என்னது பிரேமியும் வந்துட்டாங்களா.. செம விறுவிறுப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் என்ட்ரி ஆகிறார் புதிய நடிகை. அவரது கேரக்டர் என்ன கேரக்டராக இருக்கும் சொல்லுங்க பார்ப்போம் என்று கேட்டு கொக்கியைப் போட்டுள்ளார் ரச்சிதா மகாலட்சுமி.

சஸ்பென்ஸ்க்கு பஞ்சம் இல்லாமல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் புது கேரக்டர்களும் அறிமுகமாகி வருகின்றனர். பிரேமி வெங்கட் இந்த சீரியலில் அறிமுகமாகிறார்.

அவருடைய கேரக்டர் என்னதாக இருக்கும் என்று அந்த சீரியலில் மகா கேரக்டரில் நடிக்கும் ரச்சிதா புதிர் போட்டிருக்கிறார். ஏற்கனவே மாறனின் என்ட்ரி எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல் இருக்கும் போது அடுத்ததாக பிரேமி வெங்கட்டின் என்ட்ரியும் ரசிகர்களை குழப்பி வருகிறதே.

முத்துராசுவை சுட்டது யாரு..

முத்துராசுவை சுட்டது யாரு..

இதுவரைக்கும் முத்துராசுவை கொன்னது யாரு??என்று பெரிய முடிச்சுகளோடு ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்னும் அந்த முடிச்சுகள் அவிழாத நிலையில் புதுசு புதுசாக கேரக்டரை அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கிறது. அதுவும் அவர்கள் என்ன கேரக்டர் ஆக இருப்பார்கள் என்று ரசிகர்களால் கெஸ் பண்ண முடியாமல் புலம்பி வருகிறார்கள். இதுவும் இந்த சீரியலுக்கு ஒரு வெற்றிதான். இதனால்தான் இந்த சீரியல் தற்போது இந்த வாரத்தில் டிஆர்பியில் முதலிடத்தில் வந்திருக்கிறது. பிரோமோவை போட்டு தாக்கி ரசிகர்களை குழம்ப வைத்து அதில் மீன் பிடிப்பது தான் இந்த சீரியல் காரர்களின் டெக்னிக் போல. அதை சிறப்பாக இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் டீம் செய்து கொண்டிருக்கிறது.

வாராரு மாறன் வாராரு

வாராரு மாறன் வாராரு


ஏற்கனவே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முதல் பாகத்தை திடீரென்று முடித்துவிட்டு இரண்டாம் பாகத்தை தொடங்கியதும் ரசிகர்கள் இதில் ஒரு கேரக்டராக மட்டுமே செந்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், தலைப்பு மட்டும் நாம் இருவர் என்று வைத்திருக்கிறாரே என்னவாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது மாறனின் மாஸான என்ட்ரி பார்த்து பலரும் மிரண்டு போய் விட்டனர். அதுவும் கையில் துப்பாக்கியுடன் இவர் கோட்டு சூட்டுமாக இறங்கி வருவதை பார்த்து மாயனின் சகோதரனாக வருவாரா?? அல்லது போலீஸாக வருகிறாரா?? என்று தெரியாமல் இருக்கின்றனர். பல சீரியல்கள் தொடங்கும்போது விறுவிறுப்பாக தொடங்கி போகப்போக சுவாரஸ்யங்கள் இல்லாமல் ஆற்றில் போட்ட கல்லு போல மாறிவிடும். ஆனால் இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து இப்ப வரைக்கும் திரில்லிங்காகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

மாறனின் கையில் துப்பாக்கி

மாறனின் கையில் துப்பாக்கி

முத்துராசுவை கொலை செய்து ஒரு மாதத்திற்கு மேலே ஆனாலும் இன்னும் யார் தான் அவரை சுட்டார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு வாரமும் கவனத்தை ஒருவர் மீது வைத்து இவர்தான் இதை செய்திருப்பாரா என்று ரசிகர்களையும் நம்ப வைத்து வருகின்றனர். ஆனால் முடிவில் அது எல்லாம் பொசுக்கென்று போய்விடுகின்றது. இந்த மாதிரி தான் போன வாரத்தில் கூட காயத்ரி தான் முத்துராசுவை சொன்னாரா என்று பலர் நம்பும்படி பிரொமோவை போட்டோ தெறிக்க விட்டிருந்தனர். அடுத்ததாக இப்போ மாறனின் என்ட்ரி அவர் கையில் துப்பாக்கி வைத்து இருப்பதை பார்த்ததும் இவராக இருக்குமோ என்று சிலர் கூறிவருகின்றனர்.

புது கேரக்டரில் பிரேமி வெங்கட்

புது கேரக்டரில் பிரேமி வெங்கட்

தற்போது மீண்டும் ஒரு கேரக்டரை சீரியலில் அறிமுகமாகிறது என்று ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பல போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் பிரேமி வெங்கட் அறிமுகமாகிறார். ஆனால் அவர் இந்த சீரியலில் எந்த கேரக்டரில் வரப் போகிறார் என்பதை நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம் என்று ரச்சிதா கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் சும்மா கமெண்ட் களில் பட்டையை கிளப்பி வருகின்றனர். அதில் பாதிபேர் இது மாறனின் அம்மாவாக இருக்கும். மாயனுக்கும் இவர்தான் அம்மாவாக இருக்கும் என்றும் ஒரு சிலர் இவருடைய காஸ்ட்யூம் பார்க்கும்போது இவர் வக்கீலாக இருக்கும் போல என்றும் கூறிவருகின்றனர். இப்படியே தங்களுடைய அனுமானங்களை பலர் கூறி வந்தாலும் நமக்கும் என்ன கேரக்டராக இருக்கும் என்றுதான் தோன்றுகின்றது.

சஸ்பென்ஸ் தாங்கலையே

சஸ்பென்ஸ் தாங்கலையே

ஏற்கனவே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முதல் சீசனில் பிரேமி வெங்கட் நடித்திருந்தார். இப்போது இரண்டாவது பாகத்தில் இவர் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்று தெரியாவிட்டாலும் ரசிகர்கள் இவர் மாறனின் அம்மாவாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகின்றனர். அதுவும் போன சீசனில் இவர் மாயனின் மாமியாராக நடித்திருந்தார். ஆனால் தற்போது என்ன கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்று தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் யாராவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள் என்று கூறியிருக்கின்றனர். அப்படி பதில் சொல்லிவிட்டால் தான் சஸ்பென்ஸ் போய்விடுமே என்று தெரியாது போல... அதனால் நீங்கள் இந்த புது கேரக்டர் என்னவாக இருக்கப்போகிறது என்று நினைக்கிறீர்களோ உங்களுடைய சிந்தனைகளைக் கமெண்டுகளில் சிதற விடுங்கள்.

அழகு பிரேமி

அழகு பிரேமி

கெஸ் பண்ணுவது ஒருபுறம் இருக்கட்டும். பிரேமி வெங்கட்டும், ரச்சிதாவும் ரொம்ப க்யூட்டாக போஸ் கொடுத்து போட்டோஸ் போட்டுள்ளனர். பிரேமியின் அழகுச் சிரிப்பு ஒரு பக்கம், அவர் ரச்சிதாவின் அன்புப் பிடியில் சிக்குண்டு நிற்பது மறுபக்கம் என போட்டோஸே பட்டையைக் கிளப்புது. சூப்பரான நீல நிற சேலையில் மகாலட்சுமியின் பாசத்துக்குள் கட்டுண்டு கிடக்கிறார் பிரேமி. பல முக்கியமான சீரியல்களில் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளார் பிரேமி. அம்மா உள்ளிட்ட சூப்பரான கேரக்டர்களுக்கு கூப்பிடு பிரேமியை என்று சொல்லும் அளவுக்கு அனுபவம் வாய்ந்த நடிகையும் கூட.. நாம் இருவர் நமக்கு இருவரில் என்ன மாதிரி அசத்தப் போகிறாரோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+