ராதிகா கேட்ட கேள்வி.. காலில் செருப்பை பார்த்த ரஜினி.. இப்படி ஒரு சம்பவமா? அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: நடிகை ராதிகா சரத்குமாரை பார்த்தாலே நடிகர் ரஜினிகாந்த் பயந்து போய் தன்னுடைய செருப்பை பார்ப்பாராம். அதற்கு காரணம் என்ன விஷயம் என்று ராதிகா பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இது இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
80ஸ் காலகட்டத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ராதிகா சரத்குமார் பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் ரஜினிகாந்துடன் நல்லவனுக்கு நல்லவன், மூன்று முகம், ஊர்காவலன், போக்கிரி ராஜா, ரங்கா, நன்றி மீண்டும் வருக போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

எவர்கிரீன் திரைப்படங்கள்
ஒரு சில நடிகர் நடிகைகளை பார்க்கும்போது இவர்களுடைய காம்பினேஷன் சூப்பராக இருக்கிறது என்று தோன்றும். அது போல தான் ராதிகா மற்றும் ரஜினிகாந்த் ஜோடி பொருத்தமும் ரசிகர்களுக்கு பேவரைட் வரிசையில் இடம் பிடித்தது தான். சிலர் ரஜினி மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்த படங்கள் பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் ரஜினிகாந்த் மற்றும் ஒரு ராதிகா நடித்த படங்கள் இயல்பான கதை அம்சம் கொண்டதாகவே இருக்கும்.
செருப்பு பிரச்சனை
அதுபோல ராதிகா, ரஜினிகாந்த் குறித்து ஒரு சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஒரு நாள் ரஜினிகாந்த் ஒரு பங்க்ஷனுக்கு வரும்போது ரப்பர் செருப்பு போட்டு கொண்டு வந்தாராம். அதை பார்த்ததும் ராதிகா அவரிடம் நீங்க பெரிய நடிகர் தானே சூப்பர் ஸ்டார்னு கூட எல்லாரும் சொல்றாங்களேன்னு சொல்ல, அதற்கு ரஜினிகாந்த் ஆமா.. என்று பதில் அளித்திருக்கிறார்.
ராதிகா கேட்ட கேள்வி
அதற்கு ராதிகா அப்போ நீங்க ஏன் இப்படி ஒரு செருப்பு போட்டுட்டு வரீங்க என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இடத்தில் ரஜினிகாந்த் சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு ராதிகாவை எங்கு பார்த்தாலும் முதலில் செருப்பை தான் ரஜினி பார்ப்பாராம். அந்த பயம் அவருக்கு எப்பவும் இருக்கு என்று ராதிகா கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் பதில்
அதோடு கோச்சடையான் திரைப்படத்தில் சூட்டிங்காக லண்டனுக்கு போயிருந்த போது ரஜினிகாந்த் ஷூ போட்டு இருக்கிறார். அது பற்றி ராதிகா கேட்டாராம். அதற்கு ரஜினிகாந்த் நீங்க வந்து இருக்கீங்க இல்ல அதான் கரெக்டா போட்டுட்டு வந்து இருக்கிறேன் என்று பதில் சொல்லி இருக்கிறார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த் ராதிகாவிற்கு மட்டும் பயப்பட்டு இருக்கிறாரே என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
சோசியல் மீடியாவிலும் ஆக்டிவ்
அதுபோல மனதில் பட்டதை டக் என்று பேசிவிடும் ராதிகாவிற்கு தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இதுபோல பயப்படுவார்களாம். ராதிகா சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். அதுபோல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய நண்பர்கள் நடிகர்களின் பிறந்தநாளுக்கு மறக்காமல் அவர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி கொண்டிருக்கிறார். அதிலும் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் திருமண நாள் போன்றவற்றிற்கும் வாழ்த்துக்கள் அனுப்பி விடுகிறார்.












Click it and Unblock the Notifications