பட்டியலின ஆண்களை கல்யாணம் பண்ண யோசித்த பெண்கள்.. நீயா நானா கோபிநாத் சற்று யோசித்திருக்கலாம்: பிரபலம்
சென்னை: பட்டியலின நபரை திருமணம் செய்து விருப்பமா? என்று கேள்வி எழுப்பினால், பட்டியலின பெண்களே கை தூக்கவில்லை.. அப்படின்னா, பட்டியலினம் என்றால் இந்த பெண்களுக்கு என்ன தோன்றுகிறது? பசங்கதான் சாதி பார்க்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.. அது உண்மையில்லை.. பெண்கள் தான் அதிகமாக ஜாதி பார்க்கிறார்கள்.. சாதி, பிரிவினைவாதம்தான் நம்மிடம் அதிகமாக உள்ளது என்று மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
நீயா நானாவின் கடந்த 27ம் தேதி நடந்த ஷோவின் தாக்கம் இன்னும் அடங்கவில்லை.. விவாதப் பொருள் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. அந்த நிகழ்ச்சியில் நகரத்து ஆண்களை திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் கிராமத்து ஆண்களின் அம்மாக்கள் கலந்துகொண்டு உரையாடினார்கள்.

நகரத்து ஆண்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களிடம் ஒரு பட்டியலின ஆணை கல்யாணம் செய்துகொள்வேன் என்பவரை கோபிநாத் கை தூக்க சொன்னார். ஆனால், ஒருவர் கூட அப்போது கை தூக்காததை கண்டு கோபிநாத் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தார்..
பிற்போக்குவாதிகள்
கிராமத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் ஜாதியை விட்டு வெளியே வருவதில்லை? ஒரு சமூகம் தான் உங்களை குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்துவதாக சொல்லும் நீங்களே, சமூகத்தையே காரணம் காட்டுகிறீர்களே? கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள் என்று சொல்லும் நீங்கள் யார்? இனிமேலும் நீங்கள் இப்படித்தான் இருக்க போகிறீர்கள் என்றால் நகரம், கிராமம் இரண்டுமே ஒன்றுதான்" என்று கோபிநாத் கோபத்துடன் கூறியிருந்தார்.
இந்த விவாதம் சோஷியல் மீடியாவிலும் எதிரொலித்து வருகிறது.. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. "இதற்கு முன்பு ஆவண படுகொலை பற்றி விவாதம் நடத்தப்பட்டது. அப்போது ஒரு பெண், "என் புள்ளைய கொத்துக்கறி மாதிரி போட்டு கொத்தி அனுப்பிட்டாங்க" என்று பேசுவதை கேட்கவே கஷ்டமாக இருந்தது.
சரியான தண்டனை
உடனே ஒருவர் எழுந்து, "நானும் அதே ஊரை சேர்ந்தவர்தான்.. அந்தம்மாவின் மகனை யாரும் தாக்கவில்லை" என்றார். ஆனால் மற்றொரு நபரோ, "அந்த மகன் செய்த தப்புக்கு இதுதான் சரியான தண்டனை" என்றார்.. இப்படியெல்லாம் ஆவண படுகொலை விவாதத்தில் நடந்தது.
கடந்த வார நிகழ்ச்சியின் எதிரொலியாக, கோபிநாத்தின் ஜாதி என்ன என்றே ஒரு வாரம் ஹாட் டாபிக் போயிட்டு இருக்கு. அன்று நடந்த விவாதத்தில் சில பெண்கள் பேசுவதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.. "என் அப்பா வீட்டை எனக்கு எழுதி தர வேண்டும், என் அண்ணன் எப்படியாவது போகட்டும்" என்று பேசுகிறார்கள்..
மாமியார் - புலம்பல்
அந்த பெண்களின் கணவன்மார்களோ கதறுகிறார்கள்.. "என் மாமியாரை கூட்டிவந்து மனைவி, வீட்டில் வைத்துக் கொண்டார்.. நான் போட்டிருக்கிற இந்த சட்டைகூட என் மாமியார் எடுத்து தந்ததுதான்.. என் மாமியார் வீட்டில் இருப்பதால் எனக்கு அசைவம் கூட மனைவி சமைத்து தருவதில்லை என்று ஆண்கள் புலம்புவதை பார்க்கவே பாவமா இருக்கு..
ஒரு பெண்மணி, அங்கிருந்த ஒரு இளம்பெண்ணை காட்டி, என் மகனுக்கு இப்பெண்ணை திருமணம் செய்து வைத்துவிடுவேன் என்கிறார். பிறகு அந்த பெண் பட்டியலின பெண் என்று தெரிந்ததுமே பின்வாங்கிவிட்டார். அப்படியானால், மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவதாக ஏன் இவர் முதலில் சொல்ல வேண்டும்?
டிஆர்பிக்காக இப்படியா
ஒரு பொதுஇடத்தில், என்ன பேசவேண்டும் என்ற வரையறை இலலாமல் அவர்களை பேசவிட்டுவிட்டதுதான், இன்று பேசுபொருளாகிவிட்டது.. ஏற்கனவே சமூகத்தில் சாதி நெருப்பாய் வளர்ந்து கிடக்கிறது. அதில் மேலும் பெட்ரோலை ஊற்றக்கூடாது.. இந்த அளவுக்கு ஒரு ஷோவை கொண்டு போயிருக்கக்கூடாது. அல்லது எடிட்டிங்கில் அதை நீக்கியிருக்கலாம்.. டிஆர்பிக்காக இந்த அளவுக்கா அவர்களை பேச வைப்பது?
அந்த பெண், தன்னுடைய மகனுக்கு அங்கிருந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க போவதாக சொன்னதுமே, ஏன் அதை கோபிநாத் தடுக்கவில்லை.. "இப்படியெல்லாம் லைவ் ஷோவில் பேசக்கூடாது, திருமணம் செய்து கொள்வதாக சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால், இது சுயம்வரம் கிடையாது" என்றுதானே கோபிநாத் சொல்லியிருக்க வேண்டும்?
மன்னர் பரம்பரை
இதை ஒரு பேசுபொருளாக்கி, இதை ஒரு கன்டென்ட் ஆக்கி, அந்த பெண்ணை எதுக்காக பட்டியலின பெண் என்று அறிமுகப்படுத்தி வைக்குறீங்க? இது உங்களுக்கு தவறாக தெரியலியா? அந்த பெண்ணை பட்டியலின பெண் என்று சொல்லி, அதன்மூலம் நீங்கள் என்ன சொல்ல நினைக்கறீர்கள்?
இப்படித்தான் ஏற்கனவே ஒருமுறை மன்னர் பரம்பரை என்று 2 பசங்களை கொண்டுவந்தாங்க.. உடனே சோஷியல் மீடியா முழுக்க அவங்களை வெச்சி செஞ்சிட்டாங்க.. ஆனால், எல்லாரும் தங்களை கிண்டல் செய்கிறார்கள் என்றுகூட அந்த 2 பசங்களுக்கு, தெரியவில்லை. அந்த அளவுக்குகூட அவர்களுக்கு புரிதல் இல்லை.
சொல்வதெல்லாம் உண்மை
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியும் இப்படித்தான்.. ஏழை வீட்டில் மட்டும்தான், பெண்கள் வீட்டை விட்டு ஓடுவது, 2 புருஷன், 3 பொண்டாட்டி என்று இருக்குமா? பணக்காரர் வீட்டில் அது இல்லையா? ஏழைகள் வீட்டில் உள்ளதை மட்டும் எதற்காக நிகழ்ச்சியில் காட்ட வேண்டும்? இதையும் அருவி என்ற படத்தில் செஞ்சி விட்டுட்டாங்க..
அதுபோல, நீயா நானா என்ற டாக் ஷோவை சுயம்வரம் அளவுக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும்? கோபிநாத் சிறந்த பேச்சாளர், அறிவாளி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. ஆனால், இந்த விவாதத்தை இன்னும் வேறுவிதமாக கையாண்டிருக்கலாமோ? என்று தோன்றுகிறது.
பட்டியலினம் - திருமணம்
பட்டியலின நபரை திருமணம் செய்து விருப்பமா? என்றால பட்டியலின பெண்களே கை தூக்கவில்லை.. அப்படின்னா, பட்டியலினம் என்றால் இந்த பெண்களுக்கு என்ன தோன்றுகிறது? பசங்கதான் சாதி பார்க்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.. அது உண்மையில்லை.. பெண்கள் ஜாதி நல்லாவே பார்க்குறாங்க..
பட்டியலின ஆணை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டால், அதற்கு ஆம், இல்லை என்று பதில் சொல்லியிருக்கலாம்.. பெண்கள் மனதில் ஜாதீய தாக்கம் நிறைந்திருக்கிறது.. இதே கேள்வியை ஆண்களை கேட்டிருந்தால், அதற்கு சரி என்று பெரும்பாலானோர் கை தூக்கி இருப்பார்கள்.. பட்டியலின பெண்ணாக இருந்தபோதிலும் , அந்த பெண் பதில் சொல்லவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.. அப்படியானால், அந்த பெண் யாரைத்தான் திருமணம் செய்ய நினைக்கிறார்?
ஆணவ கொலைகளை செய்வது ஆண்களாகவே இருந்தாலும், ஆவண கொலைகளுக்கு எதிராக பெண்கள் எத்தனை பேர் இன்று பேசுகிறார்கள்? எத்தனை அரசியல் கட்சிகள் பேசுகிறார்கள்? பட்டியலினமே என்றாலும் அருந்ததியரை திருமணம் செய்ய மறுக்கிறார்கள். இருளரை திருமணம் செய்ய மறுக்கிறார்கள். சாதி, பிரிவினைவாதம்தான் நம்மிடம் அதிகமாக உள்ளது..
ஆணவ கொலைகள்
ஆணவக்கொலையில் இளவரசு செத்து போயிட்டார், ஆனால், திவ்யா உயிருடன் இருக்காங்க, சங்கர் செத்து போயிட்டார், ஆனால், கௌசல்யா உயிருடன்தானே இருக்காங்க.. கோகுல்ராஜ் செத்து போயிட்டாரு., சுவாதி உயிருடன்தானே இருக்காங்க.
காதலுக்காக ஆண்கள்தான் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.. பலி கொடுப்பது பசங்க மட்டும்தானா? பெண்கள் மட்டும் வேற கல்யாணம் செய்து கொண்டு,பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டு ஜாலியாக இருப்பார்களா? இது என்னவகையான காதல்?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications