Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரவனில் ரவி மோகன், கெனிஷா அரட்டை.. மருமகனின் 3 படத்தின் சம்பள வவுச்சர்களும் சுஜாதா கிட்ட: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்கு வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஜெயம் ரவிதானே? நடிக்க பிடிக்கவில்லையானால், கிளம்பி சென்றிருக்கலாமே? கடைசியாக மாமியார் தயாரித்த தந்த 3 படங்களில் எவ்வளவு லாபம் கிடைத்தது என்பதை ஜெயம் ரவியே சொல்லட்டும்.. சம்பளம் தந்தார்களா? இல்லையா? என்பதையும் சொல்லட்டும்" என்கிறார் பயில்வான் ரங்கநாதன். அத்துடன் பேட்டி ஒன்றில் ஆர்த்திக்கு ஆதரவான கருத்துக்களையும் பேசியிருக்கிறார்.

Puthiya Sinthanai என்ற யூடியுப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "16 வருஷமாக முதுகில் குத்திவிட்டார்கள் என்கிறார் ஜெயம் ரவி.. 6 மாதம், 1 வருடம் என்றால் அவர் சொல்வதை நம்பலாம்.,.. 16 வருடம் என்றால் தனக்கு நடந்த திருமணத்திலிருந்தே கணக்கு போடுகிறார்.

Television Ravi Mohan Kenishaa

16 வருடம் எப்படி சாத்தியம்

சர்ச்சைக்குரிய மனைவியாக இருந்தால், 2 குழந்தைகள் எப்படி இன்று வளர்ந்து ஆளாகியிருப்பர்? 16 வருட சோகத்தை, தன்னுடைய அப்பா, அண்ணன்கிட்ட ஜெயம் ரவி பகிர்ந்து கொண்டாரா? குடும்ப பிரச்சனைக்கு ஊரார் எப்படி வந்து பஞ்சாயத்து செய்ய முடியும்?

தன்னுடைய சம்பளத்தைகூட பெற்றோரிடம் தர முடியவில்லை என்று ஜெயம் ரவி சொல்வது சுத்தப் பொய்.. 3 வருடமாகவே ஜெயம் ரவிக்கு மார்க்கெட் எதுவும் இல்லை.. அதனால் படங்களும் ஓடவில்லை.. அவரது கடைசி 3 தயாரித்தவர் சுஜாதா விஜயகுமார்.. எப்படியும் 300 கோடி ரூபாய் செலவு ஆகியிருக்கும். இந்த 3 படங்களும் லாபத்தை தரவில்லையென்றாலும், ஜெயம் ரவிக்கு மார்க்கெட் வேல்யூவுக்கு தகுந்தபடி சம்பளம் தரப்பட்டிருக்கிறது.. இதற்கான வவுச்சர் சுஜாதா விஜயகுமாரிடம் உள்ளது..

மாமியாரிடம் வவுச்சர்

எங்கு வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஜெயம் ரவிதானே? நடிக்க பிடிக்கவில்லையானால், கிளம்பி சென்றிருக்கலாமே? கடைசியாக மாமியார் தயாரித்து தந்த 3 படங்களில் எவ்வளவு லாபம் கிடைத்தது என்பதை ஜெயம் ரவியே சொல்லட்டும்.. சம்பளம் தந்தார்களா? இல்லையா? என்பதையும் சொல்லட்டும்..

தன்னிடமிருந்து எல்லாவற்றையும் அபகரித்து கொண்டார்கள் என்றால், வெளிநாட்டு காரில் கோவாவுக்கு கிளம்பி சென்றது யார்? காரில் கெனிஷாவை அழைத்து சென்றது யார்? இதை எந்த மனைவியாவது ஒத்துக் கொள்வார்களா? கேரவனில் கெனிஷாவுடன் இருந்ததாக குற்றச்சாட்டாக சொல்லும்போது, இதெல்லாம் ஒரு மனைவிக்கு கஷ்டமாக இருக்காதா?

ஜாலியாக செலவு

சினிமாக்காரராக இருந்து, உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால் எல்லா மனைவிகளும் ஆர்த்தி போல சந்தேகப்படத்தான் செய்வார்கள்.. இது மனைவிகளின் உரிமை. கோவாவுக்கு சென்று ஜாலியாக செலவு செய்ய தெரிகிறது.. கெனிஷாவுடன் சேர்ந்து தியான மண்டபம் கட்டப்போவதாக சொல்ல தெரிகிறது. ஆனால் , கையில் பணம் இல்லை என்று சொன்னால் எப்படி நம்புவது?

ஹீலர் என்றால், சிகிச்சை பெற்று முடிந்ததும் வீட்டுக்கு வரவேண்டியதுதானே? ஆனால், கெனிஷா வந்தபிறகுதான், பிரச்சனை செய்ய ஆரம்பித்தார் ஆர்த்தி.. இன்னொரு பெண்ணிடம் மோகம் கொண்டிருக்கும்போது, மனைவியை வெறுக்கத்தான் செய்வார்..

ஹீலர்கள் இப்படித்தான் இருப்பாங்களா

ஹீலர் என்று சொல்லக்கூடிய கெனிஷா ஆடை இப்படியா இருப்பது? ரவி மோகன் என்பவரின் துணைவி என்றால் இப்படியான ஆடைகளில் வருவதா? இதே கோலத்தில்தான் தியான மண்டபம் கட்ட போகிறார்களா? தியான குருக்கள் இப்படியா நடந்து கொள்வார்கள்? கெனிஷா ஒரு பாடகி மட்டுமல்ல, தியான குருவும் கூட.. அப்படியானால் தியான குரு வாழ்க்கைத் துணையாக மாற போகிறாரா?

இப்படி கெனிஷாவுடன் திரிவதை எந்த பெற்றோராவது ஏற்றுக் கொள்வார்களா? மனைவியை விட்டு வேறு பெண்ணுடன் சுற்றுவதற்கு ஆதரவு தருவார்களா? இந்த விஷயத்தில் எடிட்டர் மோகன் மவுனம் சாதிப்பதற்கு காரணம், மகன் மீது தவறு உள்ளதால்தான்.. நடிகர் பிரசாந்த் நிலைமை என்ன ஆனது? இன்னொரு பிரசாந்த் ஆகிறார் ஜெயம் ரவி.. சென்ட்டிமென்ட்ல் ஃபேன்ஸ். ஒரு நடிகர் விவாகரத்து செய்துவிட்டாலே அவர்களை ஒதுக்கிவிடுவர் ரசிகர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+