ரஜினிகாந்த் இதனாலதான் சூப்பர் ஸ்டார்.. முரண்பட்ட சத்யராஜ்! கூலியில் டக்னு ரஜினி கட்டிப்பிடித்து! செம
சென்னை: ரஜினிகாந்த் - சத்யராஜ் இருவரும் கோபத்தை மறந்து ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. 38 ஆண்டுகளுக்கு பிறகு கூலி படத்தில் இரு துருவங்கள் இணைய உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், சத்யராஜ், ரஜினிகாந்த் இரு பிரபலங்களை பற்றி பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், "மூன்று முகம் படத்தில்தான் ரஜினிகாந்த், சத்யராஜ் இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்தனர்..

ஒரு போலீஸ்காரர் எப்படி இருக்க வேண்டும் என்றால், இந்த ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனைதான் பலரும் சொல்வார்கள்.. 30 நிமிடமே ரஜினி அந்த கேரக்டரில் வந்தாலும், மிரட்டி எடுத்திருப்பார்..
மூன்று முகம்
அந்த படத்தில் சத்யராஜுக்கு சிறிய வேடம் தரப்பட்டது. இதற்கு பிறகு பல படங்களில் நடிக்க துவங்கினார் சத்யராஜ்.. மீண்டும் மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடித்தார்.. மூன்று முகம் போல அல்லாது, இந்த படத்தில் ரஜினிகாந்த்துக்கு இணையான ரோல் சத்யராஜுக்கும் தரப்பட்டது..
அந்த படமும் மாஸ் வெற்றி பெற்றது.. ஆனால் அப்போது சில சர்ச்சைகள் நடந்தன... "நீங்க நடித்த பெரும்பாலான சீன்களை எடிட் செய்துட்டாங்க.. அப்படி எடிட் செய்ய சொன்னதே ரஜினி சார்தான்" என்ற தவறான தகவல்களை ரஜினிக்கு வேண்டப்படாதவர்கள், சத்யராஜ் காதில் போட்டுவிட்டார்கள். ..
முரண்பாடு சத்யராஜ்
இதுகுறித்து நேரடியாகவே ரஜினிகாந்த்திடம் கேட்டிருந்தால் பிரச்சனை வெடித்திருக்காது.. ஆனால், அந்த நேரத்தில் சத்யராஜ் இதை சற்று சிந்தித்திருந்தாலோ அல்லது ரஜினி சாரிடம் இதை பற்றி நேரடியாக கேட்டிருந்தாலோ பிரச்சனை வந்திருக்காது..
ஆனால், மற்றவர்கள் சொன்னதை சத்யராஜ் நம்பிவிட்டார் போலும்.. ரஜினி மீதான உடன்பாடு அவருக்கு லேசாக குறைந்துவிட்டது..
நீளம் அதிகமாக இருந்தால், அந்த காட்சிகளை வெட்ட வேண்டும் என்பதை முடிவு செய்வது டைரக்டர்களாகத்தான் இருக்கும்.. அப்படியிருக்கும்போது, தவறான செய்தி சத்யராஜுக்கு அன்று சென்று, அதை நம்பியும் விட்டார்.. இதனால் சில முரண்பாடுகள் ஏற்பட்டன.
அதற்கு பிறகுதான், சிவாஜி படத்தில், வில்லன் வேடத்துக்கு சத்யராஜை நடிக்க முடிவானது.. மிஸ்டர் பாரத் படத்தைவிட, இந்த படத்தில் சத்யராஜூக்கு இன்னும் கனமான கேரக்டர்.. சம்பளமும் ரஜினி சாருக்கு இணையாக பேசப்பட்டது.. ஆனாலும் ஏற்கனவே கிடைத்த அதிருப்தி காரணமாக, இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை..
தயங்கிய சத்யராஜ்
மேலும் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்து வருவதால், வில்லனாக நடிக்க சத்யராஜ் தயங்கியதாகவும் தெரிகிறது. அதற்கு பிறகு சில சர்ச்சைக்குரிய விஷயங்களை சத்யராஜ் பேசவும்தான், அங்கிருந்து சத்யராஜ் - ரஜினி இடையே முரண்பாடுகள் கிளம்பின. அந்த முரண்பாட்டை சத்யராஜ் தொடர்ந்தபடியே வந்தார்..
இப்போது 40 வருடங்களுக்கு பிறகு, கூலி படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைகிறார் சத்யராஜ்.. கூலி படத்தின் கதை சத்யராஜுக்கு பிடித்துபோய்விட்டதால் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார்..
மகிழ்ச்சி - இணக்கம்
நிலவிவந்த முரண்பாடு எதுவும் இல்லாமல், தன்னுடைய நண்பன் என்று சத்யராஜை ரஜினி கட்டிப்பிடித்து சொன்னார். அப்போதுதான், கண்கலங்காத குறையாக, இப்படியொரு கேரக்டரை மிஸ் பண்ணிட்டோமே? என்று சத்யராஜூம் மனம் வருந்தியதாக தெரிகிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிய ரஜினி, "இன்னமும் நீங்க இளமையாவே இருக்கீங்க.. விக் வைத்தால் சின்ன பையன் மாதிரியே இருக்கீங்க.. ஹெல்த் பார்த்துக்குங்க, எக்சர்ஸைஸ் பண்ணுங்க" என்றெல்லாம் சத்யராஜூக்கு அட்வைஸ் செய்தாராம் ரஜினி. இதைக்கேட்டதும் தனக்கு பழைய ஞாபகங்கள்தான் வந்துபோனதாகவும், இப்படியொரு மனிதனை தவறாக நினைத்துவிட்டோமே என்று வருத்தப்பட்டதாகவும், சத்யராஜ் சாரே நெகிழ்ந்து சொன்னார்" என்கிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications