செய்தி வாசிப்பாளர் ரத்னா ஞாபகம் இருக்கா.. நள்ளிரவில் பைக்கில் மடக்கிய வாலிபர்.. கேட்டாரே கேள்வி
சென்னை: சன் டிவி செய்தி வாசிப்பாளர் ரத்னாவை நள்ளிரவில் 25 வயது இளைஞர் மடக்கி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சினிமா நடிகர், நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை கலைஞர்களும் டிவி ஆங்கர்களும் பிரபலமாகி ஃபேன் பேஸை வைத்துள்ளார்கள். அதிலும் 90-ஸ்களில் டிவியில் வந்த ஆங்கர்கள், செய்தி வாசிப்பாளர்களை மறக்கவே முடியாது.
அந்த வகையில் 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் செய்தி வாசிப்பாளர் ரத்னா. அவர் மீடியாக்குள் நுழைந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். இவர் ஆரம்பத்தில் பல டிவி சேனல்களில் செய்தி வாசித்திருந்தார் என்றாலும் சன் டிவியில் செய்தி வாசிப்பதன் மூலம்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

அது மட்டுமமல்லாமல் 18 ஆண்டுகளாக திரைவிமர்சனங்களை செய்திருக்கிறார். இவர் தற்போதும் செய்தி வாசிப்பாளர் பணியை விடாமல் செய்து வருகிறார். தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். இத்தனை வேலைகளில் இருந்தாலும் ரத்னா சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பார்.
இவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் 1995 ஆம் ஆண்டு முகம் தெரியும் அளவிற்கு கொஞ்சம் பிரபலமாக தொடங்கியிருந்தேன்.. இந்த புடவையில் Shooting முடித்து விட்டு ஒரு studio வில் புகைப்படம் எடுத்து கொண்டு வள்ளுவர் கோட்டம் வழியாக scooty யில் வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தேன்.

25 வயது மதிக்கத்தக்க பையன் என்னை சிக்னலில் வழிமறித்தான்.. நீங்கள் suntv ரத்னா தானே என்றான். ஆமாம் என்றேன்.. உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. உங்கள் பதில் என்ன என்றான்.. வெலவெலத்து போய் sorry no chance.. I am already married என்றேன்.. மிகுந்த ஏமாற்றம் அவன் முகத்தில் தெரிந்தது..
இருந்தாலும் சுதாரித்து கொண்டு கேட்டானே ஒரு கேள்வி!! உங்களுக்கு தங்கச்சி இருந்தா சொல்லுங்க கல்யாணம் பண்ணிக்கறேன்.. அடுத்த நொடியே நான் escape!! இந்த photoவை பார்க்கும்போது அந்த பையனின் ஞாபகம் வரும். இவ்வாறு ரத்னா தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications