ஊர்க்காவலனில் ரஜினியோடதே ஜீரணிக்க முடியலை! இதுல புஷ்பா 2 வேறயா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புஷ்பா 2 படத்தில் அந்த காட்சியில் எங்கயாவது லாஜிக் இருக்கா? இதே போல்தான் ஊர்க்காவலன் படத்திலும்! இனி இது போல் லாஜிக்கே இல்லாமல்தான் படங்கள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் புஷ்பா 2வில் வரும் வசனங்கள் எல்லாம் காதில் பூ சுற்றுவது போல் இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: 'ஊர்க்காவலன்' என்று ஒரு படம் வந்தது. அதில் பக்கத்து ஊர் பெரிய மனிதரான ராஜதுரை (ரகுவரன்) பெண் சித்ராவை தூக்கிச் செல்ல காங்கேயனின்(ரஜினி) ஊருக்கு வருவார்.

television pushpa 2 oorkavalan

சித்ராவை ஆட்களை வைத்து வண்டியில் ஏற்றிக் கொண்டு வரும் போது வழியில் ராதிகாவும், சில பெண்களும் வழியை மறித்து நிற்பார்கள். ராஜதுரை அவர்கள் மேல் வண்டியை ஏற்றி விடுவோம். மரியாதையாக ஒதுங்கி விடுங்கள் எனச் சொல்லியும் கேட்கமாட்டார்கள்.

ராதிகாவோ "நீ காரை ஓட்டுடா" பார்க்கலாம்னு சவால் விடுவார். ரகுவரனின் அடியாளும் காரை ஸ்டார்ட் செய்ய சக்கரம் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும். ராதிகாவும், பெண்களும் ஏளனத்தோடு சிரிக்க ரகுவரன் திரும்பிப் பார்ப்பார். காரிலிருந்து ஒரு கயிறு போய் நேரே காங்கேயனின் காலில் கட்டப்பட்டிருக்கும்.

அதாவது காங்கேயனின் காலை கட்டு அவிழாமல் கார் போகாதாம். இந்தப் படத்தின் இயக்குனர் மனோபாலா. இந்தப்படம் வந்த போது லாஜிக்கலாக ரஜினி ரசிகனாக இருந்தும் இது அதீதமான காட்சி என்றே தோன்றியது. அப்போதே ரஜினியின் மேனரிசங்களை ஏற்றுக் கொண்ட எங்களால் இது போன்ற ஓவரான காட்சிகளை ஜீரணிக்க முடியாததே நிஜம்.

இப்போ 'புஷ்பா 2' என்றொரு படம் பார்த்தேன். பொதுவாக தெலுங்கு படம் அந்தக் காலத்திலிருந்தே லாஜிக் இல்லாதவை தான். அல்லு அர்ஜுனை கையையும், காலையும் கட்டிப்போட்டு விடுகிறார்கள். எதிரே 50 பேராவது இருப்பார்கள். அந்த கையும், காலும் கட்டு அவிழாமலே அவர் தன் வாயாலேயே 50 பேரையும் 'கடித்து' கொள்கிறார். பூமியில் நாம் உந்து விசை இல்லாமல் மேலேழும்ப முடியாது. இவர் பாட்டுக்கு எகிறுகிறார்.

அடியாட்களின் தலைக்கு மேல் ஏறிக் குதிக்கிறார். இந்தியாவிலிருந்து ஒரு கப்பலில் ஒரு கன்டெய்னர் ஜப்பானுக்கு வருகிறது. அதில் ஒரு கன்டெய்னரை கிரேன் மூலம் தூக்கும் போது ஓவர் லோடாகி கன்டெய்னர் கீழே விழுகிறது. இதில் கன்டெய்னர் திறந்து கொள்ள செம்மரக்கட்டைகள் விழுகின்றன.

அதில் அல்லு அர்ஜுனும் வந்து விழுகிறார். ஒரு கன்டெய்னர் கப்பல் இந்தியாவிலிருந்து ஜப்பான் செல்ல பதினாறு நாட்களாகும். ஒரு மனிதன் 16 நாள் மூடிய கன்டெய்னர் உள்ளே பயணிக்க முடியுமா?. அதோடு வீறு கொண்டு அவர் சண்டை வேறு செய்கிறார். இப்படி நம்ப முடியாத காட்சியுடைய இப்படம் இந்தியாவில் வசூலை வாரிக்குவிக்கிறது. இதில் இயக்குனர் சுகுமார் வேறு 'Sukumar writings' என பெருமையோடு போட்டுக் கொள்கிறார். புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சியா... ஃபயர்டான்னு புஷ்பா சொன்னாலும் நம் காதில் மாலை மாலையாக பூ சுற்றுகிறார்கள்.

இந்த மில்லேனியம் கிட்ஸ் ரசனை...ஆஹா... டோட்டல் இந்தியாவுக்கும் விபூதி அடிக்கப் பார்த்திருக்கிறார் சுகுமார்... ஆனால் இனி சினிமா இப்படித்தான் இருக்கும் போல..... இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+