கார்த்திக்குடன் ஹைதராபாத் போன நிலா அசோக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டாளே....!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிறைய மர்மங்கள் இருந்துச்சு. அந்த மர்மங்கள் விடுபட்ட நிலையில், இப்போது மீண்டும் சில மர்மங்கள் உருவாகி இருக்கு.

தன்னுடன் இருப்பவர்கள் தன்னை பெத்து வளர்த்த அப்பா அம்மா இல்லைன்னு தெரிஞ்ச உடனே நிலாவுக்கு ரொம்ப வருத்தம். ஆனாலும் என்ன செய்வது.

அப்பாகிட்ட தன்னை பெத்த அம்மா அப்பா பத்தி கேட்கும்போது, என்னோட தங்கச்சி பொண்ணும்மா நீ.. ஹைதராபாத்ல பிசினெஸ் செய்த உன் அப்பா ஏதோ ஆபத்துல மாட்டிக்கிட்டார்னு வளர்த்த அப்பா ராஜசேகர் சொல்றார்.

அப்போ அம்மா

அப்போ அம்மா

அப்பாதான் ஆபத்துல மாட்டிக்கிட்டார்னு சொல்றீங்க..அம்மா எங்கப்பான்னு கேட்கறா நிலா. உன் அப்பாவைத் தேடி ஹைதராபாத் போறேன்னு என் கையில் உன்னை குடுத்துட்டு போனா...அவளும் என்ன ஆனான்னு தெரியலை நிலான்னு வளர்த்த அப்பா சொல்றார்.

அம்மா அப்பா

அம்மா அப்பா

என்னோட அப்பா அம்மாவை தேடி நான் ஹைதராபாத் போறேன்பா.. எனக்கு அனுமதி குடுங்க அப்பான்னு கேட்கறா நிலா.நீ தனியா போயி எந்த விவரமும் தெரியாம எப்படிம்மா கண்டுபிடிப்பேன்னு கேட்கறார் அப்பா.

கார்த்திக்கையும்

கார்த்திக்கையும்

அப்பா நான் கார்த்திக்கை துணைக்கு அழைச்சுட்டு போறேன்ப்பா.நிச்சயம் அப்பா அம்மாவைத் தேடி அழைச்சுக்கிட்டு வருவேன்னு கிளம்பறா. இது நீலாம்பரிக்கு தெரிஞ்சு எவ்வளவோ தடைகள் கொடுத்தும் நிலா கார்த்திக்கோட ஹைதராபாத் கிளம்பிடறா.

நிலா அப்பாவும்

நிலா அப்பாவும்

நீலாம்பரியும் நிலா அப்பா ஸ்ரீதரும் கூட்டு தொழிலதிபர்களா இருந்தவங்க. ஸ்ரீதரை கல்யாணம் செய்துக்க நீலாம்பரி ஆசைப்பட்டாங்க...ஆனா,ஸ்ரீதருக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு தெரிஞ்ச உடனே அவரை டார்ச்சர் செய்து கடைசியா கொன்னுடறாங்க.

சொத்துக்களை ஸ்ரீதர்

சொத்துக்களை ஸ்ரீதர்

ஸ்ரீதர் சொத்துக்களை நிலா பேருக்கு எழுதி வச்சுடறார். ஸ்ரீதர் செத்துட்டார்னு நீலாம்பரி நினைச்சுகிட்டு இருக்காங்க.ஆனா,ஸ்ரீதர் ஹைதராபாத்தில் உயிரோட இருக்கார். இது நிலாவுக்கு தெரியலை.. நீலாம்பரிக்கும் தெரியலை.

நீலாம்பரியின் உண்மைகள்

நீலாம்பரியின் உண்மைகள்

நீலாம்பரிதான் தன் கணவரின் தொழில் பார்ட்னர்..அவள்தான் கணவரை கொன்னவர்னு நீலாம்பரி வீட்டுல வேலைக்காரியா இருக்கும் நிலாவின் அம்மா தெரிஞ்சுக்கறாங்க.

இந்த நிலையில்தான்

இந்த நிலையில்தான்

இந்த நிலையில்தான் எதிர்பார்க்காத விதமா நிலாவே காதலன் அசோக்கை விட்டுட்டு, நீலாம்பரியின் தம்பி அசோக்குக்கு ரெண்டாம் தாரமா கழுத்தை நீட்டிட்டு கழுத்தில் தாலியோட நீலாம்பரி வீட்டுக்கு ஹைதராபாத்தில் இருந்து வந்திருக்கா.

மகிழ்ச்சி கணக்கு

மகிழ்ச்சி கணக்கு

நீலாம்பரிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எப்படியோ நிலா நம்ம வீட்டுக்கு மருமகளா வந்துட்டா.. சொத்தை எல்லாம் ஆட்டைய போட்டுடலாம்னு கணக்கு போடறாங்க.

நல்லாதான் போயிட்டிருக்கு இந்த நிலா. ஆனால் என்ன.. வழக்கமான சீரியல்கள் போலத்தான் நிலாவும் போயிட்டிருக்கு. புதுசா, வித்தியாசமாக ஏதாச்சும் பண்ண முடியுமான்னு யாராச்சும் யோசிச்சாங்கன்னா ரொம்ப நல்லாருக்கும். யோசிப்பாங்களா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+