பாண்டியன் ஸ்டோர்ஸ்: விவாகரத்து வழக்கில் மயில் சொன்ன வார்த்தை! ஆடிப்போன சரவணன்.. அதிர்ச்சியில் பாண்டியன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial Promo) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் சரவணன் மற்றும் தங்கமயில் விவாகரத்து வழக்கு நடைபெறுகிறது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கமயில் தன்னுடைய முடிவை சொல்ல, அதை கேட்டு சரவணன் அதிர்ச்சியில் இருக்கிறார். மேலும் என்ன நடக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தங்கமயில் குடும்பத்தினர் செய்த ஏமாற்று வேலைகள் எல்லாம் தெரிந்ததும் சரவணன் தங்கமயில் வேண்டாம் என்று வீட்டை விட்டு துரத்தி விட்டார். ஆனால் தங்கமயில் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த உண்மை தெரிந்ததும் பாண்டியன் குடும்பத்தினர் எல்லோரும் தங்கமயிலை மீண்டும் வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
தங்கள் வீட்டு மூத்த வாரிசு நம்ம வீட்டில் வளர வேண்டும் என்பதுதான் பாண்டியன் மற்றும் கோமதியின் ஆசையாக இருக்கிறது. ஆனால் சரவணன் அவருடைய முன்னாள் காதலியை பார்த்த பிறகு இனி தன்னால் தங்கமயிலுடன் வாழவே முடியாது, தன்னுடைய குழந்தையை தான் கவனித்துக் கொள்வேன் என்றும் அஞ்சலியை இரண்டாவதாக கல்யாணம் பண்ணுவதற்கும் காத்திருக்கிறார்.
கோமதி கொடுத்த அட்வைஸ்
ஆனால் கோமதி சரவணனிடம் குழந்தையின் நல்லதுக்காக தங்கமயில் உடன் தான் வாழ வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் தங்கமயில் இதுவரைக்கும் தன்னுடைய வாழ்க்கைக்காக எல்லாரிடமும் கெஞ்சியாச்சு ஆனால் இனி நான் யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்னுடைய குழந்தையை நான் வேலை பார்த்து பார்த்துக்கொள்வேன் என்று சொல்லி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அப்டேட்
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாண்டியன் சரவணனிடம் உன்னுடைய குழந்தைக்காகவும், உன் வாழ்க்கைக்காகவும் இனி நீ நல்ல முடிவை எடு என்று சொல்லி அனுப்புகிறார். மறுபக்கத்தில் தங்கமயிலிடம் அவருடைய அம்மா வயிற்றில் குழந்தை வளருது அந்த குழந்தைக்காக நீ மீண்டும் அந்த வீட்டில் வாழ வேண்டும் என்று அட்வைஸ் பண்ணி விடுகின்றனர்.

அடுத்ததாக நீதிமன்றத்தில் நீதிபதி சரவணனிடம் நீங்க உங்க விவாகரத்து முடிவில் உறுதியாக இருக்கின்றீர்களா! என்று கேட்க, அதற்கு சரவணன் ஆமா என்னால தங்கமயில் கூட வாழ முடியாது எனக்கு விவாகரத்து வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் இதுவரைக்கும் விவாகரத்து தர முடியாது நான் சரவணனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த தங்கமயில் இப்பொழுது எனக்கும் விவாகரத்து கொடுத்துடுங்க இனி இவருடன் என்னால் வாழ முடியாது என்று சொல்கிறார்.

தங்கமயில் சொன்ன வார்த்தை
இதை கேட்டு சரவணன் உட்பட மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு வீட்டிற்கு வந்த தங்கமயிலை அவருடைய அம்மா திட்டுகிறார். அதற்கு தங்கமயில் என்னுடைய குழந்தையை நான் வேலை செஞ்சு வளர்த்துக்குவேன் இனி அவருடைய என்னால வாழவே முடியாது என்று தன்மானத்துடன் சொல்கிறார்.

எது எப்படியோ தன்னுடைய சுய கௌரவம் முக்கியம் என்று முதல் முறையாக தங்கமயில் இப்போது எடுத்திருக்கும் முடிவு நல்ல முடிவு தான். ஆனால் சரவணன் இனி அஞ்சலியை கல்யாணம் பண்ண போகிறாரா? அல்லது தங்கமயில் சரவணனை சேர்த்து வைக்க கோமதி குடும்பம் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications