பாண்டியன் ஸ்டோர்ஸ்: ராஜு சொன்ன உண்மையால் வெடிக்கும் பூகம்பம்.. பாண்டியன் மறைக்கும் விஷயம்! அடுத்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலின் இன்றைய எபிசோடு, ராஜி - கதிர் உறவு, முத்துவேலின் தவிப்பு, மற்றும் சக்திவேலின் கோபம் ஆகியவற்றின் பின்னணியில் பரபரப்பாக நகர்கிறது. ராஜி, முத்துவேலிடம் உண்மைகளைப் பேச, சக்திவேல் அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு கோபப்படுகிறார்.

Pandian Stores Vijay TV

ராஜியின் நேர்மையான வாக்குமூலம்

பைக்கில் வந்திருக்கும் முத்துவேலை நிறுத்தி, ராஜி தனது திருமண வாழ்க்கை குறித்துப் பேசுகிறார். "இந்தக் கல்யாணம் என்னை மீறி நடந்தாலும், இதை உங்களிடம் சொல்ல பலமுறை முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை," என்று சொல்கிறார். மேலும், "அந்த வீட்டில் இருப்பவர்கள் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள். அரசி இருந்த நிலைமையில் நானும் இருக்கிறேன். அண்ணனோட வாழ்க்கையும் இதில் கெட்டுப் போயிடக்கூடாது என்பதற்காகத்தான் இதைச் சொன்னேன்," என்று முத்துவேலிடம் கூறுகிறார்.

"இனிமேல் அந்தக் குடும்பத்தின் மீது எந்தப் பழியும் போடாமல், அண்ணனின் வாழ்க்கையைப் பார்க்கச் சொல்லுங்கள்," என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதைக் கேட்ட முத்துவேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்கிறார். ஆனால், தூரத்தில் இருந்து இதை பார்த்த சக்திவேல் கோபமாகி வீட்டிற்குச் செல்கிறார்.

செந்திலின் புது வாசம்

செந்தில், மீனா இருவரும் வேலைக்குக் கிளம்பிக்கொண்டு இருக்க, செந்தில் அதிகமாகப் பெர்ஃப்யூம் அடித்துக்கொண்டு செல்கிறார். வெளியில் வரும் குடும்பத்தினர் அதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கு வரும் பாண்டியன், "ஒரு நாத்தமா இருக்கு," என்கிறார். அதற்கு அரசி, "எங்களுக்கு அண்ணனோட பெர்ஃப்யூம் ஸ்மெல்தான் வருது. உங்களுக்கு மட்டும் என்ன வாடை வருது?" என்று கேட்க, பாண்டியன் மறைமுகமாகச் செந்திலைத் திட்டிப் பேசுகிறார்.

பாண்டியன் சென்றவுடன், "சம்பளம் வந்ததும் பத்தாயிரத்துக்குப் பெர்ஃப்யூம் வாங்குவேன்," என்று செந்தில் சொல்ல, மீண்டும் வரும் பாண்டியன் அதைக் கேட்டு அவரைத் திட்டிவிட்டுச் செல்கிறார்.

சக்திவேலின் கோபம்

வீட்டிற்கு வந்த சக்திவேல், முத்துவேலிடம், "பொண்ணுடன் சேர்ந்தாச்சா?" என்று சத்தம் போடுகிறார். அதற்கு முத்துவேல், "விஷயம் தெரியாமல் பேசாதே," என்று திட்டிவிட்டுச் செல்கிறார். சக்திவேல், அப்பத்தா மற்றும் ராஜியின் அம்மாவிடம் விஷயத்தைச் சொல்ல, இருவரும் வருத்தமடைகின்றனர். "இவன் ஏன் இப்படிப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறான்?" என்று இருவரும் கவலைப்படுகின்றனர். ஆனால், திடீரென குமாரின் அம்மா, சக்திவேலுக்கு ஆதரவாகப் பேச, இருவரும் அதிர்ச்சியில் பார்க்கின்றனர்.

இப்படியாக, ராஜி - கதிர் உறவு ஒருபுறம் சந்தோஷமாகவும், மறுபுறம் சக்திவேலின் கோபத்தால் சிக்கலாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+