம்கள் என்றாலே பாய் என்பார்கள்.. "பாய்" என்றால், சகோதரர் என்று அர்த்தம்..
ஏஆர் ரஹ்மான் இந்து குடும்பத்தை சேர்ந்தவர்.. பிறகுதான் மதம் மாறினார்.. அவரது தாயார் உட்பட அனைவருமே மதம் மாறிவிட்டார்கள்.. வழக்கமாக இஸ்லாமியர்களை உரிமையாய் அனைவருமே "பாய்" என்று அழைப்பார்கள்.. அதை அவர்களும் சந்தோஷமாகவே ஏற்றுக் கொள்வார்களே தவிர யாரும் கோபித்து கொண்டதாக இதுவரை கேள்விப்பட்டதில்லை.
டிடி சொன்னதுமே பதில்
டிடியை பொறுத்தவரை உள்நோக்கத்துடன் பேசுபவர் கிடையாது, எப்போதுமே ஜாலியாக பேசுபவர்தான்.. அவர் சாதாரணமாக பெரிய பாய் என்று சொன்னதை, ரஹ்மான் எதுக்காக இவ்வளவு பெரிதாக ரியாக்ட் செய்தார்? ஏன் இவர் அடையாளப்படுத்திக்கிட்டாரு? கசாப்புக்கடை பாயா? என்று ஏன் கேட்ட வேண்டும்?
பஞ்சு விற்கிற பாய் என்றாலும், கறி விற்கிற பாய் என்றாலும், பாய் என்றாலே அது ஒன்றுதான்.. நானென்ன கசாப்பு கடை பாயா? என்று கேட்கிறாரே? கசாப்பு கடை பாய்ன்னா மட்டமா என்ன? ரஹ்மானிடம் இப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கவேயில்லை..
டாக்குமென்ட் பாய்
பாய் என்று யாரை கூப்பிட்டாலும், இதுவரை யாருமே அதற்கு எதிர்ப்பு சொன்னதே கிடையாது. . தப்பாகவே எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள்.. ஆனால், ரஹ்மான் மனசளவில் "பாய்" போல இன்னும் மாறவில்லையோ? டாக்குமென்ட் அளவில்தான் "பாய்" என்று மாறியிருக்கிறாரா? என்ற சந்தேககம் எனக்கு தோன்றியது..
ரஹ்மான் இயல்பாகவே மிக நல்ல மனிதன்.. அடுத்தவரை மதிக்கக்கூடியவர்தான்.. ஆனால், பேச தெரியாமல் , பக்குவங்கள் இல்லாமல் சிலசமயம் பேசிவிடுகிறாரோ? என்றும் எண்ண தோன்றுகிறது.. டிடி கேஷூவவலாக கேட்டதை, தன்னை கேலி செய்தது போல ரஹ்மான் எடுத்துக் கொண்டாரா? அப்படியே இருந்தாலும், கசாப்புக்கடைபாய்? என்று சொன்னார்?அதுதான் புரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications