வீட்டில் விசேஷம்! ரட்சிதாவுக்கு 2வது கல்யாணம்? கையில் மருதாணியுடன் பதிவு! வெளிப்படையாக சொல்லிட்டாரே
சென்னை: விஜய் தொலைக்காட்சியின் 'சரவணன் மீனாட்சி 2' சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைகளில் மருதாணி போட்டபடி ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "ரட்சிதா மறுமணம் பற்றி மறைமுகமாக பேசுகிறாரா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரட்சிதாவின் பயணம்
ரட்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்கு முன்பு கன்னட தொலைக்காட்சியில் சின்ன சின்ன கேரக்டரில் தொகுப்பாளினியாகவும் நடிகை ஆகவும் இருந்த ரட்சிதாவிற்கு பிரிவோம் சந்திப்போம் சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி 2'வில் நடித்தார். அந்த சீரியல் ரட்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தைக் கொடுத்தது.
திருமணம் மற்றும் பிரிவு 'பிரிவோம் சந்திப்போம்' தொடரில் கதாநாயகனாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகளை தினேஷ் எடுத்தாலும் ரட்சிதா அதற்கு ஒத்துவரவில்லை.
பிக்பாஸ்
இது ஒருபக்கம் இருக்க பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாண்ட அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார். அந்த நிகழ்ச்சியில் இவருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறியது. அப்போதும் தினேஷ் ரட்சிதாவிற்க்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தார். ரட்சிதா வெளியே வந்த பிறகு தன்னை புரிந்து கொண்டு தன்னோடு வாழ்வார் என்று நினைத்திருந்த தினேஷுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது ஆனாலும் ரட்சிதா டைட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்காக தினேஷ் பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது பல இடங்களில் ரட்சிதா பற்றி பெருமையாக பேசி இருந்தார். அதோடு இந்த டைட்டில் வெற்றி பெற்று மீண்டும் ரட்சிதாவுடன் வாழ்க்கை தொடங்குவதாகவும் கூறி இருந்தார். ஆனால் ரட்சிதா தினேஷ் எதிர்பார்ப்புக்கு மறுப்பை காட்டி வந்தார்.
ரட்சிதாவின் வைரல் புகைப்படம்
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகை ரச்சிதா 'ஃபயர்' என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். அப்படத்துக்குப் பிறகு 'எக்ஸ்ட்ரீம்' உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைகள் முழுவதும் மருதாணி போட்டபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "ரச்சிதா மறுமணம் பற்றி மறைமுகமாக பேசுகிறாரா?" என்று கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு ரசிகர், ரட்சிதாவிற்கு திருமணமா? என்று கேட்டிருக்கிறார். அதேபோல இன்னொரு ரசிகர் "இது ரட்சிதாவின் நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம். அதனால்தான் அந்த ஃபங்ஷனுக்காக ரட்சிதா கையில் மருதாணி போட்டிருக்கிறார்" என்று சொல்லி இருக்கிறார். அந்த ரசிகரின் கமெண்டுக்கு ரட்சிதா நீங்கள் சரியாக யூகித்து விட்டீர்கள் என்று பதில் கொடுத்திருக்கிறார். ரட்சிதாவின் இந்த புகைப்படம் ஒரு பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications