என் திருமணம் குறித்து யாரும் தயவு செய்து அப்படி சொல்லாதீங்க! ரம்யா பாண்டியன் எமோஷனல்
சென்னை: என் திருமணம் குறித்து தயவு செய்து யாரும் அப்படி சொல்லாதீர்கள். நான் அப்படிப்பட்டவள் இல்லை என ரம்யா பாண்டியன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தமிழில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன். இவர் 2015 இல் வெளியான டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இவர் 2016ஆம் ஆண்டு ஜோக்கர் படத்திலும் நடித்திருந்தார்.

இந்த படம் சமூக பிரச்சினையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் அந்தளவுக்கு வெற்றி பெறவில்லை. குக் வித் கோமாளி மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
புகழ்
இவரை அவ்வப்போது புகழ் வம்பிழுப்பது, அதற்கு ரம்யா வெட்கப்படுவது என கலகலப்பாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி! அதைத் தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
பிக்பாஸ் சீசன் 4
பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. எனினும் அவர் சில படங்களில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்தார்.
ரம்யா பாண்டியன்
சூர்யா தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற படத்தில் ரம்யா பாண்டியன் நாயகியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சினிமாவில் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
ரம்யா மலையாள படங்கள்
ரம்யா மலையாள படங்களிலும் நடித்து வந்தார். ஸ்ரீ ஸ்ரீரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சியாளராக பணியாற்றி வரும் லோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே காதல் இருந்தது.
ரம்யாவுக்கு திருமணம்
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு கங்கை நதிக்கரையோரத்தில் உள்ள கோயிலில்தான் ரம்யாவுக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஏற்பட்ட ஒரு விஷயம் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது லோவல், ரம்யா பாண்டியனுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.
கல்லூரி முடிந்து
இந்த நிலையில்தான் ரம்யா பாண்டியன் அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் பள்ளியில் படிக்கும் போது கூட எனது செலவுகளை எல்லாம் நான்தான் பார்த்துக் கொண்டு வருகிறேன். கல்லூரி முடிந்த பிறகு வேலை செய்து சம்பாதித்துதான் வருகிறேன்.
செலவுகள்
சினிமாவிற்கு வந்த நடுவில் கொஞ்சம்தான் நான் எதுவும் செய்யவில்லை.ஆனால் இப்போது வரை எனது எல்லா செலவுகளையும் என் வீட்டுச் செலவுகளையும் சேர்த்து நான்தான் பார்த்துக் கொள்கிறேன். எனது திருமணத்திற்கு கூட நான் பாதி செலவு ஏற்றுக் கொண்டு செய்தேன்.
வரதட்சணை
இப்படிப்பட்ட சூழலில் வரதட்சணை என சொல்வதுதான் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. தங்களது வீட்டிற்கு ஒரு பெண்ணை அழைக்கும் போது அவருக்காக ஆடை, நகைகள் வாங்கிக் கொடுத்து அழைப்பது வழக்கமாம். அது போல்தான் எனக்கும் செய்தார்கள். அதனால்தான் அதையும் நான் வாங்கிக் கொண்டேன். இதை எப்படி வரதட்சணை என சொல்கிறீர்கள். அப்படி சொல்லாதீர்கள். இவ்வாறு ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். ரம்யா பாண்டியன், நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications