சும்மாவே இருக்க மாட்டார் போலயே நந்தினி.. மறுபடியும் ஆரம்பிச்சுட்டார் பாருங்க!
சென்னை: ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்தவர்களும் தங்களால் வீட்டில் சும்மா இருக்க முடியாது என்று நிரூபிப்பது போல மைனா நந்தினியும் தற்போது பண்ணியிருக்கிறார்.
அவருக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அதுவும் எந்த சீரியலில் தெரியுமா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தான்.
ரெண்டு நாளைக்கு முன்னாடி சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை வெளியிட்ட அவர் ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு என்று போட்டிருந்தார். அதைப்பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் இது சீரியலா அல்லது டிவி ஷோவா என்று யோசித்து கொண்டிருந்தனர்.

சும்மா இருக்க முடியலையே
ஏற்கனவே குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இவர் போட்டோ சூட் நடத்தி இருப்பதை பார்த்து பல ரசிகர்களும் என்னடா இந்த பொண்ணு மறுபடியும் களத்தில் இறங்கிருச்சா என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தநர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்னும் பழமொழிக்கு ஏற்ப இவர் சும்மா எல்லாம் போட்டோஷூட் நடத்தவில்லை.

காதலித்து திருமணம்
சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .அந்த யோகேஷ் வேறுயாருமில்லை ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருப்பவர் தான் .

நந்தினிக்கு ஆண் குழந்தை
நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்துவந்தார் நந்தினி. சமீபத்தில்தான் இவருக்கு மிகவும் எளிமையான முறையில் சீமந்தம் கூட நடந்து முடிந்தது .அந்த போட்டோக்களும் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வந்தது. அதன் பிறகு மைனா மற்றும் யோகேஷ் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

மீண்டும் வந்தாச்சு
தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த பலர் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர். ஆனால் குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் இருவரும் சீரியலில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக சென்னையில் வசிக்கும் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கணவருடன் நடிப்பு
யோகேஸ்வரன் இந்த சீரியலில் செந்தில் ஆக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக நந்தினி நடித்திருக்கிறார். அதாவது புருஷன் பொண்டாட்டி வேடத்திலேயே இருவரும் நடித்துள்ளனர். இந்த சீரியலில் கதிர் முல்லை ஜோடிக்கு எப்பவுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. அந்த ஜோடி இப்போ சென்னைக்கு வந்து கொண்டிருப்பதுபோல சீரியல் போய்க்கொண்டிருக்கிறது.

அக்கா அழகா இருக்கீங்க
சென்னைக்கு வந்து கதிரின் பிரெண்ட் ஆன செந்தில் வீட்டில் தங்குவது போன்று கதை இருக்கிறது .அங்கு காதல் கணவன் மனைவிக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டையை பார்த்து கதிரும் முல்லையும் வாய்விட்டு சிரித்து வருகிறார்கள் .ரொம்ப நாளைக்கு பிறகு நந்தினியை சீரியலில் பார்க்கும் ரசிகர்கள் அவருடைய பேச்சைக் கேட்டு ரொம்பவே ரசிக்கிறார்கள்.. அக்கா அழகா இருக்கீங்க என்றும் சொல்லத் தவறவில்லை.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications