எல். முருகன் சீஃப் கெஸ்ட்.. மீனா பங்கேற்பு.. நயன்தாராவும் இப்ப சர்ப்ரைஸ்.. பிரபலம் சொல்லும் காரணம்
சென்னை: 2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "மூக்குத்தி அம்மன்" படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது, பார்ட் 2 எடுக்கப்படுகிறது. இதில், மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். இதன் விழாவில் பாஜக எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த நிலையில், அதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி தந்துள்ளார்.
AG Modern Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "மூக்குத்தி அம்மன் 2 பட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுள்ளார்.. அதே விழாவில் நடிகை மீனாவும் கலந்து கொண்டார்.. இருவரும் தனித்தனியாக வந்தார்கள்.. ஆனால் ஒன்றாக மேடையில் ஏறினார்கள்..

சிறப்பு விருந்தினர் பாஜக எல்.முருகன்
ஏற்கனவே போனமுறை டெல்லியில் தன்னுடைய வீட்டு பொங்கல் விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்திருந்தார் எல்.முருகன். .. அந்த பொங்கல் விழாவில் சென்னையிலிருந்து சென்ற சிறப்பு விருந்தினர் மீனாதான்..
மீனாவுடன் டான்ஸ் மாஸ்டர் கலாவும் அந்த விழாவில் கலந்து கொண்டார்கள். முருகன் பொங்கல் விழாவில் மீனா ஏன் கலந்து கொண்டார்? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
பொங்கல் விழாவில் பங்கேற்ற மீனா
ஆனால் நடிகை என்ற முறையில், பணம் தந்தால் எந்த விழாவுக்கும் வருவார்கள்.. அது நகைக்கடை திறப்பு விழாவாக இருந்தாலும் சரி, ஜவுளிக்கடை திறப்பு விழாவாக இருந்தாலும் சரி. நடிகைகள் அவர்கள் கேட்ட பணத்தை தந்தால் நிச்சயம் வருவார்கள். அந்த அடிப்படையில், மீனா பொங்கல் விழாவுக்கு வரவேண்டும் என்று முருகனின் குடும்பத்தினர் விரும்பியிருக்கிறார்கள். அதனால் மீனா அந்த விழாவில் பங்கேற்றிருந்தார்.
ஆச்சரியப்படுத்திய நயன்தாரா
நீண்ட இடைவெளிக்கு பிறகு, இப்போது பாஜக எல்.முருகனும், மீனாவும், நயன்தாரா படத்தில் பூஜை விழாவில் பங்கேற்றிருப்பது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. பொதுவாக, தன்னுடைய படங்களின் புரமோஷன்களுக்கே வராத நயன்தாரா, இந்த முறை நிபந்தனையை தளர்த்திக் கொண்டு, சிறப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.
இதேபோல, 2 நாட்களுக்கு முன்பு "நேசிப்பாயா" இசை வெளியீட்டு விழாவிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நயன்தாரா, அந்த விழாவில் நயன்தாரா கலந்து கொள்வதற்கு காரணம் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்... அதேசமயம், 2 கைகளை விரித்தபடி நயன்தாராவை அணைக்க வந்தார் விஷ்ணுவர்த்தன்.. அவரது பிடியிலிருந்து லாவகமாக தப்பித்துவிட்டார் நயன்தாரா. இதை பத்திரிகையாளர்கள் அனைவரும் பார்த்து ரசித்தனர்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications