விஜய் டிவியில் இனி இந்த நிகழ்ச்சி தானா? பிரியங்காவுக்கு நடந்த விசேஷம்.. சன் டிவிக்கு கிரேஸ்: பிரபலம்
சென்னை : சினிமா என்பது பவர்ஃபுல் மீடியா என்பதால், வரலாற்றை திரித்து சொல்வது, புராணங்களில் பொய்களை சொல்வது, ஒரு விஷயத்தை மறைக்க முயற்சிப்பது என அத்தனையையும் புகுத்த முயற்சி நடக்கிறது.. அதேபோல சேனல்களிலும் இதுதான் நடக்க போகிறது. விஜய் டிவி கைமாறினாலும்கூட, மக்களின் ஆதரவை பெற முடியாது என்றும், மக்களின் எதிர்பார்ப்பை, புதிதாக ஒளிபரப்பாகும் விஜய் டிவி நிகழ்ச்சிகளால் பூர்த்தி செய்ய முடியாது என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி கருத்து தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் உமாபதி, "விஜய் டிவியை விட்டு எல்லாரும் போவதாக சொல்கிறார்கள். ஆனால், விஜய் டிவியில் எல்லாருமே சம்பாதித்துவிட்டார்கள்.. செட்டில் ஆகிவிட்டார்கள்.. சேனல் மூடுவதற்குள் பிரியங்காவுக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டார்கள். பிறகென்ன? அனைத்து கடமையும் முடிந்துவிட்டது.
இப்போது விஜய் டிவி அம்பானி வாங்கியிருப்பது சாதாரண பிளான் கிடையாது.. இது யூதர்களின் பிளான் போல.. பாஜகவின் பிளான் ஒவ்வொன்றும், ஆர்எஸ்எஸ் துவங்கிய காலத்திலிருந்து 100 வருட பிளான்களாகும். ஒன்றை கபளீகரம் செய்ய வேண்டுமானால், அதற்குரிய திட்டங்களை வகுத்து, சைலண்டாக விஷ விதைகளை விதைத்துவிடுவார்கள்..

கரையான் அரிப்பு
கரையான் போல அரித்து அரித்து, கடைசியில் அந்த கரையானே காணாமல் போய்விடும். அந்த நிலைமைக்குதான் தமிழ்நாடு இப்போது வந்து கொண்டிருக்கிறது. அரசியலிலும் முட்டி மோதி கொண்டிருக்கிறார்கள்.. பொதுவாக பார்த்தால், 80 சதவீதம் மக்கள், தங்கள் சுயநலத்துக்காக வாழ்பவர்கள்.. மிச்சமுள்ள 20 சதவீதம் மனிதர்களே உலகை நிர்மாணிக்கக் கூடியவர்கள், உலகை வழிநடத்தி கொண்டிருப்பவர்கள்.. உலகில் அதிகாரம் செலுத்தக்கூடியவர்கள்.. இந்த 20 சதவீதம் மக்கள், பெரும்பான்மையாக உள்ள 80 சதவீதம் மக்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்.. களிமண்ணில் பிள்ளையாரும் பிடிக்கலாம், குரங்கு போலவும் பிடித்துகொள்ளலாம்.
விஜய் டிவிக்கு நெருக்கடி
இந்த 80 சதவீதம் மக்களை வைத்து எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்துதான் அரசியல் நடக்கிறது.. சினிமா உட்பட அனைத்து வகைகளிலும் மாற்றம் கொண்டுவந்தால்தான் தமிழகத்தை மாற்ற முடியும் என்று பாஜக நினைக்கிறது.. அதில் ஒருபகுதியாக, விஜய் டிவி வாங்கப்பட்டுள்ளது.. இதற்கான நெருக்கடிகள் தரப்பட்டு, இத்தனை காலம் பல வேலைகள் நடந்து, விஜய் டிவி விற்கப்பட்டுள்ளது, இப்போதுதான் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது..
சினிமா என்ற பவர்ஃபுல் மீடியா என்பதால், வரலாற்றை திரித்து சொல்வது, புராணங்களில் பொய்களை சொல்வது, ஒரு விஷயத்தை மறைக்க முயற்சிப்பது என அத்தனையையும் புகுத்த முயற்சி நடக்கிறது..
சோஷியல் மீடியாவில் தோல்வி
சோஷியல் மீடியாவை பாஜகவினர் கைப்பற்றி எவ்வளவோ முயற்சித்தும், பலனளிக்கவில்லை. அதனால், டிவிக்களை அபகரிக்க முயல்கிறார்கள்.. ஆனால், தமிழ்நாட்டில் டிவிக்களை திராவிடர்கள் , தமிழர்கள் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே 80 சதவீதம் செய்தி சேனல்கள் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டன..
சில டிவிக்களை காசு தந்து, விளம்பரம் தந்து, சாதி பெயர்களை சொல்லி, அந்த சேனல்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். இப்போது அடுத்ததாக, புரோகிராம் சேனலுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர். ஆனால், மிகப்பெரிய அறிவு இருந்தால்தான் புரோகிராம் சேனல்களை நடத்த முடியும். அந்தவகையில், புரோகிராம் சேனல்களில் சன் டிவி, விஜய் டிவி என டாப்பில் உள்ளது 2 சேனல்கள்தான்.
திராவிட சேனல்
திராவிட சேனலான சன் டிவியை யாரும் தொட முடியாது. விலைக்கு வாங்கவும் முடியாது.. எனவே, அதற்கு இணையாக விஜய் டிவியை ஆட்டைய போட நினைக்கிறது.. பிக்பாஸ் என்ற கேடுகெட்ட நிகழ்ச்சி பின்னாடியே மக்களை இழுத்து செல்வதை போல, மற்ற நிகழ்ச்சிகளையும் புதிதாக விஜய் டிவியில் ஒளிபரப்புவார்கள். அப்போது மதரீதியான , மூட பழக்கவழக்கங்களையும் புகுத்துவார்கள். அதுமட்டுமல்ல, அம்பானி, அதானிக்கு எதிராக எந்த செய்திகளையும் ஒளிபரப்ப முடியாது.
எனினும், தமிழ்நாட்டில் சங்கிகள் கதை வேலைக்காகாது.. சங்கிகள் எந்த ரூபத்தில் இருந்தாலும், தங்களது கொண்டையை மறக்க மாட்டார்கள். சங்கிகள் எங்கே இருந்தாலும், தமிழ்நாட்டுக்கேற்படி நிகழ்ச்சிகளை செய்ய முடியாது. பழையபடி யாருமே விஜய் டிவியை பார்க்க மாட்டார்கள்.. இதனால் எப்படியும் டாப்பில் போகப்போவது சன் டிவிதான்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications