தனுஷின் கவன ஈர்ப்பு.. அக்கா மகனுக்காக எடுத்த முடிவு.. NEEK படத்தில் ஜி.வி. சம்பளம் என்ன? பிரபலம் நச்
சென்னை: "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் தலைப்பே, இதமாக இருக்கிறது.. படத்தின் தயாரிப்பாளராக தனுஷாக இருந்தாலும், ஹீரோவாக அவரது சகோதரி மகனை அறிமுகப்படுத்துகிறார்" என்று NEEK படம் குறித்து பிஸ்மி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, NEEK என்று சுருக்கமாக அழைக்கப்படும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் குறித்து விலாவரியாக பேசியிருக்கிறார்..
அந்த பேட்டியில், "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் தலைப்பே, இதமாக இருக்கிறது.. படத்தின் தயாரிப்பாளராக தனுஷாக இருந்தாலும், ஹீரோவாக அவரது சகோதரி மகனை அறிமுகப்படுத்துகிறார்..

இந்த படத்தின் புரமோஷன் போன்ற நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்றால், ஊடக கவனம் தன்மீது திரும்பிவிடும் என்று தனுஷ் நினைக்கிறார்.. அப்படி NEEK பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, படத்துக்கு அப்பாற்பட்ட கேள்விகளை கேட்டு, படத்திலிருந்து திசைதிரும்பிவிடும்.
கவன ஈர்ப்பு
இதனால், இப்படத்தின் புதிய கலைஞர்களுக்கு கவன ஈர்ப்பு கிடைக்காது. அதனால் நாம் தள்ளி இருக்க வேண்டும் என்று தனுஷ் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். இந்த ஒரு வாரம் காலம் முழுக்க, அந்த படத்தில் நடித்த கலைஞர்களுக்குதான் புரமோஷன் கிடைத்து வருகிறது என்றால், அதற்கு காரணம், தனுஷ் எடுத்த முடிவுதான்.
தற்போது தனுஷ் இட்லி கடை ஷுட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.. அவர் நினைத்திருந்தால், இந்த படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், படத்தின் புரமோஷன்களில் கலந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவர் விழாவுக்கு வராமல் தூரத்திலிருந்தே ஆசீர்வதித்துள்ளார்.
அக்கா மகன் ஹீரோ
இயக்குனராக தன்னை ஏற்கனவே நிரூபித்துவிட்டார் தனுஷ். அதனால், இந்த படத்தில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.. இந்த படத்தில் நடித்துள்ள தன்னுடைய அக்கா மகன், மிகப்பெரிய ஹீரோவாக வரவேண்டும் என்பதற்காக பிளாட்பார்மை இந்த படத்தில் போட நினைக்கிறார்
ஜிவி பிரகாஷூக்கும், தனுஷூக்கும் ஒருவித நல்ல நட்பு இருக்கிறது.. ஏற்கனவே இவர்களுக்குள் இருந்த விரிசல் நீங்கி, தற்போது நல்ல நண்பர்களாகியிருக்கிறார்கள். அதனால்கூட சம்பளத்தை பிறகு வாங்கி கெர்ளளலாம் என்று ஜிவி பிரகாஷ் சொல்லியிருக்கலாம்.. இந்த படம் வெற்றி பெற்றால், அதிக சம்பளத்தை அவருக்கு கொடுக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், அமரன் பட வெற்றிக்கு பிறகு, நிறைய வாய்ப்புகள் ஜிவி-க்கு வருகின்றன.
சரியாக பயன்படுத்துகிறார்
கடைசியாக கிடைத்த தகவல்படி, கமல் படத்தில் அனிருத் இசையமைக்கப்படலாம். ராஜ்கமல் தரப்பில் இப்படியொரு பரிசீலனை இருப்பதாக தெரிகிறது.. ஆனால், கிடைத்த வாய்ப்புகளை ஜிவியும் சரியாக பயன்படுத்தி வருகிறார்.. ஒவ்வொரு படத்திலும் கவனத்துடன் வேலை பார்க்கிறார்.. நிலவுக்கு என் மேல் என்ன கோபம் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் என்பதால், சிலருக்கு சோர்வு வரும். ஆனால், இதில் ஜிவி கவனமாக பணிபுரிந்துள்ளார்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications