வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. 15 வருட காதலனை கரம் பிடித்த நாடோடிகள் நடிகை அபிநயா
சென்னை: நாடோடிகள் படம் மூலம் பிரபலம் அடைந்த நடிகை அபிநயா ஆனந்த் கடந்த 15 வருடங்களாக காதலித்து வந்த தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான வகிசனா கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே சின்னத்திரை சினிமா பிரபலங்கள் திடீர் திருமண அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள். நேற்று விஜய் டிவி தொகுப்பாளர் விஜே பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்திருந்தார் அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டதும் இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளம் எங்கும் பிரியங்காவின் புகைப்படங்களும் வீடியோக்களும் தான் வைரலாகி கொண்டிருக்கிறது.

திடீர் திருமணங்கள்
எந்த இடத்திலும் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை பற்றி பேசாமல் அமைதியாக ரகசியமாக வைத்திருந்த பிரியங்காவிற்கு இப்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஜனனி நேற்று எங்கேஜ்மென்ட் செய்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். ஜனனி அவன் இவன், தெகிடி போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அந்த வரிசையில் இப்போது நடிகை அபிநயாவும் தன்னுடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நாடோடிகள் பட நடிகை
சென்னையை சேர்ந்த அபிநயா மாடலாக இருந்து பிறகு நடிகையாக மாறி இருக்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அபிநயா 2009 ஆம் ஆண்டு நாடோடிகள் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்காக பல விருதுகளையும் வாங்கி இருந்தார்.
அபிநயா நடித்த திரைப்படங்கள்
தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அபிநயாவுக்கு நாடோடிகள் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் ஒரு சில வருடங்கள் கழித்து ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு, வீரம், தனி ஒருவன், தாக்க தாக்க, குற்றம் 23 போன்ற திரைப்படங்கள் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தின் மூலம் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
புது திரைப்படம்
அதுபோல தற்போது நடிகை நயன்தாராவை வைத்து இயக்குனர் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பணி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காகவும் அபிநயாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
வதந்தி
அபிநயா காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருக்கிறார் ஆனாலும் அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று ஐந்து மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஷாலுடன் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கும் போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுப்பு எழுந்து வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றில் தான் 15 வருடமாக தன்னுடைய நண்பரை காதலித்து வருவதாக அபிநயா பேசியிருந்தார்.
திருமணம்
இந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9ஆம் தேதி அவருடைய காதலருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நேற்று ஹைதராபாத்தில் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications