Nila serial: நிலாவோட அப்பாவுக்கு பழசு மறந்து போச்சாமே!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் ஸ்ரீதராக இருந்த நிலாவின் அப்பாவுக்கு பழசு எல்லாம் மறந்து போச்சாம். அதனால்தான் இப்போது அவர் அன்வராக உலா வந்து கொண்டு இருக்கார்.
நீலாம்பரி அன்வரை ஸ்ரீதர்தான் என்று குருஜியிடம் உறுதியாக சொல்ல, குருஜிக்கும் அந்த சந்தேகம் வந்திருந்து. ஆனால், அவர் என்னை பார்த்ததும் முகத்தில் எந்தவித அதிர்ச்சியையும் காண்பிக்கலை என்று நீலாம்பரி சொல்றாங்க.
எனக்கும் அதில் சந்தேகம் இருக்கு நீலாம்பரின்னு குருஜி சொல்ல, சரி விசாரிக்கலாம் என்று, அன்வருடன் வந்த ஆஸ்ரம் காப்பாளரிடம் நீலாம்பரி விசாரிக்கறாங்க.

ஸ்ரீதர் நீலாம்பரி
ஸ்ரீதரும் நீலாம்பரியும் சேர்ந்து வெற்றித் தொழில் அதிபர்களாக இருக்கிறார்கள்.இப்படி தொழிலில் இணைந்து இருக்கும் நாம் வாழ்க்கையில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று அப்போது பவானியாக இருந்த நீலாம்பரி சொல்ல, அது முடியாது பவானி, எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்குதுன்னு சொல்றார் ஸ்ரீதர். அன்று அவருக்கு ஆரம்பிக்கிறது கேடு காலம்.

ஸ்ரீதர் கொலை
எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது. அதே மாதிரி உன் சொத்து எல்லாத்தையும் நான் எனக்கு உரிமையாக்கியே தீருவேன்னு சொல்லிட்டு, ஸ்ரீதரை கொலை செய்துடறாங்க நீலாம்பரி. பிறகு ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்த நீலாம்பரி, நிலாதான் ஸ்ரீதரோட பெண் என்று கண்டுகொண்டு, அவளையே டார்கெட் செய்து தனக்கு மருமகளாக்கிக்க துடிக்கறாங்க. ஆனால், அவங்க மகன் சஞ்சய் பல பெண்களை ஏமாற்றியவன் என்பதால் நிலாவுக்கு பிடிக்கலை. அதோட கார்த்திக்கை லவ் பண்றா

அப்பா அம்மாவை
நிலா தனது பிறப்பு ரகசியம் தெரிந்தவுடன், அப்பா, அம்மாவைத் தேடி ஹைதராபாத் போறா. நீலாம்பரியும், நிலாவைப் பின் தொடர வீரபத்ரனை அனுப்பி வைக்கறாங்க. இந்த சமயத்தில் என்ன உண்மை தெரிந்ததோ, நீலாம்பரியின் தம்பி அசோக்கின் இரண்டாவது மனைவி என்கிற பெயரில் தனக்குத் தானே தாலி கட்டிக்கிட்டு, நீலாம்பரி வீட்டுக்கு மருமகளா வந்துடறா. நிலாவின் அம்மா நீலாம்பரி வீட்டு வேலைக்காரியா இருக்காங்க. இது நிலாவுக்கு தெரியலை.

காப்பாளர் ஆஸ்ரமம்
ஆஸ்ரம காப்பாளரிடம் அன்வர் பற்றி விசாரிக்கும் போது, அவரை எனக்கு ஒரு பதனஞ்சு வருஷமா தெரியும்மா .ஆனாஅ துக்கு முன்னலே ஏதோ உடம்பு சரியில்லாமப் போயி அவருக்கு பழசு எல்லாம் மறந்து போச்சாம். இவரை காப்பாத்தின இஸ்லாமிய வைத்தியர் இவருக்கும் மருத்துவத்தை கத்துக் கொடுத்து தன் கூடவே வச்சுக்கிட்டதா எனக்கு தெரியும். மத்தபடி ஃபாத்திமான்னு இவருக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு தெரியும் அவ்ளோதான்னு சொல்றார். இப்போ நீலாம்பரிக்கு ஸ்ரீதர் சாகலை, ஆனா, பழசை மறந்துட்டார்னு தெரிஞ்சுருச்சு.
இனி கதை எப்படி போகுதுன்னு பார்ப்போம்....
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications