நாக சைதன்யா, சமந்தா, சோபிதா மட்டுமல்ல.. இளவரசி டயானாவுக்கும் இதுதான் நடந்தது.. விட்டுருங்க பாஸ்
சென்னை: பிரபலங்கள் என்றாலே, அவர்களின் வாழ்க்கை கண்ணாடியில் வைத்து பார்க்கப்படும். அவர்கள் சாப்பிடுவது முதல், நடப்பது வரை எல்லாமே செய்தியாகும். ஆனால், ஒரு கேள்வி எழுகிறது. பிரபலங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு அல்லவா?
இளவரசி டயானா: தனிப்பட்ட வாழ்க்கை தலையீடுக்கு, இளவரசி டயானாவின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். அவர் உலகின் மிகவும் பிரபலமான மனிதர்களில் ஒருவர். ஆனால், ஊடகங்கள் அவரை தொடர்ந்து பின்தொடர்ந்தன. அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் செய்தியாக மாறியது. இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இறுதியில், ஒரு விபத்தில் அவர் உயிரிழந்தார். விபத்துக்கு முன்பு கூட சார்லசுடான திருமண முறிவு பற்றி ஊடகங்கள் அவரை விரட்டி விரட்டி கேள்வி எழுப்பியிருந்தன. இளவரசி டயானாவின் மரணம், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான ஊடகங்களின் தலையீட்டின் விளைவுகளை நமக்குக் காட்டுகிறது. ஆனால் இதுவரை மக்கள் அதிலிருந்து பாடம் கற்றதாக தெரியவில்லை.

நாக சைதன்யா: தற்போதைய நிலைமை, நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவுக்கு நிச்சயதார்த்தம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதுவும் இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
விவாகரத்து: ஆனால் திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சமந்தாக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். அப்போது கூட இருவரும் தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் நாங்கள் இருவரும் மனம் ஒத்து தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம். இதனால் இதை வைத்து யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்திருந்தனர்.
அதற்குப் பிறகு சமந்தாவோ அல்லது நாக சைதன்யாவோ இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் எந்த குற்றச்சாட்டுகளையும் வெளிப்படையாக சொன்னது கிடையாது. இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தன. அதற்கு பிறகு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று நாக சைதன்யா மற்றும் சோபிதா துலி பாலாவிற்கு எங்கேஜ்மென்ட் நடைபெற்றதாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் நாக சைதன்யா சமந்தாவுக்கு துரோகம் செய்யலாமா? என்று ஒரு தரப்பும், சமந்தா தான் துரோகம் செய்தார், எனவே நாகசைதன்யா முடிவில் தப்பில்லை என மறு குரூப்பும் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சமந்தா, நாக சைதன்யா எங்கேஜ்மென்ட் செய்தது தனக்கு வருத்தம் இருப்பதாக எந்த இடத்திலும் வெளிப்படுத்தவில்லை. கடைசியாக இன்று கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மல்யுத்த வீராங்கனை தினேஷ் போகத்க்கு ஆறுதல் சொல்லும் வகையில் தான் போஸ்ட் போட்டு இருக்கிறார். ஆனால் ரசிகர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா பற்றி இணையத்தில் அதிகமாக விமர்சித்து தங்களுடைய நேரத்தை வீணடித்து வருகிறார்கள்.
ஆனால், இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை மக்கள் யோசிக்க வேண்டியது அவசியம்.

மரியாதை: பிரபலங்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை மறக்கக் கூடாது.
விமர்சனம்: சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை எல்லாம் நம்ப வேண்டிய அவசியமில்லை. ஒரு செய்தியை பகிர்வதற்கு முன், அதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நாகார்ஜுன் தற்போது திருமண தகவலை உறுதி செய்துள்ளார். ஆனால் அவர் சொல்லும் முன்பே விவாதங்கள் எழுந்தது ஏன்.. ஜட்ஜ்மென்ட் செய்ய துணிந்தது ஏன்..
தனிமை: ஒவ்வொருவருக்கும் தனிமை என்பது ஒரு உரிமை. மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக் கூடாது. பிரபலங்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடத்தை கற்றுத்தருகிறது. அது என்னவென்றால், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. அந்த தனிமையை மதிக்க வேண்டும்.
உங்கள் கருத்து என்ன? இந்த விஷயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கருத்தை பகிரவும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications