Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனா காணும் காலங்கள் பச்சையை ஞாபகம் இருக்கா ...?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90 கிட்ஸ் களின் மிகவும் பிடித்தமான நிகழ்ச்சிகளில் கனா காணும் காலங்கள் சீரியலும் ஓன்று. இது பள்ளி பருவங்களை மையமாகக் கொண்டது.

பொதுவாகவே சீரியலில் மாமியார் மருமகள் சண்டை, இவங்க வீட்டு அவங்க கெடுக்கிறது அவங்க வீட்டை இவங்க கெடுக்கிறதுதான் அதிகம் இருக்கும். அப்போதுதான் வித்தியாசமான சீரியல்கள் விஜய் டிவியில் அணிவகுக்க ஆரம்பித்தன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த சீரியலில் நடித்த அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்தவை. இதில் பச்சை என்ற கேரக்டரில் நடித்தவர் மதுசூதனன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.

 சினிமாவிலும் கலக்கல்

சினிமாவிலும் கலக்கல்

இந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லோரும் வெள்ளித்திரை நடிகர்கள் அளவில் மனதில் ஹீரோ ஹீரோயினி களாகவே மாறிவிட்டார்கள் .அந்த சீரியலில் நடித்து பிறகு இவர்கள் எல்லாருக்குமே இன்னிக்கு வரைக்கும் நட்சத்திரமாக மாறி ரசிகர்களுக்கு இடையே பழக்கமான முகமாக மாறியிருக்கின்றனர்.

 பிளாக் பாண்டி

பிளாக் பாண்டி

பிக்பாஸ் நட்சத்திரம் கவின், செம்பருத்தி சீரியல் கார்த்திக், கோலிவுட்டு ஹீரோ ரியோ, பிளாக் பாண்டி என பலர் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் கனா காணும் காலங்கள் சீரியலில் பச்சை என்ற பச்சையப்பன் ஆக நடித்த வாசுதேவ கிரிஷ் மதுசூதனன் சீரியல்களிலும் திரைப்படங்களில் முக்கியமான கேரக்டர் ஆக நடித்துக்கொண்டிருக்கிறார்.

 கோயம்பத்தூர்க்காரர்

கோயம்பத்தூர்க்காரர்

இவர் கோயம்புத்தூரில் பிறந்து அங்குதான் பள்ளி கல்லூரியை முடித்திருக்கிறார். பள்ளியில் படிக்கும்போது நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். காலேஜ் போயிட்டு இருக்கும்போதுதான் விஜய் டிவியில ஒரு புதிய சீரியலுக்காக ஆடிஷன் நடந்திருக்கு. அதில் எதேச்சையாக கலந்துகொண்டவர். அதனால அதுல நல்லா நடிச்சதால அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அந்த சீரியல்தான் கனா காணும் காலங்கள்.

 பச்சை என்கிற பச்சையப்பன்

பச்சை என்கிற பச்சையப்பன்

2006 முதல் 2009 வரை 2 சீசன் களாக ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இந்த சீரியலில் இவருடைய கேரக்டர் பச்சையப்பன் என்ற பச்சை. மக்களுக்கு ரொம்ப பிடித்து இருந்தது சீரியலில் இவர் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஒரு தாழ்வு மனப்பான்மையில் இருக்கிற நல்லா படிக்கிற பையன்.

 டான்ஸும் உண்டு

டான்ஸும் உண்டு

இந்த சீரியல் 2009 இல் முடிவடைந்த உடன் தன்னுடைய படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அப்போது வந்த மானாட மயிலாட சீசன் 2 வில் பங்கேற்று தன்னுடைய திறமையை நிரூபித்தார் . பின்னர் மீண்டும் விஜய் டிவியில் ஆபிஸ் சீரியலில் நடித்தார். அது முடிந்த பிறகுதான் திரைப்படங்களில் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்திருக்கு.

 சுண்டாட்டம் படத்தில் வில்லன்

சுண்டாட்டம் படத்தில் வில்லன்

கனா காணும் காலங்கள் சீரியல் நடித்த இர்பான் ஹீரோவாகவும் அருந்ததி ஹீரோயினாக நடித்த சுண்டாட்டம் படத்தில் காட்டி என்கிற வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார் பச்சை. அதன்பிறகு 2015 இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான மெஹர் படத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் என் கணவன் என் தோழன் சீரியலில் நடித்த அவர் அதன் பின்னர் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான மெல்லத்திறந்தது கதவு சீரியலில் நடித்துள்ளார். தற்போது வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள அடுத்த சீரியல் மற்றும் படங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார் பச்சை என்கிற மதுசூதனன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+