நிஜத்தில் அக்கா.. திரையில் அம்மா- 'அயோத்தி' படத்தின் வெற்றிக்கு இதுதான் ரகசியமா! - ப்ரீத்தி அஸ்ராணி ஓபன்
சென்னை: கடந்த 2023 ஆம் ஆண்டில், விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் அமோக வரவேற்பைப் பெற்ற படங்களில், இயக்குனர் மந்திர மூர்த்தியின் "அயோத்தி" திரைப்படம் நிச்சயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். ஒரு வட இந்தியக் குடும்பம் தமிழ்நாட்டிற்கு வரும்போது, அவர்களுக்கு ஏற்படும் அசாதாரணச் சூழலை, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, மனிதநேயத்துடன் அணுகும் இந்த உணர்வுப்பூர்வமான கதைக்களம்தான் படத்தின் வெற்றிக்குக் காரணம். இந்தப் படத்தில் நடித்திருந்த நடிகை ப்ரீத்தி அஸ்ராணி, இப்போது படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

யார் இந்த ப்ரீத்தி அஸ்ராணி
அயோத்தி திரைப்படத்தில் கிராமத்துப் பெரியவராக சசிகுமார் நடித்திருந்தார். இவருக்கு இணையாக, குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட இளம் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்திருந்தார். இவருடைய மென்மையான நடிப்பும், கண்களில் தெரியும் அப்பாவித்தனமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழ் சினிமாவுக்கு இவர் புதியவராக இருந்தாலும், அதற்கு முன்பே இவர் தெலுங்கில் சில குறும்படங்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் வட இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் மிக இயல்பாக அமைந்திருந்தது.
மனிதாபிமானத்தின் வெற்றி
அயோத்தி திரைப்படம், ஒரு எளிமையான கதை மூலம் மனித உணர்வுகளின் ஆழத்தை உணர்த்திய படம். இந்தப் படத்தில், சசிகுமார் ஒரு கிராமத்துத் தலைவனாக, எதிர்பாராத சோகத்தில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு எப்படித் துணையாக நிற்கிறார் என்பதே கதை. யஷ்பால் சர்மா அஞ்சு அஸ்ரானி, வினோத் எனப் பலரும் நடித்திருந்த இந்தப் படத்தின் வெற்றிக்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனிதாபிமானமே காரணம் என்று பல விமர்சகர்களும் கொண்டாடினார்கள். இந்தப் படம் வெளியானபோது, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
திரைக்கு பின்னால் ஒளிந்த ரகசியம்
இந்த நிலையில், நடிகை ப்ரீத்தி அஸ்ராணி, கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், அயோத்தி திரைப்படம் குறித்து ஒரு சுவாரசியமான ரகசியத்தைப் பகிர்ந்திருக்கிறார். திரையில் இயல்பாகத் தெரிந்த அந்தக் குடும்பத்தின் உறவு, உண்மையில் நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்திருக்கிறது!
அதாவது, படத்தில் ப்ரீத்தி அஸ்ராணிக்கு அம்மாவாக, ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அஞ்சு அஸ்ராணி, வேறு யாருமல்ல, அவர் ப்ரீத்தி அஸ்ராணியின் உண்மையான அக்கா தான்! இது பலருக்கும் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அஞ்சு அஸ்ராணிக்கு வயது குறைவுதான் என்றாலும், கதைக்காக அவரை வயதான தோற்றத்திற்குக் கொண்டுவர, படக்குழுவினர் புடவை கட்டி, கொண்டை போட்டு, ஒரு ஆண்டியைப் போலத் தோற்றம் அளிக்கும் வகையில் ஒப்பனை செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். நிஜத்தில் சகோதரிகளாக இருந்தவர்கள், திரையில் அம்மா - மகளாக நடித்ததுதான் இந்தக் கதாபாத்திரங்களின் இயல்புக்குப் பின்னால் இருந்த தனிச்சிறப்பு.
பிணத்திலும் வாழ்ந்த ஜானகி
அஞ்சு அஸ்ராணி ஏற்று நடித்த ஜானகி கதாபாத்திரம், சமூகத்தில் கணவரின் அடக்குமுறைக்குள் வாழும் பெண்களின் தவிப்பை உரக்கச் சொன்னது. பெண்களுக்கு பல துறைகளிலும் முன்னேற்றம் இருக்கும் இந்தக் காலத்திலும், பல குடும்பங்களில் பெண்களுக்கு ஆண்களின் அடிமையாக இருக்கும் நிலை தொடர்கிறது என்ற உண்மையைத்தான் ஜானகி கதாபாத்திரம் உணர்த்தியது.
கணவரின் அடக்குமுறைக்குள் வாழும் ஒரு பெண்ணின் தவிப்பை, அஞ்சு அஸ்ராணி மிக இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக, ஒரு கட்டத்தில் ஜானகி உயிரிழந்த பிறகு, பிணமாக நடித்து, பார்வையாளர்களின் நெஞ்சை உலுக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி அவர் வியக்க வைத்திருப்பார். இந்த உணர்வுபூர்வமான அத்தியாயம்தான் திரைக்கதையின் மையமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி திரைப்படம், அதன் கதைக்காக மட்டுமல்லாமல், நிஜத்தில் சகோதரிகளாக இருந்தவர்கள் திரையில் தாய்-மகளாக நடித்து, பார்வையாளர்களை உருக வைத்ததற்காகவும் என்றும் நினைவுகூரப்படும். ப்ரீத்தி அஸ்ராணியின் இந்தத் தகவல், அவரது ரசிகர்களிடம் இப்போது வைரலாகப் பரவி வருகிறது. இனிவரும் காலங்களில், ப்ரீத்தி அஸ்ராணி மேலும் பல நல்ல திரைப்படங்களில் நடிப்பார் என்று நம்புவோம்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications