சென்னை: இன்றைய தினம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கள நிலவரத்தை உடனுக்குடன் பார்க்கலாம்!
Oct 06, 2026, 6:06 pm IST
மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது! சட்டமன்ற தேர்தலை விட இடைத்தேர்தலில் குறைவாகவே வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
Oct 06, 2026, 5:39 pm IST
மதுராந்தகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு
மதுராந்தகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 83.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 87.84% வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது.
Oct 06, 2026, 3:36 pm IST
மதுராந்தகம் தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
Oct 06, 2026, 3:36 pm IST
கடந்த 2026 சட்டசபை தேர்தலில் இதே நேர நிலவரப்படி மதுராந்தகத்தில் 72.41 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது
Oct 06, 2026, 3:28 pm IST
Dharapuram: வாக்குச்சாவடியில் திடீர் மின்வெட்டு.. செல்போன் வெளிச்சத்தில் வாக்களித்த வாக்காளர்கள்!
More Details: https://t.co/6BbcQCLPS8
#Dharapuram #ByElection2026 #Powercut #NewsUpdate #Oneindia #OITamil https://t.co/La4C5q80CH
தாராபுரம் இடைத்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த 75 வயதான மூதாட்டி தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்றார்.
Oct 06, 2026, 2:33 pm IST
தாராபுரம் கொளிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலர் தங்கமணி மாற்றம் செய்யப்பட்டு, ராஜம்மாள் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Oct 06, 2026, 2:30 pm IST
திருப்பதியில் ஷோபா சந்திரசேகர் தரிசனம்
தவெக கட்சி இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி முதல்வர் விஜய்யின் தாயார் ஷோபா திருப்பதியில் தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
மகனின் தவெக கட்சி இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி முதல்வர் விஜய்யின் தாயார் ஷோபா திருப்பதியில் தரிசனம்!
#Tirupati #ShobhaChandrasekar #TVKVijay #Oneindia #OITamil #OIReels https://t.co/YjNEGyhDLX
மூதாட்டியிடம் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொன்ன அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். மூதாட்டி புகாரை அடுத்து, கொளிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அலுவலர் தங்கமணி மாற்றப்பட்டுள்ளார்.
Oct 06, 2026, 1:59 pm IST
Oct 06, 2026, 1:44 pm IST
தாராபுரம் தவெக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. சத்தியபாமா பேசிய வீடியோவை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த ஆஸ்டின்! வாக்காளர்களுக்கு காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என திமுக சார்பில் புகார்!
Oct 06, 2026, 1:20 pm IST
மதுராந்தகம் தொகுதியில் பகல் 1 மணி வரை 54% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தாராபுரத்தில் பகல் 1 மணிக்கு 55.23% வாக்குகள் பதிவாகியுள்ளது.
Oct 06, 2026, 1:16 pm IST
தண்டரை புதுச்சேரியில் வாக்குப் பதிவு நிறுத்தம்! மரகதம் குமரவேலுக்கு நேர் பட்டனில் கருப்பு மை!
More Details: https://t.co/o4JHXx2jEc
#TVKVijay #Maduranthakam #ByElection2026 #NewsUpdate #Oneindia #OITamil https://t.co/85cdva0k7w
மதுராந்தகம் இடைத்தேர்தல் வில்வராயநல்லூர் வாக்குச்சாவடி மையத்தில் திமுகவினர்–போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச்சாவடி மையத்திற்கு அருகே தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை மட்டும் போலீசார் அனுமதிப்பதாகவும், தங்களையும் வாக்குச்சாவடி மையம் அருகே அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி திமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வாக்குச்சாவடி மையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Oct 06, 2026, 11:53 am IST
மதுராந்தத்தில் வாக்குக்கு பணம் கொடுக்க வந்த தவெகவினர்? விரட்டியடித்த பொதுமக்கள்.. இரவில் பரபரப்பு
More Details: https://t.co/J8aYmsEu1W
#Maduranthagam #TVKVijay #ViralWatch #Oneindia #OITamil #OIReels https://t.co/haMQU4clLY
இடைத்தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது வாக்கை பதிவு செய்தார்!
Oct 06, 2026, 10:21 am IST
தாராபுரம் தொகுதியில் ஒரு கொழிஞ்சிவாடியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க சொன்னதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகாரளித்த மாற்றுக்கட்சியினர், வாக்குப்பதிவை நிறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Oct 06, 2026, 10:08 am IST
மதுராந்தகம் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தார்.
Oct 06, 2026, 9:52 am IST
காலை 9 வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடு: மதுராந்தகம் தொகுதியில் காலை 9 மணி வரை பொதுத்தேர்தலில் 16.55% பதிவாகி இருந்த நிலையில், தற்போது 15.99% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தாராபுரம் தொகுதியிலும் காலை 9 மணி வரை பொதுத்தேர்தலில் 18.88% பதிவாகி இருந்த நிலையில், தற்போது 17.55% வாக்குகள் மட்டுமே பதிவு!
Oct 06, 2026, 9:41 am IST
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு விவரம் வெளியானது. மதுராந்தகம் தொகுதியில் காலை 9 மணி வரை 15.99% வாக்குகள் பதிவு! தாராபுரம் தொகுதியில் காலை 9 மணி வரை 17.55% வாக்குகள் பதிவாகியுள்ளது.
Oct 06, 2026, 9:29 am IST
தாராபுரம் குண்டடம் பகுதியில் உள்ள தம்புரெட்டிபாளையம் கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே தவெக ஆதரவாளர்கள் சிலர் பணப்பட்டுவாடாவில் ஈடுப்டடதாக புகார் எழுந்துள்ளது. நடத்தை விதிகளை மீறிய தவெக ஆதரவாளர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Oct 06, 2026, 9:17 am IST
சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ உண்மை இல்லை. நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை. என்னை பற்றி வெளியான வீடியோ சித்தரிக்கப்பட்டது. தவெகவின் வெற்றி உறுதி என்பதால்தான் என்னை பற்றி பொய்யான வீடியோவை சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகாரளிக்கவுள்ளேன்- வைரலான வீடியோ குறித்த தவெக வேட்பாளர் சத்தியபாமா விளக்கம்
Oct 06, 2026, 9:03 am IST
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கை பதிவு செய்தார்!
READ MORE
6:08 AM, 6 Oct
தமிழகத்தில் காலியான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்குகிறது. வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
6:12 AM, 6 Oct
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் தற்போது இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
6:13 AM, 6 Oct
மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 285 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.
#WATCH | Chengalpattu, Tamil Nadu: Preparation underway for the Madurantakam Assembly constituency by-election. Polling will start at 7 am across 285 polling stations.
(Visuals from a polling station) https://t.co/evMnKpoI8X
தாராபுரம் தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. முக்கிய வேட்பாளர்கள்: சத்யபாமா (தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்), மற்றும் கார்த்திகா (நாம் தமிழர் கட்சி)
6:18 AM, 6 Oct
மதுராந்தகம் தொகுதியில் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
6:20 AM, 6 Oct
மதுராந்தகம் தொகுதியிலும் கடும் போட்டி நிலவுகிறது. முக்கிய வேட்பாளர்கள்: மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மற்றும் ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி)
6:25 AM, 6 Oct
தமிழ்நாட்டை போலவே மேற்கு வங்கத்தின் ரெஜினகர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
#WATCH | Murshidabad, West Bengal: Mock poll underway ahead of the Rejinagar Assembly constituency by-election at the polling Station No. 250. https://t.co/Wt23CHZzal
இன்னும் சற்று நேரத்தில், அதாவது சரியாக காலை 7:00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வாக்குப்பதிவு துவங்கவுள்ளது.
6:33 AM, 6 Oct
தாராபுரம் தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
6:39 AM, 6 Oct
அரசியல் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் நடந்த மாதிரி வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
6:47 AM, 6 Oct
தாராபுரம் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
#WATCH | Dharapuram, Tamil Nadu: Mock poll underway for the Dharapuram Assembly constituency by-election.
(Visuals from a polling station) https://t.co/jOXukX3Gk2
இன்னும் சில நிமிடங்களில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது.
6:55 AM, 6 Oct
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் (VVPAT), கட்டுப்பாட்டு அலகுகள் வாக்குச்சாவடிகளில் பொருத்தும் பணி நிறைவு!
6:57 AM, 6 Oct
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் சில நிமிடங்களில் வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்!
7:00 AM, 6 Oct
சரியாக காலை 7:00 மணி ஆனதும் திட்டமிட்டபடி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் தங்கள் வாக்குகளை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர்.
7:03 AM, 6 Oct
இரு தொகுதிகளிலும் காலை முதலே காத்திருந்து, மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
7:07 AM, 6 Oct
தாராபுரம் தொகுதியின் திமுக வேட்பாளர் சுகன்யா தனது வாக்கை பதிவு செய்தார்.
7:10 AM, 6 Oct
வாக்குச்சாவடிகளுக்கு காலையிலேயே வருகை தந்துள்ள முதியவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன.
7:14 AM, 6 Oct
தமிழகத்தை போலவே இடைத்தேர்தல் நடைபெறும் அசாம், மேற்கு வங்க மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
VIDEO | Voting begins for bypoll to Assam's Nagaon Lok Sabha seat amid tight security. Visuals from Morikolong Higher Secondary School polling station.
#NagaonBypoll #AssamNews
(Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) https://t.co/YemRB9iI2s
இரு தொகுதிகளிலுமே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்குச்சாவடிகளில் எந்தவொரு மோதலும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
7:29 AM, 6 Oct
3 மாத தவெக ஆட்சியில் மக்கள் கடும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். அதுவே இடைத்தேர்தலில் மாற்றத்தை தரும். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வந்துவிடாதா என்ற ஏக்கம் ஏற்கனவே மக்களிடையே வந்துவிட்டது. மக்களை சந்தித்து பேச முடியாததாலேயே வெறும் ரோட் ஷோவை மட்டும் பிரச்சாரமாக தவெக நடத்தியது- வாக்களித்த பிறகு திமுக வேட்பாளர் சுகன்யா
7:41 AM, 6 Oct
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். எந்தவித இயந்திரக் கோளாறும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
7:48 AM, 6 Oct
காலை முதேல நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வரும் பொதுமக்கள்!
மதுராந்தகம் தொகுதியில் உள்ள தண்டரை புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தவெக வேட்பாளரின் விசில் சின்னத்திற்கு அருகே உள்ள பட்டனில் கறுப்பு மை இருப்பதால் வாக்குப்பதிவு நிறுத்தம்! வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் வாக்காளர்கள் சுமார் 30 நிமிடங்களாக காத்திருக்கிறார்கள்.
8:11 AM, 6 Oct
ஆர்வமாக வாக்களித்து வரும் பொதுமக்கள்!
8:21 AM, 6 Oct
மதுராந்தகம் இடைத்தேர்தல்: புக்கத்துறை பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 13-ல் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டது. இதனால் சுமார் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இயந்திர கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது!
8:34 AM, 6 Oct
மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன்!
VIDEO | Madhurantakam bypolls: Voting underway at Panchayat Union Primary School. Chengalpat Collector Veerapan visits the polling booth to take stock of arrangements.
#TamilNaduBypolls #TamilNaduNews
(Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) https://t.co/JEv83MuFIs
தாராபுரம் தொகுதி சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் தனது வாக்கை பதிவு செய்தார். தாராபுரம் தொகுதியில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. சத்யபாமா (தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்), மற்றும் கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
9:03 AM, 6 Oct
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கை பதிவு செய்தார்!
9:17 AM, 6 Oct
சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ உண்மை இல்லை. நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை. என்னை பற்றி வெளியான வீடியோ சித்தரிக்கப்பட்டது. தவெகவின் வெற்றி உறுதி என்பதால்தான் என்னை பற்றி பொய்யான வீடியோவை சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகாரளிக்கவுள்ளேன்- வைரலான வீடியோ குறித்த தவெக வேட்பாளர் சத்தியபாமா விளக்கம்
Madurantakam and Dharapuram By Election 2026 (மதுராந்தகம் , தாராபுரம் இடைத்தேர்தல் ) LIVE updates in Tamil, including voting, constituency-wise details, candidate leads, trends and latest election news from Tamil Nadu.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.