பவுர்ணமி பாப்பா பெரிசாயிருச்சு... அழகாவும் இருக்குது...!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியல் தெலுங்கு டப்பிங் சீரியல்னாலும், ரொம்ப நல்லாருக்கு. எதனாலன்னு சொன்னா, பெண்களை துன்புறுத்தற எந்த சீரியலானாலும், பெண்கள் உச்சு கொட்டிக்கிட்டே பார்க்க ஆரம்பிச்சுருவாங்க.
பவுர்ணமி பொறந்தவுடனேதான் தான் உயிருக்கு உயிரா நேசிச்ச பொண்டாட்டி வாசுகி செத்து போயிட்டான்னு, பணக்காரர் சக்கரவர்த்திக்கு பவுர்ணமி மேல வெறுப்பு.
அது மட்டுமில்லை, அவளை கண்ணால பார்த்துட்டு போனா ஒரு பிஸினஸும் விளங்கறதில்லைன்னு ஒரு எண்ணம். அதனால, பவுர்ணமியை கண்ணால பார்க்க கூட விரும்பாதவர் சக்ரவர்த்தி.

அம்புட்டு பாசம்
அப்பன்காரன் இப்படி வெறுக்கறானே.. .பொங்கலுக்கு வேலைக்காரங்களுக்கு கூட புதுத்துணி எடுத்து தர்றான்.. ரெண்டாந்தாரத்து பொண்ணை நல்லா பார்த்துக்கறான். பவுர்ணமிக்கு ஒண்ணும் செய்யலை.. ஆனா, இந்த புள்ளைக்கு அப்பன் மேல எதுக்கு இம்புட்டு பாசம்னு குடும்பத்துல பேசிக்கிட்டே சீரியல் பார்க்கறாங்க.

போட்டோ எடுக்கறாளே
அடக்கடவுளே இந்த ரெண்டாந்தாரத்து புள்ள, பவுர்ணமி மேல இருக்க பாசத்துல அப்பா கூட உன்னை போட்டோ எடுக்கறேன்க்கான்னு தந்திரம் செய்து போட்டோ எடுக்குதே.. மாட்டிக்க போவுதோன்னு ஒருத்தங்க புலம்பல்.

கோலம்
வீட்டில் பொங்கல் பண்டிகைக்கு எல்லாருக்கும் புதுத்துணி எடுத்து குடுத்த சக்ரவர்த்தி, இறந்து போன தன் மனைவிக்கும் ஒரு சேலை எடுத்து படத்தின் முன் வைக்கறார்.கோலப்போட்டியை பார்த்து ஜட்ஜ் பண்ணிக்கிட்டு இருந்த சக்ரவர்த்தி கூட பவுர்ணமி தங்கச்சி பவானியும் சேர்ந்துக்கறா.

வாசுகி
ஒரு கோலத்தை பார்த்த சக்ரவர்த்தி இந்த கோலத்தை யார் போட்டது... என் வாசுகியை நினைவு படுத்துது. இந்த கோலத்தை போட்ட பொண்ணுக்கு வாசுகிக்கு எடுத்த புடவையை பரிசா தர போறேன்னு சொல்றார்.

போட்டது
பிடிச்ச கோலத்தை போட்டது பவுர்ணமின்னு தெரிஞ்சதும், நான் என் கையால தர மாட்டேன்னு சொல்லி, பெண்களுக்கு பெண்ணே பரிசு குடுத்தா நல்லாருக்கும்னு சொல்லி, தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு சென்றுவிடறார் சக்ரவர்த்தி. தயங்கி நிக்கறாங்க பாட்டி.

கணக்கா
மகாலட்சுமி கணக்கா இம்புட்டு அழகாக இருக்கு.. பெத்த பொண்ணை புடிக்காம ஒரு அப்பன் இருப்பானா... இவனுக்கு பணத்திமிரு.. ஒரு நாளைக்கு அந்த பொண்ணுதான் இவனை காப்பாத்த போறான்னு சீரியல் பார்க்கறவங்க பேசறது காதுல விழுதே.. என்ன செய்ய?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications