Nagini 4 Serial: நாகினி சீரியல் சீசன் 4 வந்துருச்சா? யம்மாடி!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் நாகினி சீரியல் சீசன் 4 பிப்ரவரி 17 முதல் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. நாகினி முதல் சீசன் சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இதில் சிவன்யா, ஸ்ரேயா ஆகிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளும் ரொம்ப அழகாக இருந்தார்கள்.
இரவு நேரத்தில் இந்த அழகிகளை பார்க்க ஒரு கூட்டம் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தாலும், பாம்பு கதை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்துப் போக இவர்களும் தொடர்ந்து இந்த சீரியலைப் பார்த்து வந்தனர்.
முதுகில் ஒரு நாடா மட்டுமே இருக்கும்படியான ஜாக்கெட் இந்த சீரியல் மூலம்தான் பிரபலமடைந்தது. இந்த ஜாக்கெட்டில் கையே இருக்காது. மொத்தத்தில் பிரேசியர் போன்ற உள்ளாடை மாதிரிதான் சிவன்யா, ஸ்ரேயா அணியும் ஜாக்கெட்டுகள் இருந்தன.

நாகமணியைத் திருடுவது
இச்சாதாரி பாம்புகள் என்றால் பலருக்கும் தெரியாது இருந்த நிலையில் இச்சாதாரி பாம்புகள் என்றால் அவ்வப்போது மனித உருவமும், பாம்பு உருவமுமாக மாறி மாறி இருக்கும் என்று புதிய அர்த்தத்தை சொன்னார்கள். அதோடு, நாகமணி விலை மதிப்பற்றது.. அதை மனிதர்கள் எடுத்து வைத்துக்கொண்டு, இச்சாதாரி பாம்புகளை அலைய விடுவது என்கிற லெவலில் கதை சென்றுகொண்டு இருந்தது.

நாகினி 2 சீரியல்,
நாகினி முதல் பாகத்தை சன் டிவி மொழி பெயர்த்து ஒளிபரப்பிக் கொண்டு இருந்த நிலையில் இதன் இரண்டாம் பாகமான நாகினி 2 சீரியலை கலர்ஸ் தமிழ் டிவி டப்பிங் செய்து ஒளிபரப்பி வந்தது. கலர்ஸ் தமிழ் டிவியில் வரிசையாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் வரிசையில் டப்பிங் சீரியலாக நாகினி மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. நாகினி 3 சீரியலும் ஒளிபரப்பாகி வந்தது.

நாகினி 4 சீரியல்
நாகினி 4 சீரியலையும் இப்போது கலர்ஸ் தமிழ் டிவியை ஒளிபரப்ப உள்ளது. ஹிந்தியில் நாகினி சீரியல்கள் வரவை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் இருப்பதால், இந்த சீரியல் வரிசைகள் சூப்பர் ஹிட் என்பதாலும் அடுத்தடுத்து சீசன்களை பெருக்கிக்கொண்டே போகிறது சீரியல் தயாரிப்பு நிறுவனம். இந்த சீரியல் தமிழ் தெலுங்கு என்று முக்கிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருவதால் இப்போது நாகினி 4 வரை வந்து இருக்கிறது.

மாற்றம் தேவை
என்னதான் இச்சாதாரி பாம்புகளின் கதை என்றாலும், இதில் கழுகு, கீரிப்பிள்ளை என்று அவ்வப்போது எதையாவது இறக்கி அதையும் மனித இனமாக மாறும் என்று காண்பித்து கூடை பூவைக் காதில் சுற்றுவதை மாற்றி யோசிக்கலாம். இனியும் சீரியலில் நாகமணியை காண்பித்தால், அதை கொஞ்சம் ரிச்சான கல்லாக காட்சிப் படுத்தலாம், என்னவோ ரொம்ப சாதாரணமாக ஒரு கல்லை கையில் வச்சுக்கிட்டு, இவர்கள் அடையும் பரவசம் இருக்கிறதே.. கொஞ்சம் கூட வொர்த் இல்லைங்க!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications