நிகிதாவும், நிர்மலா தேவியும் .. பின்னணியில் யாரந்த விஐபி? குரலற்ற ஸ்ரீமதி, அஜித் குமார்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித்குமார், மாணவி ஸ்ரீமதி போன்றோர் குரலற்றவர்கள்.. இவர்களின் குரல்கள் எப்போதுமே எடுபடாது.. ஸ்ரீமதியை போலவே அஜித் குமார் மரணமும் நாளடைவில் மறக்கப்பட்டுவிடும் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கருத்து கூறியிருக்கிறார்.. அத்துடன், பேராசிரியை நிகிதா குறித்தும், பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.

திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் நிகிதா, பணியாற்றியபோது ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாம்.. அதாவது, தன்னுடைய துறைசார் பணிகளை முறையாக செய்யாதது, கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டுப்படாதது போன்ற அடுக்கடுக்கான புகார்களில் சிக்கியவராம் நிகிதா.

Television nirmala devi nikita

எனவே, அவரை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்று அங்கு படிக்கும் மாணவிகளே கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த மே மாதம் கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தாராம்..

இதுதொடர்பாக விசாரணை நடத்திய இணை இயக்குநர், நிகிதா மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு விரிவான அறிக்கையையும் அனுப்பியிருக்கிறார். ஆனாலும், நிகிதாவுக்கு இருந்த செல்வாக்கால், அந்த அறிக்கை மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், "நிர்மலா தேவியுடன், நிகிதாவை ஒப்பிட்டிருந்தேன்.. நிகிதா, அரசு கல்லூரியில் பேராசிரியை,, அத்துடன் நிறைய கட்டப்பஞ்சாயத்துகள் செய்து, நிறைய காரியங்களிலும் இறங்கி, கோடிக்கணக்கில் சம்பாதித்தார்..

அப்படியானால், எதற்காக நிகிதாவிடம் சில அதிகாரிகள் பணிய வேண்டும் மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்தினாரா? நிர்மலா தேவியும் இப்படித்தான், கல்லூரி மாணவிகளை தவறான வழியில் இட்டுச்செல்ல முயன்றார்.. ஆனால், அந்த முயற்சியிலேயே நிர்மலா தேவி மாட்டிக் கொண்டார். எனவே இந்த கோணத்திலும், நிகிதாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

யார் தந்த அதிகாரம்

நிகிதாவுக்கு எப்படி இவ்வளவு செல்வாக்கு? சர்வாதிகார தோரணையுடன் நடந்து கொள்ள யார் காரணம்? இந்த கேள்விக்கு திமுக என்றில்லை, எல்லா அரசுமே பதில் சொல்ல வேண்டும்..

கடந்த 2011-ம் ஆண்டிலிருந்தே செல்வாக்காக ,இருந்து வருகிறார் நிகிதா.. இவருக்கு பின்னணியில் உள்ளது யார்? என்று சாதாரண குடிமகனும் கேள்வியாக எழுப்பக்கூடும்.. இப்போது ஒரு உயிரே போயிருக்கிறது.. அஜித் மரணம், தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுத்து வருகிறது.. இதெல்லாம் தெரிந்துதான் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர்..

சிபிஐ அதிகாரிகள்

சிபிஐ வந்தாலும் நிகிதாவை காப்பாற்ற முயற்சி நடக்கலாம்... காரணம் நிகிதா பாஜக ஆதரவாளர்.. எடப்பாடி பழனிசாமிதானே சிபிஐ விசாரணை கேட்டார்? அவர்களே விசாரித்து கொள்ளட்டும் என்றே இப்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிஐ என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா? என்று ஜெயலலிதா ஒருமுறை கேட்டதுதான் தற்போது நினைவுக்கு வருகிறது..

நிகிதா சொன்ன பொய்யை நம்பி, அஜித்தை அடித்தே கொன்றிருக்கிறார்கள் என்றால், அடித்து கொல்வதற்கான உத்தரவை பிறப்பித்த உயரதிகாரி யார்? இந்த அதிகாரிக்கும், நிகிதாவுக்கும் என்ன தொடர்பு?

நிகிதா தவறிழைத்ததாக, இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான விளக்கமும் வரவில்லையே? நிகிதா வாய்திறந்தால், சில அதிகாரிகள் சுயரூபம் தெரிந்துவிடும் என்பதாலோ? இனிவரும் காலங்களில் நீதி, நியாயம் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கில்லை..

டிஎஸ்பி - அதிகாரிகள்

ஆனால், தமிழக முதல்வரின் நோக்கம் மட்டும் சரியானது.. ஸாரி..ம்மா.. ஸாரி..ம்மா என்று சொல்லும் அளவுக்கு ஒரு முதல்வரை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட நிகிதாவை பாதுகாப்போரின் அதிகாரிகளின் தோல் எவ்வளவு தடிமனானது? எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை இல்லையே? அந்த டிஎஸ்பியை இதுவரை கைது செய்யவில்லையே? வெறும் சஸ்பெண்டு மட்டும்தானே செய்துள்ளாரகள்?

தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு போகணும், அதற்காக நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் நினைக்கிறார்.. ஆனால், சுற்றிலும் யாருமே சரியில்லை. மற்ற கட்சிகள் போராடுகின்றன. தவெக தலைவரும் களத்தில் நிற்கிறார், போராடுகிறார்.. பாஜகவும், அதிமுகவும் போராடுகிறார்கள்.. எனினும், எதிர்க்கட்சி தலைவராக இருந்து, நேரில் கூட செல்லவில்லையே...

ஸ்ரீமதியை மறந்துவிட்டார்கள்

ஸ்ரீமதியை மறந்தே விட்டதுபோல, அஜித்குமாரையும் நாளடைவில் அனைவரும் மறந்துவிடுவார்கள்.. மாணவி ஸ்ரீமதி சமூகத்தின் சக்கரத்தில் சிக்கி இறந்தார் என்றால், அஜித் அரசியல் சக்கரத்தில் சிக்கி இறந்துவிட்டார்.. அஜித்துக்கு போஸ்ட் மார்ட்டம் நல்லபடியாக நடந்தது, ஆனால் ஸ்ரீமதிக்கு அப்படி நடக்கவில்லை..

இத்தனைக்கும் அஜித் சார்பில் எந்த டாக்டரும் நியமிக்கப்படவில்லை.. அந்த போஸ்ட் மார்ட்டத்தை செய்தவர்களே சிறப்பாக செய்துள்ளனர்.. அஜித், ஸ்ரீமதி போன்றோர் குரலற்றவர்கள்.. இவர்களின் குரல்கள் எப்போதுமே எடுபடாது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+