ஐஸ்வர்யாவால் பேங்க் ஆபீஸரிடம் அவமானப்படும் கண்ணன்.. தவிக்கும் மூர்த்தி.. எதிர்பாராத திருப்பங்கள்
சென்னை: கண்ணன் கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டாததால் மீண்டும் ஆபிஸர் வீட்டிற்கு வந்து திட்டி விட்டு இரண்டு நாள் டைம் கொடுத்து விட்டு செல்கின்றனர்.
இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஐஸ்வர்யா கூலாக கண்ணனுக்கு புது பிரச்சனையை இழுத்து விடுகிறார்.
நெஞ்சு வலியில் தவிக்கும் தனம் மூர்த்தியிடம் அதை சொல்லாமல் மறைக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 22 ஆம் ஆரம்பத்தில் தனமும் மூர்த்தியும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் நெஞ்சு வலியால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் மூர்த்தியும் எழுந்து விடுகிறார். அப்போது தனம் என்ன ஆச்சு என்று கேட்க தனக்கு கெட்ட கனவு வந்தது பற்றி சொல்கிறார்.
கனவில் கண்ணனை நான்கு பேர் துரத்தி வருவதாகவும் கண்ணன் ஓடிக் கொண்டிருப்பதாகவும் அவன் அண்ணா என்று கத்துகிறான். அதனால் நான் திடுக்கிட்டு எழுந்து விட்டேன் என்று சொல்கிறார். மேலும் கண்ணன் எப்படி தனியா வாழ போறான்னே தெரியல என்று புலம்ப தனம் சமாதானப்படுத்துகிறார்.
அப்போதும் தனதிற்கு மீண்டும் நெஞ்சு வலி வர அதை மூர்த்தியிடம் சொல்லாமல் தனம் மறைத்து விடுகிறார். அடுத்த நாள் காலையில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கிரெடிட் கார்டு கட்டாததால் ஆபீஸர் வீட்டிற்கு வந்து விடுகின்றனர்.

பணத்தை வாங்கி வைத்து விட்டு உங்க பாட்டுக்கு புருஷனும் பொண்டாட்டியும் ஜாலியா இருக்கீங்களா? என அவமானப்படுத்தி திட்டி விட்டு பிறகு வியாழக்கிழமைக்குள்ள பணம் கட்டியாகணும் என்று சொல்ல கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். இருந்தாலும் ஐஸ்வர்யா வெள்ளிக்கிழமை வளைகாப்பு முடிந்த பிறகு கட்டிக்கலாம் எப்படியாவது இழுத்து அடித்து விடலாம் என்று கூலாக கூறுகிறார்.
அடுத்ததாக இவர்களை பார்க்க தனம் வருகிறார். அப்போது வளைகாப்பு கிராண்டாக பண்ண போறீங்க என்று சொல்றீங்க பணம் இருக்கா என்று கேட்க, கண்ணன் அதையெல்லாம் இருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சமாளிக்கிறார். தனம் சென்றதும் ஐஸ்வர்யாவின் சித்தி வட்டிக்கு வாங்கி ஐம்பதாயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுக்கிறார். பிறகு பணத்திற்கான வட்டியை சரியா கொடுக்கணும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications